அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Showing posts with label ஷிஃபா மருத்துவமனை. Show all posts
Showing posts with label ஷிஃபா மருத்துவமனை. Show all posts

Saturday, November 26, 2011

மருத்துவ மனையின் அவசியம் ! - (படியுங்கள் அவசியம்)

அஸ்ஸலாமு அலைக்கும். 

கீழ்காணும் விஷயம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது  என்பதால் சற்று கவனமாக படித்து தங்கள் மேலான கருத்துக்களை பதிவதோடு, தொடர்ந்தாற்போல் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது நம்மீதுள்ள சமுதாயக்  கடமையாக உள்ளது.

அதிரை மக்கள் பல துறைகளில் நன்கு மேம்பட்டு வருகின்றனர். குறிப்பாக,மாணவ-மாணவியர் அதிக ஈடுபாட்டுடன் கல்வி கற்று, அவரவர்களின் துறைகளில் வெற்றிபெற்று வருகின்றனர்.    நமதூரிலுள்ள பொது பயன்பாடுகள் மற்றும் வசதிவாய்ப்புகள் குறித்த புள்ளிவிபரம்:


1) பள்ளிவாசல்கள் = 35 (ஏறக்குறைய)
2) குர்ஆன் மதரசாக்கள் = 3
3) பள்ளிகூடங்கள் =8
4) கலைக்கல்லூரி=1
5) மருத்துவ மணைகள்=5
6) தேசிய வங்கிகள்=5
7) ATM மையங்கள்=4
8) குளங்கள்=10
9) ரயில்வே நிலையம் =1
10) வானிலை ஆய்வுமையம்=1
11) தபால் நிலையம்=1
12) பெட்ரோல் பங்க்=2
13) கேஸ் ஸ்டேஷன்=1
14) போலீஸ் ஸ்டேஷன்=1
15) முஹல்லா சங்கங்கள்=7


போன்றவற்றுடன் சொல்லப்படாத மேலும் சில வசதிகள் உள்ளன. மக்கள் தொகை ஏறத்தாழ 35,000 பேர்கள். மேற்சொன்ன எல்லா வசதிகளும் நம் தேவைக்கு போதுமானது. ஆனால், மருத்துவ  வசதி மக்கள் தொகைக்கு ஏற்ப உள்ளதா? என்றால் ,   இல்லை என்பதே யதார்த்த உண்மை.

கடந்த 23 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட ஷிஃபா மருத்துவமனை ஆரம்ப காலத்திலும், அதன் பின்னரும் மக்களுக்கு மருத்துவ சேவைகளை ஆற்றி வந்ததை யாரும் மறுப்பதற்கில்லை. சிலகுறைபாடுகள் ஏற்பட்டதையும் நாம் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். சேவையில் குறைபாடு ஏற்படக் காரணம் பல இருப்பினும் பொதுவான காரணம் என்வென்று ஆராய்ந்தால், மருத்துவர்கள் அதிரைபோன்ற பின்தங்கிய நகர்புறங்களில் பணியாற்ற முன்வருவதில்லை. தங்கள் குழந்தைகளை நகரங்களில் படிக்க வைக்கவே விரும்புகின்றனர்.

அடுத்த காரணம், நமது மக்களிடம் வெளிவூர் சென்றுதான் தரமான வைத்தியம் பார்க்க முடியும் என்ற மனப்பான்மையும்  உள்ளது. மேலும், மற்ற வேலைகளுக்காகவும்,பொழுது போக்கிற்காகவும் பட்டுகோட்டை, தஞ்சாவூர் போன்ற ஊர்களுக்கு சென்று விடுகின்றனர். ஆனால்,  அவசர மருத்துவ உதவிகள் தேவைப்படும்போது ஷிஃபா மருத்துவமனையை நாடுகின்றனர்.அத்தகைய தருணங்களில் தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) வசதி இல்லாததாலும், நல்ல மருத்துவர் கிடைக்காததாலும், முதலுதவியைக்கூட  கொடுக்க இயலுவதில்லை.

மருத்துவமணை நிர்வாகம் தரப்பில் இதுகுறித்து வினவும்போது, பொதுமக்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு கிடைத்தால்தானே மேற்கண்ட மருத்துவ உதவிகளை கொடுக்க இயலும்! இவற்றை இயக்குதல், பராமரித்தல் ஆகியவற்றுக்கு ஆகும் செலவுகளைக் கூட பெறுமளவுக்கு மக்கள் பயன்படுத்துவதில்லை என்று பதில் கிடைக்கிறது.

