அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Thursday, November 24, 2011

மன்னை எக்ஸ்பிரஸ் - BUS LINK

சென்ற மாதம் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில், சென்னையிலிருந்து மன்னார்குடிக்கு திரு T.R பாலு அவர்களின் முயற்சியால் துவங்கப்பட்டது அறிந்த விஷயமே. இந்த வழிதடத்தை அதிரை மக்கள் வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர்.  

அதிரையிலிருந்து மன்னார்குடிக்கு 40கி மீ தூரம், சென்னையிலிருந்து இரயில் வருகை மற்றும் புறப்பாடும்  நேரம் வசதியாக உள்ளதால்  பிரயோஜமனாக உள்ளது.

இதில்தான் ஒரு சிக்கலே இருக்கிறது மன்னார்குடிக்கும் அதிரைக்கும் நேரடி பஸ் போக்குரவரத்து வசதி இல்லாததால், பெரும்பாலோர் கார் அல்லது வேன் போன்ற வாகனங்களில் மன்னர்குடி செல்ல வேண்டியுள்ளது. இதற்காக அதிக செலவுகள் செய்ய வேண்டியுள்ளது.

அதிரையிலிருந்து மன்னார்குடிக்கு நேரடி பஸ் போக்குரவத்து வசதி கோரி ஒரு மனு அனுப்பியிருந்தோம். அதற்கு ஆவன செய்வதாக உறுதி சொல்லிருக்கின்றனர். இவ்விஷயமாக போக்குவரத்துத்துறை அமைச்சரையும் சந்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Dy. Transport Commissioner, Thanjavur அவர்களிடமிருந்து வரப்பெற்ற கடித நகல் உங்கள் பார்வைக்கு. 


இதற்க்கான அனைத்து முயற்ச்சிகளையும் எடுத்து வரும் சகோதரர் அப்துல் ரஜாக் (chasecom) அவர்களுக்கு அதிரைபிபிசி.com சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

13 பின்னூட்டங்கள்:

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

இந்த முயற்சி தொடரட்டும்

சென்னையிலிருந்து ஊருக்கு வர மூன்று தடவை நினைத்தால் ஒரு தடவைதான் வரமுடிகிறது.

இந்த முயற்ச்சியில் ஒரு தடவையாவது வந்துவிடலாம்.

டியர் மிஸ்டர் சேஸ்காம்.... நாங்கள் எத்தனையோ முயர்ச்சிக்கிடையில் நம்ம தலைவர்கல ஆர்வமூட்டுவதர்க்கு நிறைய பாராட்டுதல் பண்ணிட்டோம். கொஞ்சம் கூடுதலா முயற்சி பண்ணி பாருங்களேன்.
உங்களுக்கு கோடி புண்ணியம்.

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

அஸ்ஸலாமு அலைக்கும்
பொது நலனில் அக்கறை கொண்டு முயற்சி செய்யும் சகோதரர்களுக்கு பாராட்டுக்கள். அனைத்து கட்சிகளும், அமைப்புக்களும் இதுபோல் ஒருங்கிணைந்து பொது விசயத்துக்கு பாடுபட்டால் பலன் விரைவில் கிடைக்க வாய்ப்பு அதிகம்- செய்யவர்கள? மக்களுக்கு நலன் கிடைக்க வேண்டும் என நினைப்பதை விட பெயர் வாங்க வேண்டும் என நினைப்பதனால் தான் ஒருங்கிணைந்து போராட கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் முன் வருவதில்லை.- இதனால் பலன் அடைய முடியாமல் பாதிக்கப்படுவது பொது மக்கள்தான்.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

அதிரைக்கு என்றைக்கு தான் இந்த இரயில் வரப்போகுதோ....? வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்த விஷயத்தை கையிலெடுத்து... தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினால் நமதூருக்கு விடிவு பிறக்க வாய்ப்புண்டு சிந்திக்குமா நம் மக்கள்.... அரசாங்கத்திற்கு எந்த மொழியில் சொன்னால் புரியுமோ அந்த வழியை கையிலெடுத்தால் தான் வெற்றி கிடைக்கும் இதற்காக ஒரு குழு அமைத்து வீரியமாக செயல்பட முன் வருவார்களா ? இப்படி ஒரு முயற்சி மேற்கொண்டால் இன்ஷா அல்லாஹ் என் போன்றோர் பங்களிப்பு நிச்சயம் இருக்கும்...

அதிரை பி பி சிக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் தயவுகூர்ந்து இந்த விஷயத்தை கையிலெடுத்து மக்களிடையே போராட்ட உணர்வை தூண்ட முயற்ச்சியுங்கள் :)

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

அதிரை பி பி சிக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் தயவுகூர்ந்து இந்த விஷயத்தை கையிலெடுத்து மக்களிடையே போராட்ட உணர்வை தூண்ட முயற்ச்சியுங்கள் :)

I need response from ADIRAI BBC for above stated question ?

adiraibbc said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 5

//அதிரை பி பி சிக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் தயவுகூர்ந்து இந்த விஷயத்தை கையிலெடுத்து மக்களிடையே போராட்ட உணர்வை தூண்ட முயற்ச்சியுங்கள் :)//

மக்களுக்காக, மக்களுடன் ஒன்று கூடி செயல் படுவோம் இன்ஷாஅல்லாஹ்..!

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 6

மீடியாக்களின் கவனத்துக்கு கொண்டு போக வேண்டும்.

noor said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 7

வரும் ஜனவரி 2011 லிருந்து நமதூரில் அகல ரயில் பாதை அமைக்கும் திட்டம் ஆரம்பமாகிறது. பொருத்தது பொருத்துவிட்டோம் இன்னும் 2 (அதாவது 2014 வரை வேலை நடைபெறும்) வருடம் பொருப்போம்.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 8

ஒழுங்காக சம்பத்தப்பட்ட அதிகாரிகள் கையொப்பமிட்ட அரசாணையை காட்டாத வரை நமதூரிங் அகல ரயில் பாதை ஒரு எட்டாக்கனி தான்..... போராட்டம் அவசியம் என்பதை உணருங்கள்...... வடநாட்டில் ஒரு கிராமத்தில் குஜ்ஜார் இனத்தவர்களால் நடைபெற்ற போராட்டத்தினால் நாடாளுமன்றமே குலுங்கியதை இங்கே நினைவு கூற விரும்புகிறேன் பார்க்க http://www.presstv.ir/detail/158051.html. வலிமையான போராட்ட முறை தான் நமக்கு நன்மை பயக்கும்.... அரசியல்வாதிகளை திக்குமுக்காட வைக்கும் வகையில் நம் போராட்டம் அமைய வேண்டும்.

"வெள்ளையனை வெளியேற்றிய கொள்ளையர்களே...... வெள்ளையன் காலத்தில் எங்களுக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் கூட தற்போது இல்லையா..... " இது போன்ற கோசங்களை இநதியா முழுவதும் கொண்டு சேருங்கள் நம் நோக்கம் வெற்றி பெரும்.

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 9

இனிமேல் போராட்டம் நடத்தலாம்......

இஞ்சுருங்கே....

சென்னையிலிருந்து மாயாவரம் வரை அகல இரயில் பாதை போட்ட அரசாங்கத்துக்கு காரைக்குடி வரை போடாத் தெரியாதா என்ன.... அது வேற ஒன்னும் இல்ல. காரைக்குடியிலிருந்து மாயாவரம்வரை பணியில் இருக்கும் TT கொடுத்த புகார்தானாம். யாருமே முன்பதிவு இல்லாம வெறும் லோக்கல் டிக்கெட் மட்டும் எடுத்து பெர்த்துக்கு மாத்தச் சொல்லி மாயவரம் வரை கொடுக்குற டார்ச்ர்தானாம்.

