அதிரை பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்ட பிறகு முதல் பொதுக்கூட்டம் இன்று(4/11/11) பேரூராட்சி அலுவலகத்தில் 4.30 மணிக்கு நடைபெற்றது . இந்த கூட்டத்தில் முதல் தீர்மானமாக தமிழக அரசு ஏற்க்கனவே அறிவித்த அகல பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற திர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன் படி ஒன்றரை ஆண்டுகளில் இந்த திட்டம் முழுமை அடையும் . இதன் படி அதிரையில் உள்ள முக்கிய சாலைகள் உடைக்கும் பனி துவங்கும் . இந்த திட்டத்தின் மதிப்பு 23 கோடியாகும்.
![]() | மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!? 4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி... More Link |
![]() | இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல் 0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2... More Link |
9 பின்னூட்டங்கள்:
/*இந்த திட்டத்தின் மதிப்பு 23 கோடியாகும்.*/
இந்த "முயற்சியின்" மதிப்பு அதை விடவும் விலை அதிகமானது. வாழ்த்துக்கள், தொடரட்டும் நற்பணி.
அதிரைபூராகிடுமோ(சிங்கபூர்) !!!
நல்ல பெருந்துவக்கம்.
இதன் முயற்சி, வெற்றி ஒட்டுமொத்த அதிரை மக்களினதாக இருக்கட்டும்.
கழிவு நீர் போய் சேரக்கூடிய கடைசி இடத்தில் இருந்து துவக்கி பகுதி பகுதியாக நிறைவு செய்வதும்,
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பழுதுகளை சரிசெய்ய திட்டமிட்டு செயல் வடிவம் கொண்டுவருவதும் மிகவும் நன்மையாக இருக்கும்.
BBC
இந்த திட்டத்தின் மதிப்பு 23 கோடியாகும்.
இதற்குத்தான் இத்தனை லட்சங்கள் செலவு செய்து போட்டியா ?
அதிரை மக்களுக்கு பொது நூலகம் அமைத்து தரும்படி சகோதரர் அஸ்லம் அவர்களை கேட்டு கொள்கிறேன்.
It's a good start, hope bro aslam will lead the rest of days with great achievements, also eagerly awaiting the best cooperation of vice president. Leave the rest to near future.
//தமிழக அரசு ஏற்க்கனவே அறிவித்த அகல பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற//
பல நகராட்சிகள் இத்திட்டத்திற்காக தவம் கிடக்கும் நிலையில் அதிரை பேரூராட்சிக்கு இத்திட்டத்தை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றிகள் பல (நகராட்சிக்கு சமமாக அதிரை பேரூராட்சி மக்களும் அதிக வரி செலுத்துவதை அரசு கண்களுக்கு தெரிய தொடங்கிவிட்டது என்றே நினைக்கிறன் )
//முக்கிய சாலைகள் உடைக்கும் பனி துவங்கும்//
ஏற்கனவே உடைந்து அல்லது கரைந்து போய் இருக்கும் சாலையை உடைப்பது எளிதான காரியம் .
சாலைகள் உடைப்பதால் பெரிதும் பாதிப்பு அடைபவர்கள் பள்ளி குழந்தைகளும், பெரியவர்களும்தான் ஆக அவர்களை கருத்தில் கொண்டு இந்த நல்ல திட்டத்தை தொடங்க வேண்டும்
பழையபடி பெருநாள் கரண்ட் கட் தவிர்க்க முயற்சி செய்யுங்கள் .ஜசகல்லாஹ் .
என்னை கேட்டீங்கன்னா நான் நிறைய யோசனை சொல்லுவேன்.....
வரக்கூடிய தேர்தலுக்கு முன்னே எல்லா திட்டத்தையும் நிறைவேற்றுவது நல்லது. அதிலையும் பாதாள சாக்கடை திட்டத்தை முதல்ல செய்றது தான் நல்லது. காரணம் வரக்கூடிய திட்டத்தில கிடைக்கிற பணத்த எங்கே புதைக்கலாம்னு இப்பவே இடம் பாக்கலாம்.
இடம்னு சொன்னவொன்னே நம்மூர் நிலம் ப்ரோக்கர்கள் யாபகம் வருது. அவங்கள் உண்டானடியா எல்லா மெம்பர்களுக்கு போன் பண்ணி கையிலே இருக்ககூடிய இடத்த காட்ட சொல்லுங்க. நாலா பின்ன உதவும்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment