![]() | இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல் 0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2... More Link |
2 பின்னூட்டங்கள்:
இந்த பதிவு தனி நபர் தாக்குதலோ/தனி நபர் அவமதிப்போ அல்ல. மனசாட்சி உள்ள அதிரை மக்கள் கேட்க வேண்டிய கேள்விகள்!. 45 வருடமாக அதிரை பேரூராட்சியை தன் கையில் வைத்து அதிரையை அதே 45 வருடங்களுக்கு பின் தள்ளிய வாரிசு அரசியல்வாதிகள் ஊருக்கு என்ன செய்தார்கள்? ரோட்டையும், மின்கம்பத்தையும் எத்தனை தடவைதான் காட்டி ஓட்டு வாங்கமுடியும்? உதாரணத்திற்கு: உங்களிடம் தலைமுறை தலைமுறையாக அரசியல் செல்வாக்கு இருக்கிறது, அதுவும் டெல்லிவரை இன்றுவரை உங்களுக்கு செல்வாக்கு இருந்தும் 3,4 வருடமாக அதிரை மக்கள் அகலரயில் பாதை கேட்டு அல்லாடாத நாட்கள் இல்லை? அதற்கான ஒரு வாயசைப்பு கூட நீங்கள் காட்டியதுமில்லை நாங்கள் பார்த்ததுமில்லை, நீங்கள் உண்மையில் ஊருக்காக ஒரு நல்ல சமுதாயச் சேவையை செய்ய நினைத்திருந்தால் இந்த விஷயத்தை கையில் எடுத்திருக்கலாமே! நீங்கள் நினைத்திருந்தால் மாயவரம் மணிசங்கர அய்யர் முதல் கப்பல்துறை அமைச்சர் வாசன், ஏன் அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கூட சந்தித்து எத்தனையோ விஷயங்களை ஊருக்காக சாதித்து இருக்கலாமே? நீங்கள் இந்த அகலரயில் விஷயத்தில் உங்கள் செல்வாக்கை உபயோகித்து இருந்தால் இன்று உங்களை எவரும் எதிர்த்து போட்டியிட்டு இருக்க மாட்டார்கள். அப்படி ஒருவர் எதிர்த்து நின்றால் நாங்களும் அவரை எதிர்த்து இருப்போம் வெற்றியை உங்களுக்கு சாதகமாக்க முயன்று இருப்போம்.
(சில வருங்களுக்கு முன்பு உங்கள் குடும்பத்தார் அமைச்சர் வாசன் அவர்களை அனுகி மாயவரம் தொகுதிக்கு சீட் கேட்டீர்கள் அவர்கள் அதற்கு மறுத்தது வேறு விஷயம்) உங்களுக்காக ஒரு அடி எடுத்து வைக்குக் நீங்கள் ஊருக்காக 2 அடி எடுத்து வைக்கக் கூடாதா? ரயில்வே பிரச்சினை வேறு, பஞ்சாயத்து போர்டு பிரச்சினை வேறு என்று பதில் கொடுக்க முயற்சிக்கலாம் இருப்பினும் இவ்வளவு செல்வாக்கு இருந்தும் எந்த முயற்சியும் நீங்கள் எடுத்ததே இல்லை என்பதுதான் எங்கள் ஆதங்கம். எல்லாம் வல்ல அல்லாஹ் நாடினால் யாரையும் ஏவி எந்த வேலையையும் வாங்குவான் என்ற என்ற நம்பிக்கையுடன் என் கருத்தை உங்களுக்காக பகிர்கிறேன்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment