அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Tuesday, June 28, 2011

AFFA - பொதுக்குழு கூட்டமும் தீர்மானங்களும்.



அதிரை AFFA (ADIRAI FRIENDS FOOTBALL ASSOCIATION) கால்பந்து அணி கடந்த 5 வருட காலமாக அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட-முறைப்படி பைலா அமைக்கப்பட்ட அணியாக திகழ்கிறது . தஞ்சை மாவட்ட அளவில் சிறந்த அணியாக AFFA அணி விளங்குகின்றது. அதன் சாட்சியாக, கடந்த வருடம் மாவட்ட அளவிலான போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது . இந்த வருடம் தஞ்சை மாவட்ட கால்பந்து அணிக்கு, இமாம் ஷாஃபி பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்கள் (AFFA அணியைச் சார்ந்த இரண்டு இளம் வீரர்கள்) அந்த அணியில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

AFFA வின் பொதுக்குழு கடந்த (26/06/2011) அன்று, AFFA வின் தலைவர் செய்யது முகம்மது தலைமையில் நடைபெற்றது . முதலில் AFFA வின் பொருளாளர் அபுல் ஹசன் 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார் . பின்னர் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. AFFA-வின் தொடர்போட்டி நடைபெற ஒத்துழைப்பு தந்த அனைத்து வீரர்களுக்கும் அதிரை நகர மக்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது .

2.தொடர் போட்டி நடைபெறுவதற்கு பெருளாதார உதவி செய்த உள்நாடு மற்றும் வெளிநாடு நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது .

3.கடைசியாக நடைபெற்ற குல் முகம்மது நினைவு தொடர் போட்டியில் நடந்த சில விரும்பத் தகாத சம்பவங்களால் ஊர் ஒற்றுமையை கருத்தில் கொண்டு, இனி வரும் காலங்களில் AFFA நடத்தும் தொடர்ப்போட்டி தவிர வேறு எந்த உள்ளூர் போட்டிகளிலும் கலந்து கொள்வதில்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4. அணியின் பயிற்சியாளர் (Coach) மற்றும் தேர்வாளர் (Team selection head) ஆக லியாக்கத் அலி(முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரர் )அவர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்கள் .

தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றி கூட்டம் நிறைவுப்பெற்றது.

5 பின்னூட்டங்கள்:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

//கடைசியாக நடைபெற்ற குல் முகம்மது நினைவு தொடர் போட்டியில் நடந்த சில விரும்பத் தகாத சம்பவங்களால் ஊர் ஒற்றுமையை கருத்தில் கொண்டு, இனி வரும் காலங்களில் AFFA நடத்தும் தொடர்ப்போட்டி தவிர வேறு எந்த உள்ளூர் போட்டிகளிலும் கலந்து கொள்வதில்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.//

வருந்தத்தக்கதே !

இன்னும் திருந்தாதவர்களால் நல்லெண்ண நோக்கில் எடுத்து வைக்கும் எந்த காரியமும் முடங்குவது இப்படிப்பட்டவர்களால் மட்டுமே... அவர்களின் செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன் !

online ulagam said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

தொடரட்டும் அதிரை யின் வெற்றி பயணம்

online ulagam said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

தொடரட்டும் அதிரைbbcயின் வெற்றி பயணம்

முஹம்மது அப்துல்லாஹ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும். புதிதாகத் துவங்கப்பட்ட அதிரை பி பி சி விற்கு தாங்களின் வெற்றி பாதைத் தொடர எனது மனமார்ந்த வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

abu ismail said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 5

affa urippinar
affa kalpanthu ani enbathu tamil nadu sangangal pathivu sattappati pathivu seiyappattu 5 aandukal ahindrana aannal affa ani thodangappatu 9 aandukal ahindrathu enbathai ariya tharuvathil mikka mahilchi adaihindrom. ithanudaiya seerana valarchikku ungal annaivarin thua kallum ullathu inimelum thevai wassalam

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.