
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திரதின அணிவகுப்பு நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் தமிழகத்தின் ஒரு பகுதியில் நடத்தபடுவது வழக்கம் . அந்த வகையில் இந்த வருடம் நெல்லைமாவட்டத்தில் நடைபெறவுள்ளது . அந்த அணிவகுப்பிற்கு முன்னோட்ட நிகழ்ச்சியாக நமதூர் ITI அருகில் கடற்கரைதெரு மைதானத்தில் நாளை (17/7/2011) பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை அணிவகுபு நிகழ்ச்சியின் முன்னோட்டம் நடைபெற உள்ளது . தஞ்சை ,திருவாரூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 200 பேர் பங்கு பெறுகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக PFI வின் மாநில செயற்குழு உறுப்பினர் சாஜஹான் BABL அவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றார்கள். இன்ஷா அல்லாஹ் அந்த நிகழ்ச்சியின் காணொளியை அதிரை பிபிசியில் காணலாம் .
4 பின்னூட்டங்கள்:
இந்திய விடுதலை இனிதாய்ப் பெறச்
சிந்திய இரத்தம் சிந்தை ஏற்கும்
முந்தியத் தலைமுறை முடித்த வெற்றி
பிந்தியத் தலைமுறை பெறுதல் பெற்றி (சிறப்பு)
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
சுதந்திரம் சுவாசமாகிட
இழந்தவைகள் ஏராளம்
இஸ்லாமியனும் இந்தியனே
என்றிருக்கும் நிலைமாற்றிட
எத்தனிக்கும் எத்தர்களை
எதிர்கொண்டிட தேவை தேவை
இத்தகைய அணிவகுப்புகள் !
இந்தியனென்று சொல்லிடுவோம்
இஸ்லாமியன் தான் என்றும் சொல்லிடுவோம் !
விடுதலைப் போரில் தன் கல்வியினைத் தியாகம் செய்துச் சிறைச் சென்று பின்னர் முதல் சுதந்திர நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத் (அவர்கள் நினைவாகவே எனக்குப் பெயரிடப்பட்டதில் எனக்கும் நாட்டுப் பற்று மிகுதி)அவர்களை இன்றுள்ள சோனியா காங்கிரஸ் மறந்து விட்டது. நமதூர் பேரூராட்சியினர் எல்லாத் தெருக்களிலும் காங்கிரஸ் சுதந்திர தியாகிகள் பெயரினை வைத்து (நேதாஜி , நேருஜி) தெருக்கட்கு பெயர் மாற்றம் வைத்தனரே. முஸ்லிம்கள் அதிகம் உள்ள ஊரில்,முஸ்லிம் காங்கிரஸ் தியாகி ஆசாத் அவர்கள் பெயரில் ஏதேனும் தெருவுக்குப் பெயர் உண்டா? அதனாற்றான், நான் வாழும் நேருஜித் தெரு வீட்டின் முன்பாக என் வீட்டின் பெயராக “ஆசாத் மேன்ஷன்” என்று பெயரிட்டு அப்பெருந்தலைவரை நினைவூட்டுகின்றேன்
இந்தியனென்று சொல்லிடுவோம்
இஸ்லாமியன் தான் என்றும் சொல்லிடுவோம் nazer
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment