அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Thursday, November 3, 2011

அதிரை-பிபிசி நேரலையில் 16,17 வார்டுகள் தேர்தல் முடிவு புறக்கனிக்கப்பட்டதா?

அன்பான அதிரைபிபிசி வாசகர்களே !!!
அஸ்ஸலாமு அலைக்கும்,
கடந்த ஒரு மாதமாக அதிரை போரூராட்சி தேர்தல் தொடர்பான செய்திகள், காணொளிகளை என்று பல சிரமத்துக்கு மத்தியில் உடனுக்குடன் உலகெங்குமுள்ள வாசகர்களுக்கு பகிர்ந்தளித்தோம். அல்ஹம்துலில்லாஹ்!.
தேர்தல் அமைதியாக முடிவடைந்து முடிவுகளும் வெளிவந்து வெற்றிபெற்றவர்கள் யார் யார் என்ற விபரங்களும் தெரியவந்ததும் எல்லோரும் நிம்மதி பெருமூச்சுவிட்டிருக்கும் இவ்வேலையில், நம் அதிரைபிபிசி செயல்பாடுகள் தொடர்பாக சில குற்றச்சாட்டுக்கள் அலைப்பேசி மூலமும், மின்னஞ்சல்கள் மூலமும் மற்றும் பின்னூட்டங்கள் மூலமும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு விளக்கம் தரும்விதமாகவே இந்த பதிவு
தேர்தல் நாள் அன்று 16,17 வார்டுகளின் வெற்றி செய்திகளை தெரிவிக்காமல் இருட்டடிப்பு செய்தது அதிரைபிபிசி என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது .
முதலில் தேர்தல் முடிவு அன்று நேரலையின் இந்த ஒழி பேழையை கேட்கவும் 



(இந்த பதிவு தேர்தல் முடிந்த மறுநாளே போடுவதாக இருந்தது இந்த ஒலிப் பேழையை கோப்ப்லில் இருந்து மீட்டெடுக்க தாமதம் ஏற்பட்டுவிட்டது .)
விளக்கம்: அதிரைபிபிசி குழுவினர் எந்த ஒரு தனி அமைப்பின் மூலமோ, நிறுவனத்தின் மூலமோ நிதி பெற்று இந்த செய்தி ஊடகத்தை நடத்திவரவில்லை என்பது எல்லோரும் அறிந்திருப்பீர்கள். ஊரில் சுய தொழில் செய்துவரும் தன்னார்வ சகோதரர்களின் சேவை மனப்பான்மை உழைப்புடன் ஊர் செய்திகளை உடனுக்குடன் வெளிநாடுவாழ் மக்களுக்கு பகிர்ந்தளித்து வருகிறார்கள், இதன்மூலம் இவர்களுக்கு எந்த ஒரு வருமானமும் இல்லை என்பது தான் உண்மை.
முன்னனி பத்திரிக்கைக்கு தரத்துக்கு இணையாக அதிரைபிபிசியின் செயல்பாடுகள் எங்கள் வளர்ச்சியை நீங்கள் கடந்த 4 மாதமாக பார்த்து வருவீர்கள். உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அனைத்து மக்களுக்கும் 21.10.2011 அன்று நேரலை செய்யும் அறிவிப்பை அதிரைபிபிசி செய்தது. கால அளவு குறைந்தே இருந்தும் தொழில் நுட்பகுழுவில் உள்ளவர்கள் பல சிரமத்துக்கு மத்தியில், 20ம்தேதி இரவு முழுக்க உறங்காமல் வேலை செய்து, மறு நாள் அதிகாலை சுப்ஹு தொழுகைக்கு பிறகு தங்களின் நேரலையை ஆரம்பித்தார்கள். இரண்டு குழுவாக இருந்து செயல்பாட்டர்கள்.
வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து ஒரு குழுவும் மற்றும் அதிரையிலிருந்து கட்டுப்பாட்டு அறையில் (Control room) ஒரு குழுவும் என்று தங்களின் பணிகளை செய்தார்கள்.
பேராவூரினி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அலைப்பேசி எடுத்துச் சொல்ல அனுமதி இல்லை. வாக்கு எண்ணிக்கை மையம் மீடியா பகுதியில் இருந்த அதிரைபிபிசி சகோதரர்கள், தடகள வீரர்கள் போல் மீடியா பகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கும் 100 மிட்டர்கள் அங்குமிங்கும் ஓடி ஓடி ஒவ்வொரு வார்டு வெற்றி செய்திகள் சேகரித்து உடனுக்கு உடன் செய்திகளை ஓலி செய்தியாக நேரலையில் அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். அதிரைபிபிசி நேரலையில் அறிவித்த முடிவுகள் அனைத்து செய்திகளும் செவிவழி கேட்ட செய்திகளே தவிர அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பாக இல்லை. வேட்பாளார் வெற்றியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓட்டு எண்ணிக்கை முழுமையாக முடிவு பெற்றவுடன் தான் அறிவிக்கப்படும் என்பது எல்லோரும் அறிந்ததே.
இதனிடையே 15 வார்டுகளின் வெற்றி அறிவிப்பு வெளிவந்த நிலையில், தலைவர் வேட்பாளரின் முன்னனி மற்றும் வெற்றி செய்தி வரத்தொடங்கியவுடன் ஒரே பரபரப்பு மீடியா பகுதியிலும், மீதியுள்ள வார்டுகளின் முடிவுகள் எங்களுக்கு கிடைப்பதில் தாமதம் நீடித்தது, காரணம் செய்தியை சேகரிக்க சென்றவர்களை அதிரை கட்டுப்பாட்டு அறையிலிருந்து (கண்ரோல் ரூமிலிருந்து) தொடர்பு கொள்ள முடியவில்லை, இதுவே தாமதமாக மற்ற வார்டு செய்திகளை அறிவிக்க நேர்ந்தது. 16 முதல் 21 வார்டு முடிவுகள் நேரலையில் ஒலிச்செய்தியாக மீண்டும் மீண்டும் அறிவிக்கப்பட்டது.
சகோதரர் S.H. அஸ்லம் முன்னனி என்ற ஒலிச்செய்தி வெளியானதும், இச்செய்தியை கேள்விப்பட்ட சில சகோதரர்களால் பின்னூட்டங்கள் மிக மிக அநாகரீகமாக பதியப்பட்டு வெளிவர தொடங்கியது, LIVE CHATTINGல் அதிரை கட்டுபாட்டு அறையிலிருந்து (கண்ட்ரோல் ரூமிலிருந்து) பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்பட்டு வெளியிடப்பட்டது. இது எங்கள் வேலை பளுவை அதிகரித்து, வார்டு முடிவுகளை உடனே அறிவிக்க முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.
வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து (முஹம்மது மற்றும் நண்பர்கள்) ஓடி ஒடி செய்திகள் சேகர்தது, கட்டுப்பாட்டு அறையை (கண்ட்ரோல் ரூமை) தொடர்பு கொண்டு செய்திகள் அளித்தது, கட்டுப்பாட்டு அறையில் (கண்ட்ரோல் ரூமில்) தனி நபராக (அபு உமர்) இருந்து கணினியில் நேரலை, அலைப்பேசியில் தொடர்பு, அலைப்பேசி காண்பிரன்ஸ், பின்னூட்டங்களை மட்டுறுத்துவது, பின்னூட்டங்கள் பதிவது என்று குறுகிய நேரத்தில் எங்களின் பணியை முடிந்தவரை அனைத்து மக்களுக்கு செய்தி சென்றடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் செய்தோமே தவிர வேறு எந்த சுயவிருப்போ / வெறுப்போ அல்லது பாகுபாடோ ஏதுவுமில்லை என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறோம். அல்லாஹ் நன்கறிவான்.

அதுமட்டும் இன்றி அன்று வெற்றி பெற்ற ஒவ்வொரு வேட்பாளரும் நமது நேரலை செய்யப்பட்ட இடத்திற்கு வந்து பேசினார் . 16 மற்றும் 17 வார்டுகளில் போட்டியிட்ட வேட்பாளர்களின் சம்பந்தப்பட்ட யாரையும் அங்கு காண முடியவில்லை .
வாக்கு எண்ணிக்கை நடந்த அன்று ஜும்மாவுடைய நேரம் நெருங்கியதால், நேரலையையும் பின்னூட்ட வசதியையும் நிறுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. உணவு, உரக்கமின்றி தேர்தல் நேரலை நிகழ்வை மிகச்சிறப்பாக செய்து காட்டியுள்ளோம். ஒரு சிலருக்கு பாராட்ட மனமில்லாவிட்டாலும், எங்களின் இந்த சேவையை குறைக்கூறி கொச்சை படுத்துவது வேதனையே!. ஒவ்வொருவரின் உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ்வே அறிவான். அவனிடமே விட்டுவிடுகிறோம்.
நாங்களும் மனிதர்கள் தானே, இந்த நேரலைக்காக உறக்கமின்றி வேலை செய்ததால் இரண்டு நாள் ஒய்வு என்று பதிவு வெளியிட்டோமே தவிற. சில தகவல்களை மறைத்தோம் என்று சொல்லுவது தவறான தகவல் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

