நம் அதிரை சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்...
நம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பேரூராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலில் மத நல்லிணக்கம் வென்றுவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் சங்கத்தை எதிர்த்தவர்கள் தோற்க்கடிக்கப்பட்டுவிட்டார்கள். இது சங்கங்களுக்கு கிடைத்த வெற்றி… அல்ஹம்துலில்லாஹ்!
இதற்காக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு ஊரின் நலனுக்காக மட்டுமே செயல்பட்டு பெருமுயற்சி எடுத்தவர்களின் நோக்கம் பின் வருமாறு:
1. தலைவரும், துணை தலைவரும் ஒரே கட்சியை அதுவும் மாநிலத்தை ஆளாத ஒரு கட்சியின் வேட்பாளராக இருந்தால் திட்டங்கள் ஊருக்கு வந்தடைவது மிகச்சிரமமாக இருக்கும்.
2. மேற்சொன்னபடி, இது சேர்மன் அஸ்லம் அவர்களுக்கு சேவை செய்வதற்க்கு மறைமுக உதவியாக இருக்கும், இப்பொழுது இது அவருக்கு கசப்பாக இருக்கலாம், ஆனால் காலம் கனிய கனிய இன்ஷா அல்லாஹ் அதை அவரே உணர்வார்.
3. மத நல்லிணக்கம் பேணப்படவேண்டுமென்று சில சங்கங்கள் தேர்தலுக்கு முன்பு முடிவு செய்தததை செயல்படுத்துவது..
அதிரை பேரூராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலுக்கு முன்பு தமுமுக சகோதரர்கள், துபை வாழ் ஜித்தா சாஹுல் ஹமீத் காக்கா, சகோ. M.S. சஹாபுதீன் காக்கா, மேலத்தெரு சங்கம், கடற்கரை தெரு ஹாஜா (முஹல்லாஹ் தலைவர்) மற்றும் பலரால் கீழ்கண்ட நிபந்தனைகள் திரு பிச்சை அவர்களுக்கு விதிக்கப்பட்டு வாய்மொழி ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
1. ஒரு சாரார் நிலை எடுக்கக்கூடாது.
2. கட்சி சார்பற்று அனைவரையும் அரவனைத்து செல்ல வேண்டும்.
3. ஊருக்கு நல்ல திட்டங்களை கொண்டுவருவதில் சேர்மன் சகோ அஸ்லத்தோடு இணக்கமாக இருந்து செயல்பட வேண்டும்.
4. ஒரு வருட செயல்பட்டிற்க்கு பின் துணை தலைவரின் செயல்பாடு மதிப்பாய்வு செய்யப்படும், மேற்கூறப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மாறாக செயல்பாடுகள் இருக்கும் பட்சத்தில், தகுந்த ஆதாரங்களோடு இருக்குமாயின், அவரை மறுபரீசலனை செய்யப்படும்.
0 பின்னூட்டங்கள்:
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment