அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Sunday, October 16, 2011

அதிரையின் தற்போதைய நிலவரம் - சேதி சொல்லும் பிபிசி காக்கையார்!

தேர்தல் வேலை ஆரம்பிச்சாச்சு என்கிற அறிகுறி நன்றாக தெரிகிறதே என்கிற முனுமுனுப்புடன் 'கோழி' மந்தியை சாப்பிட்டு வந்தியலா தொப்பை பெருசாயிடுச்சே என்று நக்கலுடன் வந்தமர்ந்தார் காக்கையார். நமக்கருகில் மார்டின் சட்டையுடன் அமர்ந்திருந்த ஒருவரின் பையில் இருந்த இரண்டு நூறு ரூபாய் தாள்களை ஓரக்கண்ணில் சாடையாக காண்பித்து சிரித்தார். 

பலநாட்களாக ஆளையே காணோமே ஓரு செய்தியும் சொல்லுவதில்லையே என்று அவரை கோபத்துடன் பார்க்கையில் சாந்தமாக நம்மைப் பார்த்து புன்முறுவலிட்டார். சரி நம்மை புரிந்து கொண்டிருக்கிறார் என்று பெருமூச்சுடன் ஆசுவாசப்படுத்திக்கொண்டோம்.

நம்மைப் புரிந்தவராக ஒவ்வொன்றாக புட்டுபுட்டு வைக்க ஆரம்பித்தார்.
முதலில் வார்டு வாரியாக தகவல்களை சொல்கிறேன் கேளும் .
18வது வார்டு நெசவுத் தெருவில் சென்ற மூன்று முறை உறுப்பினராக உள்ள நூர் முகம்மது இதுவரை திமுக, சுயேட்சை என்று மாறிமாறி இருந்து வந்ததும் கடந்த பதினைந்தாண்டுகளாக உறுப்பினராக இருந்து பெரியளவில் ஏதும் அப்பகுதி மக்களுக்கு செய்யாததும் அப்பகுதி மக்களை கடும்  அதிருப்திக்காளாக்கியுள்ளது. அதனால் அப்பகுதி மக்கள் இம்முறை சுயேட்சையாக இன்ஞினியர் படிப்பு படித்த இளைஞர் அபுதாகிர் என்பவரை நிற்கவைத்துள்ளனர். அதனால் சிறுவயதும், படிப்பும், சமூக ஆர்வமும் ஒருசேர அபுதாகிரின் வெற்றி உறுதியாகிவிட்டது என்கிற செய்தியுடன் விறுவிறுப்புடன் ஆரம்பித்தார் காக்கையார்.
'அதுமட்டுமில்லை, ஏற்கெனவே நூர்முகம்மதுடன் பெரிய குடும்பத்தினருக்கு பகை இருந்ததால், இம்முறை நூர்முகம்மதை தோற்கடிக்கவேண்டும் என்று அபுதாகிரை அழைத்து பேசினார்களாம். அப்போது தலைவர் போஸ்டுக்கு தங்களை ஆதரிக்கும்பட்சத்தில் உம்மை ஜெயிக்க வைக்கிறோம் என்று சொல்லப்பட்டதாம். அப்போது துணைத்தலைவர் போஸ்டை பற்றி வரும்போது அது முன்னாள் துணைச்சேர்மனுக்கு தான் என்று தேர்தல் ஆணையர் அய்யரிடம் ஏற்கெனவே சொல்லிவைக்கப்பட்டது போன்று சொல்லப்பட்டதாம்.


காக்கையாருக்கு அப்பியான் கடை அருகில் இருக்கும் கடை ஒன்றிலிருந்து வாங்கி வந்த வடை ஒன்றை வாயில் போட்டு 'சேர்மனுக்கு போட்டியிடுபவர்களின் வேட்பு மனு தாக்கலின் போது நடைபெற்ற தகவல்கள் ஒன்றையும் சொல்லவே இல்லையே' என்றோம்.
'திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கழகத்தில் உள்ள தற்போதைய நகரச்செயலாளரின் தந்தை யின்  சிலைக்கு மாலை அணிவித்து பின் ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்தாராம். இது பலரது முகம் சுளிக்கவைத்தது என்று பேச்சு.


காக்கையார்: அம்மா மாதிரி ராகு காலம் பார்த்து மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக அதிரை செயலர் சொல்ல ராகுகாலமாவது மண்ணாங்கட்டியாவது என்று சொல்லி மறுகணமே சென்று மனுதாக்கல் செய்தாராம் இவரு. எது எப்படியோ மாற்றம்வேண்டும் என்று முணுமுணுக்கிறார்கள் சிலர்.

'
தேர்தல் அறிவிக்கப்பட்டபிறகு மரைக்காபள்ளியில் நடந்ததை சுறுக்கமாக சொல்லும்'

காக்கையார்: மமக சார்பில் முதல் நாள் அறிவிக்கப்பட்ட செய்யதும், அதிமுகவில் சீட் கேட்டு கிடைக்காமல் அதிருப்தி வேட்பாளராக சுயேட்சையாக களமிறங்கிய அகமது ஹாஜா, ஆத்திரேலியா, துபாய், சவூதி, மற்றும் லண்டன் நாடுகளில் வசிக்கும் அநேக உள்ளூர்வாசிகள் முடிவு செய்து தேர்தலில் நிற்க கேட்டுக்கொண்டதன் பேரில் போட்டியிட்ட அன்வர் காக்கா ஆகிய மூவரும் மரைக்கா பள்ளியில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க அல்லாஹ்விற்காகவும், சமூக ஓட்டுக்கள் பிரிந்து விடக்கூடாது என்பதற்காகவும் வாபஸ் வாங்குவதாக அறிவித்தனர். 

இதனை கேள்வியுற்ற வெளிநாடுவாழ் சகோதரர்கள் பலர் சமூக அக்கரையுடன் விலகியதற்கு வெளிநாடுகளிலிருந்து சகோதரர்கள் தொலைபேசியில் அழைத்து நன்றி சொல்லி துஆ செய்தார்களாம்.

அன்று சென்னையில் இருந்ததால் முனாப் அவர்கள் ஆலோசனையில் கலந்து கொள்ள இயலவில்லை, அதனால் முஸ்லிம் லீக் சார்பில் கேகே ஹாஜா கலந்து கொண்டார். ரொம்பநாட்களுக்குப் பிறகு தேர்தலில் நிற்பதால் தாங்கள் விலகப்போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

பெரிய வீட்டுக்குடும்பத்தால் கேகே ஹாஜா அவர்கள் மூலமாக வக்கீலை தேர்தலில் நிற்கவைத்து காய் நகர்த்தியதாக பெரும்பாலும்கூறப்பட அதை வக்கீல் மறுத்து துண்டு பிரசுரம் விநியோகித்து பிரச்சாரத்தில் தீவிரமாகவிட்டார்.


அது சரி இது உண்மையா?


அது இறைவனுக்கு மட்டுமே வெளிச்சம்.!!!


அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரோ தர்மசங்கடமாக இருப்பதாகவும், இதுவே 25 நாள் முன்பு கேட்டிருந்தால் விலகியிருப்பேன் என்றும் தெரிவித்திருக்கிறாராம், இது எதிர்பார்த்ததுதான்..!



திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அவர்களோ தான் ஊருக்காக நிறைய செய்திருப்பதாகவும் இத்தேர்தல் தனக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பு என்று கூறி அவரும் பின்வாங்கிவிட்டார். ஆக தங்களது முயற்சியால் களத்தில் இருந்த மூவரை மட்டுமே விலக்க முடிந்ததாக கூறி பாதிவெற்றியுடன் ஆலிம்கள் கூட்டிய கூட்டம் நிறைவடைந்துள்ளது. அதேசமயம், அனைத்து சங்கங்களும் கலந்து கொண்டிருக்க குறிப்பிட்ட சங்கம் ஒன்று மட்டும் நீங்கள் வேறு முடிவு எடுத்தால் எங்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்று கூறி பின்வாங்கியது பலரையும் கவலையடையச்செய்தது என்பது மட்டும் உண்மை. ஆலிம்களுக்கு கண்ணியம் கொடுத்து ஒரு (இம்)முறை கலந்து கொண்டிருக்கலாமோ என்றும் பலரது சிந்தையில் இன்றுவரை ஓடிக்கொண்டுள்ளது
'கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவிற்காக கடுமையாக வேலைசெய்த தேமுதிக செயலாளர் தனது தெருவைச்சேர்ந்த பெரிய குடும்பத்தினருடன் பகைக்கவேண்டாம் என்று சேர்மன் போஸ்டுக்கு நிற்கலையாம். அதற்கு பதிலாக அவர்மனைவிக்கு ஒரு வார்டு விட்டுக்குடுக்கப்பட்டது.   வேறு முஸ்லிம்களும் முன்வராததால் மாற்று மதத்தவர் ஒருவருக்கு தேமுதிக வேட்பாளர்க்கு  கொடுக்கப்பட்டதாம்.'
அதுசரி மமக என்ன செய்கிறதாம்?

