அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Thursday, June 30, 2011

மக்கள் நினைத்தால் விபத்துக்களை தவிர்க்கலாம்!

நமதூரில் மக்கள்தொகையை விட வீடுகள் தான் அதிகமாக உள்ளதோ என்று சில நேரங்களில் எண்ணுவதுண்டு.நமது ஊரிலுள்ள தெருக்களில் வீடு கட்டுவதற்காக செங்கல், ஜல்லி, மண், ஆகியவற்றை மனையின் வெளியில் அடுக்குவது, கொட்டுவது இதுதான் நம்மூரின் பழக்கம். ஆனால் சென்னை மாநகரம் போன்ற இடங்களில் செங்கல், ஜல்லி, மண், ஆகியவற்றை மனையின் உள்ளே கொண்டு செலுத்துவார்கள்.
அவற்றை கட்டடத்தின் வெளியே (ரோட்டில்) பார்ப்பது கடினம். அவற்றை வெளியில் வைத்தால் முனிசிபாலிட்டி அலுவலகத்திலிருந்து அதனை அகற்ற கெடு கொடுப்பார்கள். கெடுவிதிக்கப்பட்டு கட்டட உரிமையாளர் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் கடும் அபராதம் விதிப்பார்கள். சிலநேரங்களில் அந்த கல் மண் போன்றவற்றை உரிமையாளர் அப்புறப்படுத்தாவிட்டால் அவற்றை பறிமுதல் செய்து பின் அபராதமும் விதிக்கப்படுவதுண்டு.

இதனால் ஒரு தனி மனிதனுடைய உழைப்பு வீணாக போய்கிறது. இது இஷ்ராப் என்கிற விரயத்திலும் போய் முடிகிறது.

ஆனால் இது அதிரை போன்ற இடங்களில் சாத்தியம் ஆகுமா என்று தெரியவில்லை. செங்கல், ஜல்லி, மண், ஆகியவற்றை வெளியே வைப்பதால் ஊரில் இருக்கும் சிறுவர்களில் சிலர் மண்ணில் சரிந்துக் கொண்டும் மற்றும் சிலர் ஜல்லியை சரிப்பதும், நாய்களைக் கண்டால் ஜல்லி கற்களை எடுத்து அதனை அடிப்பதும் வழக்கமான நிகழ்வுகளாக இன்றும் தொடர்கிறது. 


மேலும் சாலையில் மண்ணும் கல்லுமாக சரிந்துக் கொட்டிக்கிடக்கும்போது விபத்துக்கள் எற்படுகிறது. இதனை நமதூரில் உள்ள அனைத்து முஹல்லா வாசிகளும் மற்றும் கட்டட கான்ட்ராக்டர்கள் அனைவரும் இது போன்ற போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மணல் ஜல்லி போன்றவற்றை வீண்விரயம் செய்யாமல் தன் கட்டடத்துக்கு உள்ள போட வேண்டும். அனைத்து மக்களும் நமது ஊரில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தெருக்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் ஆக்க அனைவரும் முன்வரவேண்டும்.

அதிரை பிபிசிக்காக நிருபர்அப்துல்லா

அதிரை - பட்டுக்கோட்டை சாலையில் கார் விபத்து

நேற்று (29/06/2011) பட்டுக்கோட்டையில் இருந்து நமதூருக்கு வந்து கொண்டு இருந்த கார் மீது அதிரையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்று கொண்டு இருந்த அடையாளம் தெரியாத கார், மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது . நமதூர் நோக்கி வந்த வண்டியில் சேதமும், அதில் பயணம் செய்த (அதிரை கடற்கரைத் தெருவைச் சார்ந்த) பெண்கள் மற்றும் கார் ஓட்டுநருக்கு காயமும் ஏற்பட்டது. இறைவன் அருளால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது .
பட்டுக்கோட்டையில் இருந்து
(அதிரை) BBC செய்திகளுக்காக,
நமது நிருபர் நிஜாம்

சென்னை - குருவாயூர் விரைவு ரயில் நேரமாற்றம்.வழக்கமாக காலை 07:50 க்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டுக்கொண்டிருந்த குருவாயூர் விரைவு வண்டி, ஜூலை 1 முதல், பத்து நிமிடங்கள் முன்னதாக தினசரி காலை 07:40 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து அரியலூர் வழியாக நம்மூர் செல்லும் பலரும் பயன்படுத்தும் தொடர்வண்டி என்பதால், இந்த நேர மாற்றத்தை அதிரை பி.பி.சி இணையதளம் அன்பு வாசகர்களுக்கு அறியத்தருகின்றது..

Wednesday, June 29, 2011

நமதூர் ஸலாஹியா அரபிக் கல்லூரி 112-வது ஆண்டு விழாநமதூர் ஸலாஹியா அரபிக் கல்லூரி 112-வது ஆண்டு விழா மற்றும் மெளலவி ஆலிம் & காரி பட்டமளிப்பு விழா

நாள்: 09/07/2011 சனிக்கிழமை.