இதற்கு என்னதான் தீர்வு?  இதோ சில ஆலோசனைகளும், அதற்கான தீர்வுகளும்:

உள்ளூர் மருத்துவர்களின் பங்களிப்புடன் வணிக ரீதியில் புதியதொரு திட்டம் தயாரிக்கபட்டுளது.அதன் விபரம் பின்வருமாறு:


1. அதிரை மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள மருத்துவர்கள் குறைந்தது ரூ.1 லட்சம்வரை முதலீடு செய்வது.

2. அவ்வாறு முதலீடு செய்யும் மருத்துவர்கள் இயக்குனர்களில் (DIRECTOR) ஒருவராக கருதப்படுவார்.

3. ரூ.50 லட்சங்கள் வரை முதலீடுகளைத் திரட்டுவது,

4. வருங்காலங்களில் ரூ.2 கோடி வரை  முதலீட்டை அதிகரித்து மருத்துவ சேவைகளை நவீனப்படுத்துவது.

5. மேற்கண்ட முதலீடுகள் மூலம் நவீன அறுவை சிகிச்சைக்கூடம் (Modern Operation Theater), குழந்தைகள் நல மருத்துவம், அவசர / பேறுகால உபகரணங்களை வாங்குவது, பெண்களுக்கான மருத்துவ சேவையை மேம்படுத்துவது, முக்கியமாக நீரிழிவு நோய்க்கான மருத்துவப் பிரிவு ஒன்றை ஏற்படுத்துவது, INTENSIVE CARE UNIT (ICU) அமைப்பது.

6.TELEMEDICINE வசதியை ஏற்படுத்தி அப்போலோ மருத்துவமனை,சங்கர நேத்ராலய போன்ற பிரபல மருத்துவமனைகளுடன் இன்டர்நெட் மூலம் இணைப்பு ஏற்படுத்தி அவசரகால CONSULTATION செய்வது போன்ற பல நவீனரக நலத்திட்டங்களை   நடைமுறைபடுத்த முயற்சிகள் மேற்கொள்வது.

இதற்காக, 20/11/11 அன்று இமாம் ஷாஃபி பள்ளியில், ஹாஜி M.S.தாஜுதீன் அவர்களின் முயற்சியுடன் கீழ்க்கண்டவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Dr.அமீன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அரிய பல ஆலோசனைகளை தெரிவித்தார். அதிரையின் சகாப்தத்தில் இதுஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.கடந்த காலங்களில் வர்த்தக ரீதியாக நிர்வாகம் செய்யாத காரணத்தால், இத்துறையை வெற்றிகரமாக மாற்ற இயலாமல் போனது வருத்ததிற்குரிய விசயம். பொது நோக்கத்துடன் சேவை செய்தாலும், அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு முதலீடு செய்தவர்களுக்கு லாபத்தை கொடுத்தபின் ஏழை எளியோருக்கு நிச்சயமாக உதவிடலாம். இதற்கென புதியதொரு நிறுவனத்தை உருவாக்கி, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார  ( 2  லட்சம்  பேர்கள் )      கிராம மக்களுக்கும் மருத்துவ சேவை செய்யலாம்.

இந்த உயரிய திட்டத்திற்கு அதிரை மருத்துவர்கள் முன்வந்து முதலீடு செய்வதற்கும் அவர்களின் மேலான வழிகாட்டுதலின்படி நிர்வாகத்தை நடத்த முடிவு செய்த விசயம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதை கண்கூடாக பார்க்க முடிகிறது.


கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்:

1. ஜனாப். M.S.தாஜுதீன்
2. Dr.முஹமது ஹனீப்
3. Dr.ராஜு
4. Dr.மீராசாஹிப்
5. திருமதி. செல்வ ராணி
6. ஜனாப் சிப்ஹதுல்லாஹ்
7. பேராசிரியர் அப்துல் காதர்
8. ஜனாப் A.S.M.அப்துல் ஹமீது
9. பேராசிரியர் பரக்கத்
10.ஜனாப் S.M. ஷேக் முஹம்மது
11.ஜனாப் அப்துல் ரஜாக்

மேற்கண்ட திட்ட முன்வரைவு (Project Model) அதிரைவாசிகளின் வசதிக்காக இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துகொண்டால் நமதூருக்கான நலத்திட்டம் இன்ஷா அல்லாஹ் வெற்றிகரமாகச் செயபடுத்த முடியும். இத்திட்டம் குறித்து மேலதிக தகவல் வேண்டுவோர் tajudeen@seapol.comல் தொடர்பு கொள்ளலாம்.



- Chasecom அப்துல் ராஜாக்

Friday, November 25, 2011

ஷிஃபா மருத்துவமனை - புதிய அத்தியாயம்




அதிரை சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,


அதிரை பிபிசியில் சமீபத்தில் வந்த ஷிபா hospital revamping விஷயமாக ஜனாப் MST அவர்கள் பேசிய காணொளி வெளிவந்தது. அதில் நான் பின்னூட்டமிட்டதற்கு நிறைய பதில் பின்னூட்டங்கள் வந்தன. சில சகோதர சகோதரிகள் இவற்றை publication ஆக வெளியிடும்படி கேட்டுக்கொண்டார்கள். மற்றும் சிலர் அவர்களுடைய நண்பர்கள் ஷிபா hospital கட்டிட நிதியாக ஒரு மாத சமபளம் 30 வருடங்களுக்கு முன்பு கொடுத்ததை நினைவூட்டி இருந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் நிச்சயம் நாம் பதில் சொல்ல கடமை பட்டுள்ளோம். சுமார் 6 இலச்ச ருபாய் நாம் ஊர் மக்களிடம் வசூலிக்கப்பட்டது. இதற்காக மர்ஹூம் AMS அவர்களும், ஜனாப் Haja Mohideen ( அமா travels ) அவர்களும் சவூதி மற்றும் அனைத்து வலை குடா நாடுகளுக்கு தம் சொந்த செலவில் சுற்றுபயணம் செய்து ஷிபா hospital உருவாக வசூல் செய்தார்கள்.

அப்படி வசூல் செய்யும் பொழுது ஒரு மாத சமபளம் கொடுப்பவர்களுக்கு ஒரு அடையாள அட்டை கொடுக்கப்படும் என்றும், மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு சகாயமாகவும், முன்னுரிமையும் கொடுக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் சில நடை முறை சிக்கல்களால் அவற்றை நடைமுறை படுத்த முடியாமல் போய்விட்டது. முதல் மூன்று வருடம் சிறப்பாக இயங்கி வந்த மருத்துவமனை பின்பு வந்த நிர்வாக சீர்கேடுகளால் மருத்துவமனை நஷ்டத்தில் இயங்க ஆரம்பித்தது. ஜனாப் இக்பால் ஹாஜி அவர்களும், AMS அவர்களும் மற்றும் அஜ தாஜுதீன் அவர்களும் MST அவர்களும் மற்றும் சிலரும் தம் சொந்த பணத்தை போட்டு அதற்கு உயிர் ஊட்டிக்கொண்டு இருந்தார்கள்.

எப்படியாவது நம் சமுதாயத்துக்கு மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கடந்த நான்கு வருடமாக MST மற்றும் JAT அவர்கள் செய்த முயற்ச்சிகளும், தியாகங்களும் அல்லாஹ் ஒருவனே அறிவான். சென்ற வருடம் சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் நம் ஊர் பெரிய மனிதர்கள் கூடிய கூட்டத்தில் இது வரை இலவசமாக செய்து வந்த மருத்துவத்தை வியாபார ரீதியாக செய்தால்தான் தொடர்ந்து செய்ய முடியும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான முதல் முயற்சியாக ஜெட்டாவில் நம் ஊர் மக்களிடம் நம் கருத்தை நானும் ஜனாப் MST அவர்களும் கூறிய பொழுது நம் ஊர் மக்கள் இந்த முடிவுக்கு ஆதரவு தந்ததோடு அவர்களும் முதலீடு செய்ய முன்வந்தார்கள்.

அது முதல் அதற்கான சட்ட ரீதியான் ஆலோசனைகளும் மற்றும் சாத்திய கூறுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டு இப்பொழுது நம் மக்களிடம் நம் திட்டங்களை கூறலாம் என்று முடிவு எடுத்ததன் முதல் முயற்ச்சிதான் ஜனாப் MST அவர்களின் காணொளி. 30 வருடங்களுக்கு முன்பு வசூலித்த பணம் தற்பொழுது மருத்துவமனை கட்டிடமாக உள்ளது. இன்ஷா அல்லாஹ் தற்பொழுது இருக்கும் கட்டிடத்தையும், மருத்துவ சாதனங்களையும் நவீன படுத்தவும், புதிப்பக்கவும் profit/loss என்ற அடிப்படையில் ஷேர் வசூலிக்க முடிவு செய்து உள்ளார்கள். அது பற்றிய விரிவான அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் கூடிய சீக்கிரம் வெளி வரும்.


வஸ்ஸலாம்.
ஷாகுல் ஹமீது.

Tuesday, November 22, 2011

ஷிஃபா மருத்துவமனையின் புதிய அத்தியாயம்..














Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.