- அதிரைBBC

12 பின்னூட்டங்கள்:

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

விமர்சிக்கபடாத ஊடகம் உலகில் உண்டோ ? நல்ல விமர்சனம் வலு சேர்க்கும் ! தீய நோக்கில் பதியப்படும் விமர்சனம் நம்மை பக்குவப்படுத்தும் ! விமர்சனங்கள் நம்மை திறம்பட செயல்படுவதற்கு வழிவகுக்கும். நெஞ்சம் நிமிர்ந்து பயணியுங்கள் உலகம் உங்கள் கையில் :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தேர்தல் முடிவு வெளியான நாள் அன்று ஏற்பட்ட அனைத்து சிரமங்களையும் நன்கறிவேன் !

விட்ட / தொட்ட குறைகளுக்கு விளக்கம் - வெல்டன் adiraiBBC !

இவைகளே போதும் எனலாம்.

வேறு விஷயங்களில் கவனம் செலுத்தலாமே..

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Dear BBC
You have to keep always in your mind.

"Your dream is big enough...
the fact is does't matter..."

All the best.

love THUKLAL NEWS

adiraiwestnews said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

// 16 மற்றும் 17 வார்டுகளில் போட்டியிட்ட வேட்பாளர்களின் சம்பந்தப்பட்ட யாரையும் அங்கு காண முடியவில்லை//

அடடா என்னா  பொய்........
பேராவூரினி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அருகில் நான்கில் ஒரு பகுதி மேலத்தெருவை சேர்ந்த 16 மற்றும் 17 வார்டுகளில் போட்டியிட்ட வேட்பாளர்களின் சம்பந்தப்பட்டவர்கள் தான் நின்றார்கள் இதை அதிரைBBC நன்கு அறிவார்கள்.

முகம்மது said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

// 16 மற்றும் 17 வார்டுகளில் போட்டியிட்ட வேட்பாளர்களின் சம்பந்தப்பட்ட யாரையும் அங்கு காண முடியவில்லை//

அடடா என்னா பொய்........
பேராவூரினி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அருகில் நான்கில் ஒரு பகுதி மேலத்தெருவை சேர்ந்த 16 மற்றும் 17 வார்டுகளில் போட்டியிட்ட வேட்பாளர்களின் சம்பந்தப்பட்டவர்கள் தான் நின்றார்கள் இதை அதிரைBBC நன்கு அறிவார்கள்.//

சகோ .அவர்களுக்கு அப்படி நின்ற சகோதர்களிடத்தில் ஜமால் என்ற சகோதரர் பிபிசிக்கு பேட்டி தருவதற்கு அழைத்தபோது செக்கடி மோட்டில் ஆட்டோ ஓட்டும் என்னுடை நண்பர் சாதிக் அவர்கள் இப்பொழுது பேட்டி எதுவும் வேண்டாம் என்று கூறினார். இதை சாதிக் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

முகம்மது

££Plus££ said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

GREAT JOB INDEED.. ADIRAI BBC DNT HURT UR SELF KEEP GOIN ON

Shameed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

16 மற்றும் 17 வது வார்டு செய்திகள் அதிரை bbcயால் புறக்கணிக்பட்டதால்அந்த செய்தி வெளியோ தெரியமல போய் விட்டது. ஏதாவது ஒரு விதத்தில் குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காக குற்றம் சுமத்துகின்றார்கள்.

Shameed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உங்களின் தமிழ் தட்டச்சில் தமிழ் டைப் செய்து காபி செய்ய முடியவில்லையோ ஏன்

adiraibbc said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@Shameed

//உங்களின் தமிழ் தட்டச்சில் தமிழ் டைப் செய்து காபி செய்ய முடியவில்லையோ ஏன்//

இப்பொழுது தமிழ் தட்டச்சு செய்து காபி / பேஸ்ட் செய்யலாம். (Now you can copy & paste Tamil Texts using Keyboard shortcuts (Ctrl + C / V ) or select and copy / paste by using mouse.)

Shameed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//(Now you can copy & paste Tamil Texts using Keyboard shortcuts (Ctrl + C / V ) or select and copy / paste by using mouse.)//

THANKS

adiraiwestnews said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Mr.Shameed should know, i'm not going to ask any questions or impose any false statement against adiraibbc.

in their article, they said that there is no 16 and 17 wards people in peravurani for an interview not for a result of 16 and 17.
i did not ask them why did not publish 16 and 17 wards result.

Shameed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Mr / Ms / Mrs. Adiraiwestnews,

Please read my comment word by word with cool mind… !

I state that content of article only not for your comment !

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.