இடம்:காதர் முகைதீன் கல்லூரி வாளாகம்,அதிரை.
காலை 9:00 மணி அளவில் நிகழ்ச்சிகள் தொடங்கும்.

தலைமை:மெளலானா மெளலவி அல்ஹாஜ் எல்.எம்.எஸ்.அப்துல் காதிர் ஆலிம் அவர்கள்.
முன்னிலை:
ஜனாப் டாக்டர் எஸ்.முஹம்மது அஸ்லம் அவர்கள்.
எம்.கே.என் மத்ரஸா டிரஸ்ட் செகரட்டரி

பட்டமளிப்பு மற்றும் பேருரை :மெளலானா மெளலவி,அல்ஹாஜ் எம்.ஜெ.அப்துல் ஹாலிக் ஹஜ்ரத் அவர்கள்.
இலங்கை குல்லியத்து ஸபீலிர் ரஷாத் பேராசிரியர்

சிறப்புரை:
மெளலானா மெளலவி கே.டி. முஹம்மது குட்டி ஹஜ்ரத் அவர்கள்.
அதிரை ரஹ்மானிய்யா மத்ரஸா முதல்வர்.
மற்றும்
மெளலானா மெளலவி ஹாபிழ் எம்.ஜி.முஹம்மது ஸஃபியுல்லாஹ் ஹஜ்ரத் அவர்கள். அதிரை ஸலாஹியா மத்ரஸா பேராசியர்.

இங்ஙனம்:
ஸலாஹியா அரபிக் கல்லூரி
அதிரை.

அன்புள்ள அதிரை வாசிகள் அனைவரும் இந்த பட்டமளிப்பு விழாவிற்கு வருகைதந்து அல்லாஹ்வின் நல்லருளை பெறுமாறு அதிரை பிபிசி சார்பாக கேட்டுகொள்கிறோம்

பொறுப்பில்லா மக்கள்! பொறுப்பற்ற பேரூராட்சி!

நமதூர் கீழத்தெருவில், காதிர் முகைதின் கல்லூரி பின்புறமாக ஒரு குளம் அமைந்துள்ளது . இந்தக் குளத்தின் அருகாமையில் இருக்கும் வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் இந்தக் குளத்தில் கலந்து விடுகின்றது. மேலும் கழிவுகளையும், குப்பைகளையும் இந்த குளத்தில் கொட்டிவிடுகின்றனர். இதனால் இக்குளம் பெரும் அளவில் மாசுபடுகின்றது.

குளத்தின் அருகே இருக்கும் தெருவில் நடமாட முடியாமல் அனைவரும் பெரிதும் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக, இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது கல்லூரி மாணவர்கள். இந்த குளத்தின் மற்றொரு கரையில் கல்லூரியின் வகுப்புகளில் சில இருப்பதால், சில நேரங்களில் அந்த வகுப்பறைகளில் தொடர்ந்து பத்து நாட்கள் கூட வகுப்பு நடைபெற முடியவில்லை.

அரிய பொக்கிஷமான ஒரு குளத்தை வீணடிக்கின்றோம் என்ற கவலையும்,அக்கறையும் நம் மக்களுக்கும் இருப்பதாக தெரியவில்லை. இந்த குளத்தை சுத்தப் படுத்தும் முறைகளைக் கையாண்டு, மறுபடி அக்குளம் மாசு படாமல் இருப்பதற்குரிய விழிப்புணர்வு செயல்களை நமதூர் பேரூராட்சி நிர்வாகமும் செய்வதாக தெரியவில்லை.

அந்தக் குளத்தின் தற்போதைய அவல நிலையை கீழ்க்காணும் புகைப்படங்களில் நீங்களே பாருங்கள்.
 Tuesday, June 28, 2011

AFFA - பொதுக்குழு கூட்டமும் தீர்மானங்களும்.அதிரை AFFA (ADIRAI FRIENDS FOOTBALL ASSOCIATION) கால்பந்து அணி கடந்த 5 வருட காலமாக அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட-முறைப்படி பைலா அமைக்கப்பட்ட அணியாக திகழ்கிறது . தஞ்சை மாவட்ட அளவில் சிறந்த அணியாக AFFA அணி விளங்குகின்றது. அதன் சாட்சியாக, கடந்த வருடம் மாவட்ட அளவிலான போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது . இந்த வருடம் தஞ்சை மாவட்ட கால்பந்து அணிக்கு, இமாம் ஷாஃபி பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்கள் (AFFA அணியைச் சார்ந்த இரண்டு இளம் வீரர்கள்) அந்த அணியில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

AFFA வின் பொதுக்குழு கடந்த (26/06/2011) அன்று, AFFA வின் தலைவர் செய்யது முகம்மது தலைமையில் நடைபெற்றது . முதலில் AFFA வின் பொருளாளர் அபுல் ஹசன் 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார் . பின்னர் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. AFFA-வின் தொடர்போட்டி நடைபெற ஒத்துழைப்பு தந்த அனைத்து வீரர்களுக்கும் அதிரை நகர மக்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது .

2.தொடர் போட்டி நடைபெறுவதற்கு பெருளாதார உதவி செய்த உள்நாடு மற்றும் வெளிநாடு நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது .

3.கடைசியாக நடைபெற்ற குல் முகம்மது நினைவு தொடர் போட்டியில் நடந்த சில விரும்பத் தகாத சம்பவங்களால் ஊர் ஒற்றுமையை கருத்தில் கொண்டு, இனி வரும் காலங்களில் AFFA நடத்தும் தொடர்ப்போட்டி தவிர வேறு எந்த உள்ளூர் போட்டிகளிலும் கலந்து கொள்வதில்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4. அணியின் பயிற்சியாளர் (Coach) மற்றும் தேர்வாளர் (Team selection head) ஆக லியாக்கத் அலி(முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரர் )அவர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்கள் .

தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றி கூட்டம் நிறைவுப்பெற்றது.

Monday, June 27, 2011

கருத்தரங்கம் நேரலை ......


முன்னாள் விடியல் வெள்ளி ஆசிரியரும் தாருல் இஸ்லாம் நிறுவன தலைவரும் வைகரை வெளிச்சம் ஆசிரியர் குலாம் முகம்மது அவர்கள் வருகின்ற(01/07/2011) வெள்ளிக்கிழமை அன்று நமதூர் சாரா திருமண மண்டபத்தில் தேசத்தந்தை காந்தியடிகளையும் தேச அபிமானி கர்கரேவையும் கென்றது யார் என்ற தலைப்பில் கருத்தரங்கில் உரையாற்ற இருக்கின்றார் . இந்த நிகழ்ச்சியை அதிரை பிபிசி முலம் நேரலை செய்யப்படுகின்றது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம் .

இங்ஙனம்,
அதிரை பிபிசி மீடியா குழு

அதிரையில் SDPI மரக்கன்று நடும் நிகழ்ச்சி ...

தமிழகம் முழவதும் SDPI  சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் முன்றாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு ஒரு லட்சம் மரக்கன்று நடுவதாக அறிவித்துள்ளனர் . அதன் ஒரு பகுதியாக அதிரையில் நேற்று(26/06/2011)    மரக்கன்று நடும் நிகழ்ச்சி மற்றும் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது . தெருமுனை பிரச்சார நிகழ்ச்சியில் மாவட்ட SDPI தலைவர் பாருக் அவர்கள் தாராளமயம்,தனியார்மயம் பற்றி சிறப்புரை ஆற்றினார் நிகழ்ச்சியில் அதிரை SDPI தலைவர் ஹனிபா அவர்களும், சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர் .அதிரை பிபிசியின் அறிமுகம்!


அல்லாஹ்வின் திருப்பெயரால்....


அன்பார்ந்த அதிரை வலை வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். அதிரை வலையுலகில் தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காகவும், பணிநிமித்தம் கடல்கடந்து வெளிநாடுகளிலும், அதிரையைப் பிரிந்து வாழும் அதிரைப் பொதுமக்களுக்கு அதிரையில் நிகழும் பல்வேறு தகவல்களைத் தொகுத்து வழங்க வேண்டி இந்த வலைப்பதிவை ஆரம்பித்திருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

பல்வேறு தளங்களில் செய்தி பங்களிப்பாளர்களாக பங்காற்றிய அனுபவத்துடனும், பல்வேறு நாடுகளில் வசிக்கும் நண்பர்கள், அபிமானிகள், உள்ளூர் பிரமுகர்கள், உள்ளூர் தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் ஆகியோரின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலின் பேரில் இந்த வலைப்பதிவை துவங்கியுள்ளோம்.

அதனைத்தொடர்ந்து இன்ஷா அல்லாஹ் வலைப்பதிவு செய்தியாளர்களின் அனுபவ உதவியுடன் அதிரை பிபிசி வலைப்பதிவு சேவையை துவங்கியுள்ளோம்.

அதிரை பிபிசி தனித்தன்மையுடன் அதிரையின் பிரதான ஊடகமாக செயல்படும் என்பதை தங்களுக்கு அறியத்தருகிறோம். அதிரை வாசகர்கள் தங்களது நல்லாதரவை தந்து எங்களை ஊக்கப்படுத்த அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வஸ்ஸலாம்
அதிரை பிபிசி நண்பர்கள்
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.