அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Wednesday, November 2, 2011

அதிரை அனைத்து முஹல்லா - ஹஜ் பெருநாள் சந்திப்பு -2011


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அதிரை அனைத்து முஹல்லா - ஹஜ் பெருநாள் சந்திப்பு -2011









அல்லாஹ்விடம் உறுதி மொழி எடுத்தப்பின் அதை முறிப்போருக்கும், இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டதைத் துண்டிப் போருக்கும், மற்றும் பூமியில் குழப்பம் விளைவிப்போருக்கும் சாபம் உள்ளது அவர்களுக்கு இவ்வுலகில் கேடு உண்டு. (ஸுரத்துர் ரஃது 13:25)  

அன்பிற்கினிய அதிரை சொந்தங்களுக்கு,

    اَسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ

இவ்வழைப்பிதழ் தங்கள் அனைவரையும் பரிபூரண நலன்களுடனும், உயரிய சமுதாய சிந்தனையுடனும் சந்திக்க பிரார்த்திக்கிறோம். ஆமீன்!.

கடந்த நோன்புப் பெருநாளின் போது ஐக்கிய அரபு அமீகரத்திலுள்ள அதிரைவாசிகள் தேரா ஈத் திடலில், சிறுதுளியாக ஒன்றினைந்த நிகழ்வு நாம் அறிந்ததே (அல்ஹம்துலில்லாஹ்!.), இது போன்று இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளன்றும் அனைத்து முஹல்லாவாசிகள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நமதூரில் உள்ள தீனுல் இஸ்லாம் சங்கம்-கடல்கரைத் தெரு, இளைஞர் நற்பணி மன்றம்-தரகர் தெரு, மதரஸத்துன் நூருல் முஹம்மதியா சங்கம்-கீழத் தெரு, ஷம்சுல் இஸ்லாம் சங்கம், மிஸ்கீன் பள்ளி முஹல்லா சங்கம்-புதுத் தெரு, நெசவுத் தெரு பொது நல அமைப்பு மற்றும் தாஜுல் இஸ்லாம் சங்கம்-மேலத் தெரு, ஆகிய முஹல்லாவாசிகளை AAMF(துபை)ஒருங்கிணைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

இதுபோன்ற சந்திப்புகளினால், நமக்குள் நல்ல இணக்கங்கள் தொடருவதற்கும்நம் எதிர்கால சந்ததிகளின் நலனில் அக்கரைக் கொள்வதற்கும்நமதூரின் பொதுவான நல்ல காரியங்களை ஒன்றிணைந்து செயல்படுத்துவதற்கு மிகவும் பயனளிக்கும் எனAAMF கருதுகிறது. ஆகவே இன்ஷாஅல்லாஹ் வருகிற காலங்களிலும் ஒவ்வொரு வருடமும் இரு பெருநாட்களிலும் இதுபோன்ற பெருநாள் சந்திப்புகளை தொடர்ந்து நடத்துவது என AAMFமுடிவு செய்துள்ளது.

இவ்வழைப்பிதழ் கிடைக்கப் பெறுகிற சகோதரர்கள் அனைவரும் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், துபை மற்றும் ஏனய அமீரக மாநிலங்களில் வாழ்கிற தாங்கள் அறிந்த நமதூர் சகோதரர்களுக்கு இந்நிகழ்வைத் தெரிவித்து இப்பெருநாள் சந்திப்பில் கலந்துக் கொள்ளச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஹஜ்ஜுப் பெருநாள் சந்திப்பு நம் உறவுகள் மேன்பட வழுவூட்டட்டும்!

குறிப்பு: பெருநாள் தெழுகை முடிந்த உடன் அரை மணி நேரத்திற்குள் நிகழ்ச்சி நிறைவுபெரும்.

அன்புடன்,
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு(AAMF)
துபை –  ஐக்கிய அரபு அமீரகம்.

2 பின்னூட்டங்கள்:

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அல்ஹம்துலில்லாஹ் இது போன்ற இணக்கமும் ஒத்துமையும் நிலைத்து நிற்க வல்ல ரஹ்மான் துணை நிற்பானாக, பல்வேறு இயக்க பிரிவினைக்கு அரபுலகத்தில் அமீரகம் பெயர் போன ஒன்று. சமுதாய பிரிவினைவாதிகளுக்கு இதில் இடமளிக்காமல் சீரிய சிந்தனையும் உயரிய வழிகாட்டுதலும் கொண்ட நல்ல வலுபெற்ற இயக்கமாக அல்லாஹ் ஆக்கி அருள்வான் ஆமீன் - குறிப்பு ஊர் வாசிகளுக்கு உள்ளூரில் தொழில் செய்ய வழிமுறை செய்ய முயற்சிக்கும்.

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வெளிநாடு வாழ்க்கையில் இருப்பவருக்கு ஒரே கோட்டில் நிற்கணும் என்ற ஆசைதான். அதுதான் ஒற்றுமை.

பெருநாள் சந்திப்பு ஏற்பாடு. (ஏற்ப்புடைய பாடு) ....ஓஹோ..............நல்ல விஷயம்....

இவர்களின் தேடல்கள் என்ன....
இவர்களின் லட்சியம் என்ன....
இவர்களின் கனவுகள் என்ன....
இவர்கள் எதை கையில் எடுத்துக்கொள்ளபோகிரார்கள்.....
அப்படியும் கையில் எடுத்தால் கால் நூற்றாண்டாவது இதை திறம்பட செய்வார்களா......

என்ன செய்வார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்
thuklaknews@gmail.com

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.