அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, October 15, 2011

வாக்காளர்களுக்கு அய்டா (AYDA) ஜித்தாவின் பணிவான வேண்டுகோள்!

சங்க வார்டு உறுப்பினர்களுக்கு ஆதரவான வேண்டுகோள்
அதிரை வாக்காளர்களுக்கு அய்டா ஜித்தாவின் பணிவான வேண்டுகோள்! 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

பெருமதிப்பிற்குரிய வாக்காள பெருமக்களே, உங்கள் பொன்னான வாக்குகளை உங்கள் கண்ணான வேட்பாளருக்கு அளிக்க இருக்கும் இத்தருணத்தில் கடல்கடந்து, உற்றார் உறவினரை துறந்து தூர தேசங்களில் பொருளீட்டும் நோக்கில், சவுதியில் புனித மக்கா, மதீனாவிற்கும் அருகில் உள்ள ஜித்தாவில் இயங்கி வரும் AYDA (அதிரை இளைஞர் மேம்பாட்டுக் கழகம்) ஊர் மக்களிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறோம். கடந்த 20 வருடங்களாக ஒரு குழுமமாக இயங்கி வரும் நாங்கள்(அய்டா) ஊர் நலனில் அக்கறை கொண்டு நல்ல பல திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்து பல தர்ம காரியங்களை அல்லாஹ்வுக்காக செய்து வருகிறோம். மேலும் அதிரை பைதுல்மால் உருவாவதற்க்கு முக்கிய காரணியாகவும் அதன் வளர்ச்சியில் தொன்று தொட்டு தோல் கொடுத்து வருகிறோம்.

நமதூர் பேரூராட்சி தேர்தலில், தேர்ந்தெடுக்கப்படும் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில், ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் நிருத்தப்பட்டுள்ள வேட்பாளர்களை ஆதரிக்கும் நோக்கில், ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் இந்த சீரிய முயற்சியை ஆதரித்து, ஊர் ஒற்றுமையை மனதில் கொண்டு நமதூர் ஆலிம்களின் ஆலோசனை பேரில் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படும் இஸ்லாமிய நெரிமுறைக்கிணங்க ஷம்சுல் இஸ்லாம் சங்க வழிநடத்தலில் கீழ் கண்ட ஷம்சுல் இஸ்லாம் சங்க ஆதரவு வேட்பாளர்கள் அனைவர்க்கும் வைரம் சினத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

1 வது வார்டு S . ஜெகபர் சாதிக் 


12 வது வார்டு M.K. முஹம்மது ஹனீபா


13 வது வார்டு J. சம்சுதீன்


14 வது வார்டு M.A. ஷேக் அப்துல்லாஹ்


19 வது வார்டு A.H. செளதா 


21 வது வார்டு H . முஹம்மது இப்ராஹீம்

"வாகளிக்க இயலாத வெகு தூரத்தில் இருக்கும் நாங்கள் நம் ஊரின் முன்னேற்றத்தை கருதி எங்களின் சொந்தங்களாகிய உங்களின் பொண்ணான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் வைரம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைய செய்ய வேண்டுமாய் மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்"


இங்ஙணம்,
அதிரை இளைஞர் மேம்பாட்டுக் கழகம் - AYDA,
ஜித்தா, சவூதி அரேபியா.

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.