(வேற என்னங்கா பண்ணமுடியும்.... நாங்க என்ன சென்னையிலே அரசாங்க உத்தியோகமா பார்க்குறோம். தீபாவளி, பொங்கல், நோம்பு பெருநா, ஹஜ்ஜுப் பெருனான்னு ப்ளான் பண்ணி ஊருக்கு வந்துட்டு போக. யான்கா.... நாங்க கல்யானத்தேயே (ஆயிரங்காலத்து பயிறு - மறுமை வரை செல்லும்) அசர் தொழுக முடிஞ்சி முடிவெடுத்து மக்ரிபுக்குள்ள முடிச்சுர்றோம்..... மாப்புளைக்கே தெரியாது பைத்து சொல்லும்போது எது பொண்டாட்டிவீடுன்னு.???.... (நம்ம இன்கம் டாக்க்ஸ் ஆபீசெர் போல - எந்த வீட்டுல சோதனை பண்ண போறோம்ன்னு).

சும்மா யான்க எங்கள தேவ இல்லாம வெறுப்பேத்திக்கிட்டு.....

வேணும்னா ஒன்னு செய்ங்க..... நம்மூருக்கு கூடுதலா ரெண்டு பொட்டி சேர்த்து போட சொல்லுங்க........

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 10

துக்ளக் ஐயா... தாங்கள் கூறியது போன்று TT கொடுத்த புகாரின் பெயரில் அல்ல நம் வழித்தட காலதாமதத்திற்கு.... குறைவான வருவாய் என்பது தான்....இந்த காரணம் ஒரு பொருந்தா காரணம் ஏன் என்றால் அந்நிய செலாவணியில் நமதூரின் பங்கு "இன்றியமையாதது... "Balanced Diversification of Wealth" என்ற கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் தான் எந்த ஒரு ஜனநாயக நாடும் இயங்கும் என்பது ஊரறிந்த உண்மை... இதன் அடைப்படையில் நமதூருக்கு இளைக்கபடுவது அநீதி இதனை அரசாங்கத்திற்கு உணர்த்த போராட்ட களம் தான் உதவும் என்பது என்ன கருத்தல்ல கடந்த கால வரலாற்று உண்மை.

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 11

இரயில் வழி தாமதத்திற்கு நெறைய காரணங்கள் உள்ளன.
இது ஒரு அநீதி என்று நாம் முழுமையாக சொல்லமுடியாது.

இது குறைவான வருவாயில், நிறைய சிலவுகள் என்பதைவிட.,
குறைந்த வழி போக்குவரத்துக்கு உள்ள அதிக தூரத்திற்கு, நிறைய பாலங்கள். (வேளையிலேயே அதிக பாரங்கள் உள்ள, அதிக பாலம்)

பாலங்கள் அதிகமாக இருப்பதால் இரயில் இல்லாத பயணம் ரொம்பவும் "பா(ல)ரம்"

மற்றபடி "துக்ளக் நியூஸ் குழுமம்"த்தின் முந்தய பின்னூட்டம் ஒரு ஜனரஞ்சகமே.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 12

இதனை அநீதியன்றி வேறன்ன சொல்ல்வீர்...? வெள்ளையனுக்கு தெரிந்த நல்லவைகள் கூட கொள்ளையர்களுக்கு தெரியவில்லையே...? வட மாநிங்களில் எத்தனையோ வருவாய் இல்லாத ஊர்களுக்கு செல்லும் இந்த அகல ரயில் பாதை ஏன் நமக்கு மட்டும் எட்டா கனியாக விளங்குகிறது ..? காரணம் அங்குள்ள போராட்ட குணம் தான்... எத்தனை உதாரணங்கள் வேண்டும் ...?

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 13

வாப்பமார்வலா...தப்பா நெனைக்காதீங்க...
நம்மூர்ல நிறைய குளம் நெறஞ்சி கெடக்குது...
இப்போதைக்கு போராட்டம் அது இருன்னு சொல்ல ஆரம்பிச்சோம்னா....
யாராவது ஒரு கழ்ச்சல்ல ஓவான் ராவோட (ராவா).... முட்டிக்கிட்டு இருக்கிற குளத்து தண்ணியே வெட்டி உட்துற போறானுக.....
அப்புறம் இரயிலுக்கு பதிலா.... நம்மூருக்கு தண்ணீர் வந்துச்சு பாத்தியான்னு.... நம்ம செந்தில் மாதிரி கேட்க ஆரம்பிச்சுடுவாணுக.....

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.