அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Friday, November 25, 2011

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு முக்கிய நிகழ்வுகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

கண்ணியத்திற்குரிய அதிரை சொந்தங்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தங்களை பின் தொடரும் தகவல் தெரிவிக்கும் வகையில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அல்ஹம்துலில்லாஹ்!

கடந்த 30.09.2011 அன்று கிஸஸ் கிரஸண்ட் ஆங்கிலப் பள்ளியில் நடைபெற்ற அமீரக AAMF-ன் முதல் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு, இன்ஷாஅல்லாஹ் உயிரூடும் வகையில் வரக்கூடிய ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறை நாட்களை பயன்படுத்துவது என அமீரக நிர்வாகிகள் தீர்மானித்தோம். மாஷாஅல்லாஹ்! அமீரக AAMF-ன் நிர்வாகிகள் தங்களுக்கு கிடைத்த ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறை நாட்களை தாயத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பை உருவாக்கிவிட வேண்டும் என திட்டமிட்டோம். அதன்படி அமீரக AAMF-ன் நிர்வாகிகளான – தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், துணை பொருளாளர் மற்றும் 4 செயற்குழு உறுப்பினர்கள் அதிரைக்கு பயணமானோம்.

அதன்படி கடந்த 05.11.2011 முதல் 06.11.2011 வரை முறையே நெசவு தெரு, தரகர் தெரு, கடல்கரைத் தெரு, மேலத் தெரு, நடுத்தெரு, புதுத் தெரு மற்றும் கீழத் தெரு என அனைத்து முஹல்லா சங்க நிர்வாகிகளையும் அமீரக AAMF-ன் நிர்வாகிகள் தனித்தனியாக சந்தித்து அமீரகத்தில் உருவாகியுள்ள அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ஏற்படுத்திய நோக்கத்தினையும், அதுபோன்று அதிரை ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்துவதின் அவசியத்தையும் விளக்கினோம். அமீரகத்தில் அனைத்து முஹல்லா சகோதரர்களும் தந்த ஆதரவைப் போன்று, இல்லை இல்லை அதைவிட கூடுதலான ஆதரவை தருவோம், நீங்கள் செய்யும் இந்த முயற்சிகள் வெற்றியடை எங்கள் முழுமையான ஒத்துழைப்பு தருவோம் என அனைத்து முஹல்லா சங்க நிர்வாகிகளும் உறுதியளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

அதுபோன்று கடந்த 07.11.2011 அன்று அமீரக AAMF-ன் சார்பாக அதிரை அனைத்து முஹல்லா சங்க நிர்வாகிகள் ஆலோசனை அமர்வு 08.11.2011 அன்று நமதூர் ஜாவியாவில் அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற இருப்பதை தெரிவித்து அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்தோம். மாஷாஅல்லாஹ்! இக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் எழுத்துவடிவில் தயாரிக்கப்பட்டிருந்த AAMF-ன் உருவாக்கத்தின் கொள்கை மற்றும் நோக்கங்களை விளக்கும் பிரசுரம் வழங்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு:

துவக்கம்:அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF) ஐக்கிய அரபு அமீரகம் வாழ் அதிரைவாசிகளால் 23.09.2011 அன்று துவங்கப்பட்டது.
இங்கே வாசிப்பு வசதி கருதி, இயக்கத்தின் பெயர் பொரும்பாலும் AAMF என்றே குறிப்பிட்டப்டுளள்து. இதனை அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு என்று வாசித்திதுக் கொள்ளவும்.

AAMF-ன் நம்பிக்கை:அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள் இதனால் அருள் செய்யப்படுவீர்கள். (ஆலு இம்ரான் 3:132)
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும். (அன்னிஸா 4:59)

கொள்கை:AAMF-ன் கொள்கை: விளக்கும் வாசகம்: "ஒன்றுகூடி வளம் பொறுவோம்!"

அதிரை முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை வழுபடுத்த வேண்டிய காரியங்களை திட்டமிட்டு உறுதியுடன் செயலாற்றுவதே அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF)-ன் அடிப்படை கொள்கையாகும்.

குறிப்பு:
நமதூர் மக்களின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் காரியங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிற வகையில் AAMF-ன் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காரியங்கள் வருமாறு:

1. முஸ்லிம்களிடையே பொதுவாக கருத்து வேறுபாடுகள் உள்ள மார்க்க காரியங்களில் AAMF-ன் சார்பாகவோ, நடத்தும் நிகழ்ச்சிகளில் பேசவோ, விவாதிக்கவோ கூடாது, அவசியம் ஏற்பட்டால் அனைத்து தரப்பு முஸ்லிம்களாலும் ஏற்றுக் கொண்ட கருத்து வேறுபாடு இல்லாத பொதுவான காரிங்களை மட்டும் கவனமாக செயல்படுத்தலாம்.

2. நமதூர் முஸ்லிம் சகோதரர்கள் பல்வேறு அரசியல் மற்றும் சமுதாய இயக்கங்களில் அங்கம் வகிக்கின்றனர். அவர்களில் எவரேனும் தாங்கள் சார்ந்திருக்கின்ற அமைப்பை மிகைப்படுத்தியும் மற்றவர்கள் சார்ந்திருக்கின்ற அமைப்புகளை பற்றிய குறைகளை கூறிக் கொள்ளும் வகையில் நமது AAMF-ன் நிகழ்ச்சிகளில் பேசவோ விவாதிக்கவோ கூடாது.

நோக்கம்:
1. அதிரை வாழ் அனைத்து தரப்பு மக்கள் மற்றும் அமீரகம் வாழ் அதிரை வாசிகளின் ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் சமூக அரசியல் நலன்களின் மேன்மைக்காக பாடுபடுவதும்.

2. அதிரை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள், கண்ணியம், இறையச்சம், மார்க்க சிந்தனை மேன்மை பெறவும், கல்வி, பொருளாதாரம், மருத்துவதம், சுகாதாரம், சமூக அரசியல் நலன், ஒழுக்க மாண்புகள், கட்டுபாடுகள் ஆகிய அனைத்து துறைகளும் மேம்பட தேவையான திட்டங்கள் வகுத்து செயல்படுத்த பாடுபடுவதும்.

3. அதிரை முஸ்லிம் சமூகத்தில் நிலவுகிற கருத்து வேறுபாடுகளை களைந்திடவும், ஒற்றுமையை வலியுறுத்தியும், மனித நேயம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயரிய குறிக்கோள்கள் மேன்மையுடன் வெற்றியடைய அல்லாஹ்வின் உதவியோடும், தூய எண்ணங்களோடும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதே AAMF-ன் தலையாய நோக்கங்களாகும்.

AAMF-ன் செயல் திட்டங்கள்:
நம்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீர்கள்! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். (ஃபுஸ்ஸிலத் 41:34)
தீய எண்ணங்கள் கொண்டவர்கள் ஒன்று சேர்வது இயற்கை, எளிது. ஆனால், நல்லெண்ணம் படைத்தவர்கள் ஒன்று கூடுவது கடினம் என்ற கருத்து இப்பொழுதும் நிலவுகிறது. ஏனெனில், தீமை செய்வோர்களின் குறிக்கோள் அழிவு. அதை யார் செய்தாலும் சரி, அதனால் வரும் நன்மையோ தீமையோ யாருக்குச் சென்றாலும் கவலையில்லை என்பதினால்தான். ஆனால், நல்லது செய்ய விரும்புவோர் சிலர் நற்பெயர் தமக்கே சேர வேண்டும் என்று நினைப்பதால் பொதுநலம் மீறி தன்னலம் செயல்படத் துவங்கி, அனைவரையும் இணைந்து செயல்படவிடாமல் தடுக்கின்றது. மக்கள் நலம்தான் முக்கியம், அதனால் வரும் நற்பெயர் யாருக்குச் சென்றாலும் கவலையில்லை என்று தனித்தனியாகச் செயல்படும் பொதுத்தொண்டுக் குழுக்கள் இணைந்துவிட்டால், அச்சக்திக்கு மண்ணில் இணையே கிடையாது. நாம் மேற்கொண்டுள்ள இப்பயணம் அப்படி ஒரு சக்தி உருவாக வேண்டும் என்பதற்கே பாடுபடும்.
நமதூருக்கு பொதுவாகவும், ஒவ்வொரு முஹல்லாவிலும் தனித்தனி துறைகளை உருக்கவாக்கி AAMF-ன் கொள்கை மற்றும் நோக்கங்களை படிப்படியாக நிறைவேற்றிட முயல்வது.

அவை வருமாறு:
1. உலமாக்கள் சபை,
2. கல்வி வழிகாட்டல் மற்றும் சேவை மையம்,
3. நகர வளர்ச்சி மையம்,4. இலவச சட்ட உதவி மையம்,
5. AAMF-ன் ஜகாத் இல்லம்,
6. ஊடக சபை,
7. சமுதாய இளைஞர் மன்றம்,
8. சமுதாய மகளிர் மன்றம்.இன்ஷாஅல்லாஹ் இத்துறைகளின் பணிகள் குறித்து விரிவாக விளக்கப்படும்.

நமதூர் அனைத்து முஹல்லா சங்க நிர்வாகிகள் ஆலோசனை அமர்வு சிறப்புடன் நடைபெற்றது. அதனை இங்கே காணொலியில் காணலாம்.

அக்கூட்டத்தின் முடிவில் வரும் 10.11.2011 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு இன்ஷாஅல்லாஹ் நடைபெற இருக்கிற மறு ஆலோசனை அவர்வு ஜாவியாவில் நடைபெறும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.

அக்கூட்டத்திற்கு வரும்போது ஒவ்வொரு முஹல்லா சங்க சார்பாக தலா மூன்று உறுப்பினர்களை தேர்வு செய்து, அவர்கள் மாத்திரம் வந்து கலந்து கொள்வது என தீர்மானித்து முதல் நமதூர் அனைத்து முஹல்லா சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இனிதே முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்!


என்றும் அன்புடன்,
நிர்வாகம்,
AAMF அமீரகம்

3 பின்னூட்டங்கள்:

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும்
aamf குறித்த விளக்கம் நன்றாக உள்ளது. உயர்ந்த இறை நம்பிக்கையோடும் பரிசுத்த எண்ணத்தோடும் தகுந்த மார்க்க வழிகாட்டல்கலோடும் உறுப்பினர்களும் பொது மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நமது இலக்கை அடையலாம் - இன்ஷா அல்லாஹ்

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கூட்டமைப்பு சார்பாக குரான் மக்தப் வகுப்புக்கள் தொடங்கி,சேவை செய்ய முன்வரவேண்டும்.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்லொதொரு முயற்சி மழை மற்றும் தீயினால் பாதிப்புக்குள்ளான நமதூர் மக்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள்..... இங்கிருந்தே தங்களின் நலப்பணிகளை துவக்கலாமே.....

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.