அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Tuesday, July 5, 2011

யுவதிகள் படும் அவதி!




கேஸ் பதிவதற்கு இன்று(05/7/2011) தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்களுக்கு தொலைபேசியில் பதியப்படமாட்டாது என்றும் நேரில் குடும்ப அட்டையுடன் வரவேண்டும் என்றும் கேஸ் நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக முன்னறிவிப்பு செய்யப்பட்டதாக தகவல் இல்லை.

பட்டுக்கோட்டை செல்லும் வழியில் அமைந்துள்ள இந்தியன் கேஸ் அலுவகத்தில் ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து பதிவு செய்தனர்.

குடும்ப அட்டைகளை சரிபார்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சரிபார்க்கும் பணி பத்து நாட்களுக்கு நடைபெறும் என்று தாசில்தார் அலுவலக ஊழியர் ஒருவர் நமது செய்தியாளரிடம் தெரிவித்தார். பொதுமக்களை பாதிக்காமல் இருந்தால் சரிதான்.

5 பின்னூட்டங்கள்:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

தகவல் உடனே பதிந்தமைக்கு நன்றி !

தலைப்புக்கும் செய்தின் உள்ளடக்கத்திற்கு சம்பந்தமில்லாததுபோல் ஒரு உணர்வு !

அதிரைப் புதியவன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

நமதூரில் கேஸ் நுகர்வோர் அநேகர் பொண்டுவோ என்பதும் அவர்கள் நேரில் செல்வது என்பது மிகவும் கடினம். அந்த அடிப்படையில் தலைப்பு கொடுத்திருக்காக என்டு நினைக்கிறேன். அதிகாரிகல் வீடுவீடாக சென்று சோதித்துக்கொள்ளலாமே.

அபு இஸ்மாயில் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

அஸ்ஸலாமு அழைக்கும்
அதிரை BBC க்கு எனது துஆவும் வாழ்த்துக்களும் இதை போல்நல்ல மற்றும் அவசியமான செய்திகளையும் வழிகாட்டல்களையும் பதிந்தால் நலம். உதரணமாக ஸ்காலர்ஷிப் விசயமாக நம் பெண்கள் பட்ட கஷ்டங்களையும் என்ன செய்வது என்று தெரியாமல் அலைந்ததையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இது எனது அபிப்பிராயம்.

நான் விசாரித்த வரையில் ரேஷன் கார்டில் பழைய டீலர் நாடியம்மன் காஸ் ஏஜென்சி பெயரை மாற்றவும் மற்றும் சிலிண்டர் எண்ணிக்கை குறிக்கவும் கேட்பதாக சொன்னார்கள் அது மட்டுமில்லாமல் தற்பொழுது மண்ணெண்ணெய் 2 சிலிண்டர் உள்ளவர்கள் வாங்குவதாகவும். அதனால் அதை ரேஷன் கார்டில் குறிக்கவும் கேட்பதாக நான் அறிந்த தகவல்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

தம்பி அபுஇஸ்மாயில்: வெல்டன் ! நல்ல தகவல் பரிமாற்றம் !

பாத்திமா ஜொஹ்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 5

பெண்கள் பாடு திண்டாட்டம்தான்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.