அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, November 26, 2011

மருத்துவ மனையின் அவசியம் ! - (படியுங்கள் அவசியம்)

அஸ்ஸலாமு அலைக்கும். 

கீழ்காணும் விஷயம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது  என்பதால் சற்று கவனமாக படித்து தங்கள் மேலான கருத்துக்களை பதிவதோடு, தொடர்ந்தாற்போல் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது நம்மீதுள்ள சமுதாயக்  கடமையாக உள்ளது.

அதிரை மக்கள் பல துறைகளில் நன்கு மேம்பட்டு வருகின்றனர். குறிப்பாக,மாணவ-மாணவியர் அதிக ஈடுபாட்டுடன் கல்வி கற்று, அவரவர்களின் துறைகளில் வெற்றிபெற்று வருகின்றனர்.    நமதூரிலுள்ள பொது பயன்பாடுகள் மற்றும் வசதிவாய்ப்புகள் குறித்த புள்ளிவிபரம்:


1) பள்ளிவாசல்கள் = 35 (ஏறக்குறைய)
2) குர்ஆன் மதரசாக்கள் = 3
3) பள்ளிகூடங்கள் =8
4) கலைக்கல்லூரி=1
5) மருத்துவ மணைகள்=5
6) தேசிய வங்கிகள்=5
7) ATM மையங்கள்=4
8) குளங்கள்=10
9) ரயில்வே நிலையம் =1
10) வானிலை ஆய்வுமையம்=1
11) தபால் நிலையம்=1
12) பெட்ரோல் பங்க்=2
13) கேஸ் ஸ்டேஷன்=1
14) போலீஸ் ஸ்டேஷன்=1
15) முஹல்லா சங்கங்கள்=7


போன்றவற்றுடன் சொல்லப்படாத மேலும் சில வசதிகள் உள்ளன. மக்கள் தொகை ஏறத்தாழ 35,000 பேர்கள். மேற்சொன்ன எல்லா வசதிகளும் நம் தேவைக்கு போதுமானது. ஆனால், மருத்துவ  வசதி மக்கள் தொகைக்கு ஏற்ப உள்ளதா? என்றால் ,   இல்லை என்பதே யதார்த்த உண்மை.

கடந்த 23 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட ஷிஃபா மருத்துவமனை ஆரம்ப காலத்திலும், அதன் பின்னரும் மக்களுக்கு மருத்துவ சேவைகளை ஆற்றி வந்ததை யாரும் மறுப்பதற்கில்லை. சிலகுறைபாடுகள் ஏற்பட்டதையும் நாம் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். சேவையில் குறைபாடு ஏற்படக் காரணம் பல இருப்பினும் பொதுவான காரணம் என்வென்று ஆராய்ந்தால், மருத்துவர்கள் அதிரைபோன்ற பின்தங்கிய நகர்புறங்களில் பணியாற்ற முன்வருவதில்லை. தங்கள் குழந்தைகளை நகரங்களில் படிக்க வைக்கவே விரும்புகின்றனர்.

அடுத்த காரணம், நமது மக்களிடம் வெளிவூர் சென்றுதான் தரமான வைத்தியம் பார்க்க முடியும் என்ற மனப்பான்மையும்  உள்ளது. மேலும், மற்ற வேலைகளுக்காகவும்,பொழுது போக்கிற்காகவும் பட்டுகோட்டை, தஞ்சாவூர் போன்ற ஊர்களுக்கு சென்று விடுகின்றனர். ஆனால்,  அவசர மருத்துவ உதவிகள் தேவைப்படும்போது ஷிஃபா மருத்துவமனையை நாடுகின்றனர்.அத்தகைய தருணங்களில் தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) வசதி இல்லாததாலும், நல்ல மருத்துவர் கிடைக்காததாலும், முதலுதவியைக்கூட  கொடுக்க இயலுவதில்லை.

மருத்துவமணை நிர்வாகம் தரப்பில் இதுகுறித்து வினவும்போது, பொதுமக்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு கிடைத்தால்தானே மேற்கண்ட மருத்துவ உதவிகளை கொடுக்க இயலும்! இவற்றை இயக்குதல், பராமரித்தல் ஆகியவற்றுக்கு ஆகும் செலவுகளைக் கூட பெறுமளவுக்கு மக்கள் பயன்படுத்துவதில்லை என்று பதில் கிடைக்கிறது.

இதற்கு என்னதான் தீர்வு?  இதோ சில ஆலோசனைகளும், அதற்கான தீர்வுகளும்:

உள்ளூர் மருத்துவர்களின் பங்களிப்புடன் வணிக ரீதியில் புதியதொரு திட்டம் தயாரிக்கபட்டுளது.அதன் விபரம் பின்வருமாறு:


1. அதிரை மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள மருத்துவர்கள் குறைந்தது ரூ.1 லட்சம்வரை முதலீடு செய்வது.

2. அவ்வாறு முதலீடு செய்யும் மருத்துவர்கள் இயக்குனர்களில் (DIRECTOR) ஒருவராக கருதப்படுவார்.

3. ரூ.50 லட்சங்கள் வரை முதலீடுகளைத் திரட்டுவது,

4. வருங்காலங்களில் ரூ.2 கோடி வரை  முதலீட்டை அதிகரித்து மருத்துவ சேவைகளை நவீனப்படுத்துவது.

5. மேற்கண்ட முதலீடுகள் மூலம் நவீன அறுவை சிகிச்சைக்கூடம் (Modern Operation Theater), குழந்தைகள் நல மருத்துவம், அவசர / பேறுகால உபகரணங்களை வாங்குவது, பெண்களுக்கான மருத்துவ சேவையை மேம்படுத்துவது, முக்கியமாக நீரிழிவு நோய்க்கான மருத்துவப் பிரிவு ஒன்றை ஏற்படுத்துவது, INTENSIVE CARE UNIT (ICU) அமைப்பது.

6.TELEMEDICINE வசதியை ஏற்படுத்தி அப்போலோ மருத்துவமனை,சங்கர நேத்ராலய போன்ற பிரபல மருத்துவமனைகளுடன் இன்டர்நெட் மூலம் இணைப்பு ஏற்படுத்தி அவசரகால CONSULTATION செய்வது போன்ற பல நவீனரக நலத்திட்டங்களை   நடைமுறைபடுத்த முயற்சிகள் மேற்கொள்வது.

இதற்காக, 20/11/11 அன்று இமாம் ஷாஃபி பள்ளியில், ஹாஜி M.S.தாஜுதீன் அவர்களின் முயற்சியுடன் கீழ்க்கண்டவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Dr.அமீன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அரிய பல ஆலோசனைகளை தெரிவித்தார். அதிரையின் சகாப்தத்தில் இதுஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.கடந்த காலங்களில் வர்த்தக ரீதியாக நிர்வாகம் செய்யாத காரணத்தால், இத்துறையை வெற்றிகரமாக மாற்ற இயலாமல் போனது வருத்ததிற்குரிய விசயம். பொது நோக்கத்துடன் சேவை செய்தாலும், அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு முதலீடு செய்தவர்களுக்கு லாபத்தை கொடுத்தபின் ஏழை எளியோருக்கு நிச்சயமாக உதவிடலாம். இதற்கென புதியதொரு நிறுவனத்தை உருவாக்கி, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார  ( 2  லட்சம்  பேர்கள் )      கிராம மக்களுக்கும் மருத்துவ சேவை செய்யலாம்.

இந்த உயரிய திட்டத்திற்கு அதிரை மருத்துவர்கள் முன்வந்து முதலீடு செய்வதற்கும் அவர்களின் மேலான வழிகாட்டுதலின்படி நிர்வாகத்தை நடத்த முடிவு செய்த விசயம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதை கண்கூடாக பார்க்க முடிகிறது.


கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்:

1. ஜனாப். M.S.தாஜுதீன்
2. Dr.முஹமது ஹனீப்
3. Dr.ராஜு
4. Dr.மீராசாஹிப்
5. திருமதி. செல்வ ராணி
6. ஜனாப் சிப்ஹதுல்லாஹ்
7. பேராசிரியர் அப்துல் காதர்
8. ஜனாப் A.S.M.அப்துல் ஹமீது
9. பேராசிரியர் பரக்கத்
10.ஜனாப் S.M. ஷேக் முஹம்மது
11.ஜனாப் அப்துல் ரஜாக்

மேற்கண்ட திட்ட முன்வரைவு (Project Model) அதிரைவாசிகளின் வசதிக்காக இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துகொண்டால் நமதூருக்கான நலத்திட்டம் இன்ஷா அல்லாஹ் வெற்றிகரமாகச் செயபடுத்த முடியும். இத்திட்டம் குறித்து மேலதிக தகவல் வேண்டுவோர் tajudeen@seapol.comல் தொடர்பு கொள்ளலாம்.



- Chasecom அப்துல் ராஜாக்

5 பின்னூட்டங்கள்:

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஷிபா ஆஸ்பத்திரி பொருத்தமட்டில் அதை நிர்வகிக்கப் போறவர் எவ்வளவு பணத்தை பட்ஜெட் போட்டு சிலவு செய்தாலும், தரமான மருத்துவரை வைத்து ஆஸ்பத்திரியை நடத்தினாலும் ஒரு சில சொற்ப காரணங்களால் அந்த நிர்வாகம் வீழ்ச்சியை அடைந்திருக்கிறது.

அதில் மகப்பேறு, குழந்தை மருத்துவம், ஜெனரல் பிசிசியான்ட், பல் மருத்துவம், எலும்பு முறிவு, தோல், கண்-காது-மூக்கு, சிறுநீரகம், குடல், நரம்பு மற்றும் இருதயம் போன்ற மருத்துவர்களை வைத்து ஆஸ்பத்திரி நடத்தலாம்.

அதே சமயம் இப்போ உள்ள சூழ்நிலையில் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து செய்ய முடியுமா என்றால் அது நிச்சயம் முடியாது. ஆனால் ஒரு சில மருத்துவத்தை மட்டும் முன்னிலைப் படுத்தி ஷிபா ஆஸ்பத்திரியை மிகவும் வெற்றிகரமாக நடத்தலாம்.

இந்த வெற்றிக்கு வித்திட்ட (நம்மூரை பொறுத்தவரை) முதல் இடத்தில் வருகிற மருத்துவம் மகப்பேறு. இந்த மருத்துவத்தை "சேவையின் முதல் தேவை" என்ற எண்ணத்தில் கீழ்கண்ட (BABY STEP) நெறிமுறைகளை "துக்ளக் நியூஸ் குழுமம்" வலியுறுத்துகின்றது.

பெரும்பாலான பெண்ணின் துணைவர்கள் வெளிநாட்டில் வாழ்வதால் நமதூரை பொருத்தமட்டில் அவசரகால உதவி என்றால் மகபேருதான். அதன் பிறகுதான் மற்றவை.

முன்பெல்லாம் பாட்டிவைத்தியம், நாட்டுவைத்தியம் மற்றும் சுக பிரசவம் என்றால் நம்மூர் ஆச்பத்திரியிலோ அல்லது வீட்டிலோ தான் நடக்கும். ஆனால் ஷிபா ஆஸ்பத்திரி வந்தப்பிறகு சுக பரவசம் என்றால் தஞ்சாவூர். ஆபரேஷன் என்றால் நம்ம "ஷிபா ஆஸ்பத்திரி".

கொடுமை என்கிறீர்களா.... அவற்றையெல்லாம் போக்க ஒரு சில வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம்.

அதாவது மருத்துவத்தில் மகப்பேறு என்பது ஒரு பெண்மணிக்கு மிக மிக முக்கியமான சம்பவம். சாதரணமாக ஒரு பெண் தனக்கு வலி ஏற்படுவதற்கு முன்பே தான் அடையப் போகும் வலியை விட, போற வழியில் (பட்டுக்கோட்டை, தஞ்சாவூர்) ஏதாவது ஒன்னு நடந்துவிடுமோ என்ற அச்சம்தான் ரொம்ப ரொம்ப.

பிரசவ வேதனையில் அவளிடம் நடந்து கொள்ளும் டாக்டரம்மாவும் சரி, அவர்களை சுற்றியுள்ள நர்சுகளும் சரி, அவர்களை சுற்றியுள்ள நர்சுகளும் சரி, அவர்கள் அந்த பெண்மணியிடம் எப்படி பக்குவமாகவும், கனிவாகவும் நடந்து கொள்கிறார்களோ அதை வைத்ததான் அந்த பிரசவத்தில் துடிக்கும் பெண்ணுக்கு பாதி வழியை போக்குவதுபோல் இருக்கும். அந்த சமயம் பிரசவ வழியில் துடிக்கும் அந்த பெண்ணிடம் முழுக்க முழுக்க தான் ஒரு உயிர் தொழி என்பது போலவும், அந்த பெண்மணிக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம் என்பது போலவும், பிரசவ நேரத்தில் மல ஜாலம் கழித்தாலோ அந்த பெண்ணிடம் புன்முறுவலோடும், அவளுக்காகவே அவளுடைய வலியை போக்குவதற்காக, இந்த வலி நிரந்தரமல்ல என்பது போலவும், அவளிடம் பேசக்கூடிய வார்த்தை ஒவ்வொன்றும் மிகுந்த தைரியத்தை வரவழைப்பது போலவும், இந்த பிரசவ வலி என்பது ஒரு அளவிலா சந்தோசத்திற்கு முன்னோடியாக இருக்குமென்பதாகவும் அவளுக்கு தன்னம்பிக்கையை உண்டு பன்னக்கூடியவர்கலாக இருத்தல் வேண்டும். அதே போல் இன்னும் எத்தனையோ ஆறுதல் வார்த்தைகளும், தைரியமான சொற்களும், பயன் படுத்தினால் அந்த பெண்மணி - தான் மகப்பேறுக்கு பிறகு, தான் பட்ட வேதனையை விட, அந்த பிரசவ நேரத்தில் டாக்டர்களும், நர்சுகளும் நடந்து கொண்ட நன்னடத்தை தான் அவர்கள் மனதில் என்றென்றும் இருக்கும்.

அது மட்டுமல்ல தான் பெற்ற (பிள்ளை) இன்பம் வையகம் பெருக என்பது போல, அவருக்கு தெரிந்த தோழிமார்கள், சொந்தக்கரர்களையும் அதே ஆஸ்பத்திரிக்கு பிரசவத்திற்கு போக சொல்வார்கள். ( WORD OF MOUTH MARKETING ). ஷிபா ஆஸ்பத்திரி மைக்கு போட்டு மக்களிடம் சொல்ல வேண்டியதில்லை.

இப்படி மேற்சொன்ன விஷயங்களை ஒவ்வொரு துறைக்கும் முறையான பயிற்ச்சியும், அதனைச் சார்ந்த மனோபாவங்களும் (ATTITUDE) சரிவர கடைப்பிடித்து வந்தால் ஷிபா என்றாலே ஷிபாதான் நினைவுக்கு வரும்.

*****துக்ளக் நியூஸ் குழுமம்*****

MOHI said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிகவும் நல்ல முயற்சி, அதிரைக்கு அவசியமானதும் கூட . மேலும் இதனை வெற்றிகரமாக செயல்படுத்திட ஊர் மக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.

தற்பொழுது நீரிழிவு நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இதற்கான சிகிச்சையுடன் குழந்தைகள் நல மருத்துவம், பேறுகால மருத்துவம் போன்றவையும் தரமாக வழங்கினால், மருத்திற்காக வெளியூர் செல்லும் போக்கு குறைந்து, வழியில் உயிர் இழப்பு , மிதமிஞ்சிய போக்குவரத்து செலவுகள் தவிர்க்கப்படும் . அதனால் செலவுகள் குறைந்து மக்களின் வாழ்க்கை தரம் உயரும்.

உங்களது நன் முயற்சிகள் வெற்றியடைய அல்லாஹ்விடம் துவா செய்கிறோம்.

முஹைதீன், தமாம்,KSA

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எல்லா முஹல்லா மக்களையும் அழைத்து பேசி,மஷூரா செய்து முடிவெடுக்க வேண்டும்.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இந்த ஆலோசனையை தயவு கூர்ந்து சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் சேர்பிக்கவும்....

நமதூரில் பயின்ற டாக்டர் வாஞ்சிலிங்கம் தென்னிந்தியாவில் பிரபலமடைந்த மருத்துவரில் ஒருவர்..... அவருடைய நெருங்கிய நண்பர்களான ஹனீபா சார், வவண்ண சார் போன்றவர்களின் அன்புகட்டலைக்கு மிகவும் கட்டுபடுபவர்.... குறிப்பாக நமதூர் விசயத்தில் நல்லெண்ணம் கொண்டவர்..... அவரை அணுகி எப்படியாவது மாதத்தில் ஒருநாள் குறைந்தது 6 மாத காலத்திற்கு வருகை தர சொல்லி அதை போஸ்டர் மற்றும் பேனர் மூலம் சுற்றுவட்டாரங்களில் விளம்பரம் செய்தால் மருத்துவமனைக்கு நல்ல அறிமுகம் கிடைக்கும்.

இதோடு நின்றுவிடாமல் தலைசிறந்த மருத்துவர்களை வாரந்தோறும், மாதந்தோறும் வியாபார நோக்கோடு தருவித்தால் நிச்சயம் எதிர்காலம் சிறக்கும். அடிப்படை வசதிகளான ICU, அதி நவீன OPERATION THEATRE மற்றும் 24 மணி நேர சேவைகள் போன்றவற்றால் மேலும் முன்னேற்றம் காணலாம்.

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிகவும் நல்ல முயற்சி, முயற்சிகள் வெற்றியடைய அல்லாஹ்விடம் துவா செய்கிறோம்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.