
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அன்பார்ந்த அதிரை வலை வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். அதிரை வலையுலகில் தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காகவும், பணிநிமித்தம் கடல்கடந்து வெளிநாடுகளிலும், அதிரையைப் பிரிந்து வாழும் அதிரைப் பொதுமக்களுக்கு அதிரையில் நிகழும் பல்வேறு தகவல்களைத் தொகுத்து வழங்க வேண்டி இந்த வலைப்பதிவை ஆரம்பித்திருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.
பல்வேறு தளங்களில் செய்தி பங்களிப்பாளர்களாக பங்காற்றிய அனுபவத்துடனும், பல்வேறு நாடுகளில் வசிக்கும் நண்பர்கள், அபிமானிகள், உள்ளூர் பிரமுகர்கள், உள்ளூர் தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் ஆகியோரின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலின் பேரில் இந்த வலைப்பதிவை துவங்கியுள்ளோம்.
அதனைத்தொடர்ந்து இன்ஷா அல்லாஹ் வலைப்பதிவு செய்தியாளர்களின் அனுபவ உதவியுடன் அதிரை பிபிசி வலைப்பதிவு சேவையை துவங்கியுள்ளோம்.
அதிரை பிபிசி தனித்தன்மையுடன் அதிரையின் பிரதான ஊடகமாக செயல்படும் என்பதை தங்களுக்கு அறியத்தருகிறோம். அதிரை வாசகர்கள் தங்களது நல்லாதரவை தந்து எங்களை ஊக்கப்படுத்த அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வஸ்ஸலாம்
அதிரை பிபிசி நண்பர்கள்
3 பின்னூட்டங்கள்:
வாழ்த்துக்கள், ஒற்றுமை ஊறுவிலைவிக்கும் காரியத்திலிருந்தும், அவதூறுகளிலிருந்தும் விலகி நல்லதைச் செய்வோம் என்று உறுதியோடு செயலாற்றிட துஆச் செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்...
தொடரட்டும் நற்பனிகள் !
இது ஒரு மிகச்சிறந்த சமுதாய பனி, மேலும் உங்களின் பணிகள் சிறக்க வல்ல ரஹ்மானை பிரார்த்திக்கிறோம், இன்றைய உலகில் முஸ்லிம்களுக்கு எதிராக பிற சமுதாய மக்களை தீவிரபடுதுவதர்க்கு தீய சக்திகள் இந்த ஊடகத்துறையையே பயன்படுத்தி தங்களுடைய இலக்கை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் இந்த வேளையில், நன்மையின் பக்கம் உள்ளதை உள்ளபடி சொல்லவதற்கு ஊடகத்துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பு மிக மிக அவசியம். நல்லுள்ளம் கொண்ட அனைவரும் இது போன்ற முயற்சிக்காக தங்களுடைய நேரம் காலம் கருதாமல் உழைக்கும் சகோதரர்களுக்கு துஆ மற்றும் பொருளாதார் உதவி மேற்கொண்டால் இது போன்ற நன்மைகள் தொடரும்.
அதிரை பி.பி.சி. அதன் பெயருக்கு எற்றுவாறு உறுதியாகவும், நெஞ்சுரத்தோடு செயல்பட தூண்டகூடியாதகவும் மற்றும் சவாலை ஏற்று செயல்படுத்த வழிவகுக்க வழிவகை செய்ய கூடியதாகவும் இயங்குகிறது...
வாழ்த்துக்கள் வாழ்வதற்கு அடித்தளம் கட்டுவதற்கு...
சரியான நேரத்தில் KVS அவர்களின் ஆலோசனை...
Mohideen, Dubai
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment