நமதூரில் வெள்ளைக்காரன் காலத்து மின்கம்பிகளும், மின்கம்பங்களும் இருப்பதை அறிவோம். ஊர் பெரிதாகிவிட்ட நிலையில் கடந்த 20 - 25 வருடத்திற்குமுன் நிறுவப்பட்ட மின்மாற்றிகளின் உதவியுடனே இதுவரை அரைகுறை மின்சாரம் வந்து கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் மின்சாரப் பொருட்களான வாசிங்மெசின், கம்ப்யூட்டர், பிரிட்ஜ், ஏசி என்று ஏகத்துக்கும் மின்சாதனப் பொருட்களை வாங்கி குவித்திருக்கிறோம். மின்சார நுகர்வு அதிகளவில் அதிகரித்திருக்கிறது. மின்கட்டணமும் சொல்லவேண்டியதில்லை.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் செக்கடி மோடில் ஆய்வு செய்யப்பட்டபோது
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் 26/05/2011 அன்று பட்டுக்கோட்டை வட்ட மின் குறைதீர்ப்பு ஆணையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் திருச்சி E.O. திரு. தங்கராஜிடம் திறன் குறைந்த மின்மாற்றிகளை நீக்கி அதிகத் திறன் கொண்ட மின்மாற்றிகளை மாற்றித்தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.
அவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு உடன் நடவடிக்கை எடுக்க உத்தவிட்டதன் பேரில் அதிரை A.O. தலைமையில் மின்மாற்றிகளின்(TRANSFORMER) திறன் அளக்கப்பட்டது. முதலில் செக்கடிமேடு அருகில் இருக்கும் மின்மாற்றிகளை குறைவாக இருப்பதாக குறிப்பிட்டு அதற்கு அருகில் அதிக திறன் கொண்ட மின்மாற்றிகள் (TRANSFORMER) பொருத்தி தருவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக நேற்று(16/07/2011) கிழத்தெருவில் இருக்கும் மின்மாற்றிகள் (TRANSFORMER) குறைந்த திறன் கொண்டதை மாற்றித்தர முடிவுசெய்து 18ஆம் என் கொண்ட மின்மாற்றிகள்(TRANSFORMER) கழட்டப்பட்டு வருகிற திங்கக்கிழமை மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
இதுமட்டும் அன்றி கடந்த (11/07/2011) அன்று நடைபெற்ற குறை கேட்பு முகாமில் மின் துறை சமந்தமாக் பெறப்பட்ட மனுக்களை அதிரையின் மின் அலுவலர் JE அவர்களிடம் தமுமுக சார்பாக மனு கொடுக்கப்பட்டது .
நேற்று(16/07/2011) அதிரையின் மின் அலுவலர் JE அவர்களிடம் தமுமுக சார்பாக மனு கொடுக்கப்பட்டபோது
1 பின்னூட்டங்கள்:
நல்ல முயற்சிகள்... நல்ல துவக்கம் !
மின் மாற்றிகளைப் போல் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களை மாற்றி த.மு.மு.க.களம் கண்டால் உரிமையோடு தட்டியும் கேட்கலாம் ஆங்காங்கே எதிர்ப்பு தட்டிகள் வைக்காமல் !
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment