
1907-ம் ஆண்டு முதல் எழும்பூர் ரெயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. இட நெருக்கடியை காரணம் காட்டி எழும்பூரில் இருந்து புறப்படும் அனைத்து ரெயில்களையும் தாம்பரத்தில் இருந்து புறப்படும் திட்டத்தை ரெயில்வே துறை தயாரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
ராயபுரம் ரெயில் நிலையத்தை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு அடுத்தப்படியாக 3-வது ரெயில் முனையமாக்கினால் பயணிகள் அனைவரும் பயன் அடைவார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ரெயில் பயணிப்போர் உரிமைகள் தீர்வகம் அமைப்பின் சார்பில் 22-ந்தேதி (செவ்வாய்) காலை 10.30 மணிக்கு ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இருந்து தெற்கு கூவம் சாலை சித்ரா திரையரங்கம் லாங்ஸ் தோட்ட சாலை வழியாக எழும்பூர் பாந்தியன் சாலைக்கு நடை பயணம் நடைபெறும்.
இவ்வாறு விக்கிரமராஜா கூறி உள்ளார்.
நன்றி. மாலைமலர்
4 பின்னூட்டங்கள்:
மக்களுக்கு நல்லது செய்கிறோம் என்ற எண்ணோட்டத்தில்.... எடஞ்சல்களையும் எரிச்சலையும் தருகிறது இந்த அறிவிப்புகள்.... மாற்றியமைக்க அனைவரும் இந்த நடை பயணத்திற்கு ஆதரவு தெரிவித்தால் நன்மை பயக்கும்.
பென்சிலில் எழுதி அழிப்பதுபோல்தான் இவய்ங்களோட அனைத்து வேலைகளும்.
இந்த மாதிரி அறிவிப்பே ஒரு இடைஞ்சல்தான் !
என்ன தான் பென்சில் எழுதியதை அளித்தாலும் மனதில் உள்ளதை அளிக்கிறது கஸ்ட்டம்.
அஸ்ஸலாமு அலைக்கும்
பதவிக்கு வரும் முன்பு கவர்சிகரமான வாக்குறுதிகளை வழங்குகின்றனர்.ஆட்சிக்கு வந்த பின்பு அதை மறந்து விட்டு அவர்கள் வசதிக்கு எது வேண்டுமானாலும் செய்கிறார்கள். மக்களும் அற்ப காசுகளுக்கு மயங்கி வாக்களிக்கும் சமயத்தில் வாக்களித்து பின்னர் கஷ்டப்படுகிறார்கள். முக்கியமான முடிவுகளை கூட எதிர்கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல் தன் இஷ்டத்துக்கு சில பார்பன அடிவருடிகளின் ஆலோசனைகலை கேட்டு இந்த முடிவு எடுக்கிறார் மக்கள் திருந்தினால் தான் இவர்கள் திருந்துவார்கள்
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment