அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Tuesday, November 15, 2011

அதிரையில் SBI ATM விரைவில்...

சில மாதங்களுக்கு முன் புதிதாக உதயமாகி அதிரையில் சேவையை துவங்கி உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதிரை கிளை இன்னும் ஒரு சில மாதங்களில் தனது தானியங்கி பணம் வழங்கி(ATM) மையத்தை திறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து வங்கி மேலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டப்பொழுது, ATM மையத்தை செயல்படுத்துவதற்கான ஆனை(APPROVAL) இன்னும் மும்பையிலிருந்து வரவில்லை என்றும், அந்த ஆனைக்காக காத்திருப்பதாகவும் ஆனை வந்தவுடன் ATM மையத்தை உடனே செயல்படுத்துவதற்கான வேலைகளில் இறங்குவோம் என்றும் தெரிவித்தார்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா - அதிராம்பட்டினம் கிளை தற்பொழுது நம்-ஊரில் அதிக வணிக நிறுவனங்கள் இயங்கி வரும் பிரதான சாலையில்(தக்வா பள்ளி முனையிலிருந்து - கனரா பேங்க் வரையிலும்) கீழ்கண்ட முகவரியில் செயல் பட்டு வருகிறது. ATM மையமும் வங்கியின் அருகாமையில் அதே சாலையில் (புதுத்தெருவில்) செயல்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கியின் முழு விபரம். (இந்த தகவல் நெட் பேங்கிங் செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும்)
Bank : State Bank Of India
State : Tamilnadu
District : Thanjavur
Branch : Adirampattinam
IFSC Code : SBIN0014370 (5th character is zero)
Branch Code :014370 (Last 6 Characters of the IFSC Code)
City : Adirampattinam
Address :
30, New Street, Market Road,
Adirampattinam, Thanjavur Dist-614701
Contact No : 09445860469

SBI ATM மையம் செயல்பட துவங்கினால் அதிரையில் ATM மையங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயரும்.

அதிரையில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள ATM மையங்கள்.
1. AXIS BANK ATM.
2. CANARA BANK ATM.
3. INDIAN BANK ATM.
4. DHANALAKSHMI BANK ATM.

4 பின்னூட்டங்கள்:

வெள்ளை ரோஜா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

நமதூருக்கு எத்தனை A.T.M மெசின் வந்தாலும் நமக்கு ஓன்று லாபம் இல்லை.வங்கியில் வேலை செய்பவர்களுக்கு தான்.சுமை குறையும்.A.T.M ல் பணம் எடுக்க தெரியாதவர்கள் அதிரையில் அதிகமாக
இருக்கிறார்கள்.சில A.T.M.ல் கார்டை போட்டால் பணத்துக்கு பதிலாக ரிசிப்ட்டுதான் வந்து கொட்டுகிறது.
குறிப்பாக இந்தியன் வங்கியில்.பல மாதங்களாக.மேலாளரிடம் புகார் செய்தும் கண்டு கொள்ளாத அலட்சிய போக்கு.

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

(A.T.M.ல் கார்டை போட்டால் பணத்துக்கு பதிலாக ரிசிப்ட்டுதான் வந்து கொட்டுகிறது)

வெள்ளை ரோஜா சொல்வது போல்.... இதைப் போன்ற ATM மெசின் கொண்டுவரப்போகிரார்களோ என்னவோ...

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

பணப்புழக்கம் நமதூரில் அதிகரிதுள்ளதின் விளைவுதான் இதுபோன்ற தானியங்கியகளின் வரவுக்கு காரணம்..... இது ஒரு எச்சரிக்கையும் கூட சமீப காலங்களில் ATM திருட்டு மிகைதுள்ளது, இன்னொன்றையும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன் அனைத்து ATM மையத்திலும் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது கண்டிப்பாக பெண்கள் இது போன்ற மையங்களை விட்டு தவிர்ந்து இருத்தல் நன்மை பயக்கும், காரணம் அந்நியர்கள் தான் இது போன்ற கமேரக்களை கண்காணிப்பார்கள் - மிகுந்த எச்சரிக்கை தேவை

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

இஸ்லாமிய வங்கி அமைய இந்திய அரசு அனுமதி கொடுத்துள்ளதா?அது பற்றி தெரிந்தவர்கள் செய்திகள் வெளியிடுங்கள்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.