அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Friday, November 25, 2011

டிச. 20ல் கடையடைப்பு திருவாரூர் - காரைக்குடி அகல ரயில்பாதை துவக்க கோரிக்கை


திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், தலைஞாயிறு, முத்துப்பேட்டை ஆகிய யூனியன் பகுதிகளில் டிசம்பர் 20ம் தேதி மத்திய அரசை கண்டித்து திருவாரூர் - காரைக்குடி அகல ரயில்பாதை பணியை உடனடியாக துவக்க வலியுறுத்தி கடையடைப்பும், ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வர்த்தகர்கள் சங்க கட்டிடத்தில் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நாகை திருவாரூர் மாவ ட்ட வர்த்தக சங்க தலைவர் சிவசுந்தரம் நகராட்சி தலைவர் உமாகேஸ்வரி, யூனியன் தலைவர் வேதநாயகி ஆகியோர் முன்னிலையில் அனைத்துக் கட்சி பொறுப்பாளர்கள், சேவை சங்க பொறுப்பாளர்கள் சங்க சிறப்புக் கூட்டம் நடந்தது.தென்னகத்தின் மிக பழமையான சென்னை காரைக்குடி, ராமேஸ்வரம் வழித்தடத்தில் உள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி வரையிலான மீட்டர் கேஜ் ரயில்பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதுக்கு உடனடியாக பணிகளை துவக்க வேண்டும்.திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி வரையிலான வழித்தடத்தை அகல ரயில் பாதையாக மாற்றுவதுக்கு நிதி ஒதுக்கிடு செய்வதுக்கு டிசம்பர் 20ம் தேதி திருத்துறைப்பூண்டி தலைஞாயிறு, வேதாரண்யம், முத்துப்பேட்டை உள்ளடக்கிய பகுதிகளில் கிராமங்கள், நகரங்களில் கடையடைப்பு செய்து தபால் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது

நன்றி : தினமலர் நாளிதழ் 25, நவம்பர் 2011

3 பின்னூட்டங்கள்:

yousuf said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

ADIRAI PEAPOLES ARE REQUESTED TO JOIN THIS PROGRAM

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

நல்லதொரு முயற்சி வளங்கள் கொழிக்கும் தென்னகத்தின் பலன்களை அனுபவிக்கும் மத்திய அரசாங்கம்..... வடநாட்டின் குக்கிராமங்கலனைத்தும் ரயில்வே துறையால் இணைத்துவிட்டு, தென்னகத்தின் தஞ்சை படலத்தை மறந்ததற்கு..... மத்திய அரசாங்கம் பதில் சொல்லி தான் ஆக வேண்டும்.... தோடரட்டும் போராட்டம் வெற்றி நிச்சயம்.

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

நல்ல தருணம், நல்ல முயற்சி.

நம்ம TT மார்களுக்கு கொஞ்சம் கொண்டாட்டம்தான்.

அதிரையிலிருந்து அனுப்பப் பட்டவர்கள் கொஞ்சம் கையில் அமுக்கி வைப்பார்கள்.

இது என்ன ரோடு (பந்த்) காலியாகவும், அகலமாகவும் இருக்கிறேதே.

பேசாம, ஏன் வம்புன்னு அகல இரயிலே இதுலேயே விட்டுறலாமா.....

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.