மமக சார்பில் மூன்று வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக ஆதரித்து வேலை செய்கிறார்கள். அதில் ஒன்று அபுதாகிர், மற்றொன்று கம்யூனிஸ்டு கட்சியை சார்ந்த காளிதாஸ் இவர் காந்தி நகர் - தரகர் தெருவில் போட்டியிடுகிறார், மற்றொருவர் காலனி மற்றும் கோழியப்பர் தெருவில் தேமுதிக சார்பில் போட்டியிடும் பஞ்சவர்ணம் என்பவரை ஆதரிக்கின்றனர். இந்த தொகுதி தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியாகும்.


ஆனால் தேவையில்லாமல் 3வது வார்டில் (பழஞ்ச்செட்டித்தெரு) சாகுல்ஹமீது (சாந்தாபோட்டியிடுவது மமக கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மைதான்.!., இது மாற்றத்திற்கான அரசியல் அல்லவா???!!
அப்படியா ? 


11வது வார்டில் தற்போதைய கவுன்சிலர் மனைவியை எதிர்த்து தமீம் என்பவரின் மனைவி போட்டியிடுகிறார். ஏற்கெனவே ஆளுங்கட்சியாய் இருந்தபோதே இலவசமாக வழங்கப்படும் பிறப்பு சான்றிதழை பெற்று தருவதற்கே கவுன்சிலரின் கணவர் ஆயிரம் ரூபாய் வரை கறந்ததை இப்பகுதி மக்கள் இன்றும் எரிச்சலுடன் பார்க்கின்றனர். அதனால் தமீமின் மனைவி வெற்றி அநேகமாக உறுதி என்று கேள்வி!.
'மமூசே குடும்பத்தினர் இம்முறை இரண்டு வார்டை விட்டுக்கொடுத்தார்களாமேபெரும் தியாகம்தான்..!!



ஆமாம்..எந்த தடவையும் விட்டுக்கொடுக்காத பெரிய குடும்பம் இம்முறை மேலத்தெருவில் தாஜுல் இஸ்லாம் சங்கத்திற்காக விட்டுக்கொடுத்துள்ளது.
கடந்த முறை வெறும் 20 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற லத்தீப் இம்முறை அதிமுக சார்பில் இருவரை நிறுத்தியுள்ளார். ஒருவரின் வெற்றி
வாய்ப்பு அதிகம் என்று தெரிகிறது. கீழத்தெரு வார்டில் மமக சார்பில் சாந்தாவின் மனைவி போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பாக மமூசே குடும்பத்தினர் ஒருவரை நிறுத்தியுள்ளனர்.  திமுகவும் தன் பங்குக்கு ஓட்டை பிரிப்பதால் அங்கும் இழுபரிதான் .

சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் போட்டியிடும் ஆறு உறுப்பினர்கள் மற்றும் தாஜூல் இஸ்லாம் சங்கம் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள இருவருக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. சில குடும்பத்தினர் எதிர்த்து போட்டியிட்டாலும் சங்கம் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளவர்களுக்கே ஓட்டு என்று கூறி வருகின்றனர். 
..ம்...

மமகவின் கணக்குப்படி அதிமுகவும் திமுகவும் துணை சேர்மன் பதவிக்கு வந்துவிடக்கூடாது. அதனால் 17 (6 சம்சுல் சங்கம்+2 தாஜுல்+3 ஆதரவு+ 4 போட்டி + இருவர்) உறுப்பினர்கள் வரை வெற்றி பெற்றாக வேண்டும் என்று கூறிவருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் கடந்த காலங்களில் திமுக நகரச்செயலாளர் முஸ்லிம் விரோதப் போக்கை கணக்கில் கொண்டு அவரை தோற்கடிக்க மமகவினர் அதிமுக வேட்பாளர் உதயகுமாருக்கு ஆதரவாக   மறைமுகமாக வேலை செய்து வருகின்றனர். முஸ்லிம்கள் ஓட்டு சுமார் 300 ஓட்டுகள் உள்ள அப்பகுதியில் அநேகர் உதயகுமாரரை ஆதரித்தால் குணசேகனின் வெற்றிக்கு கடுமையான நெருக்கடி இருக்கும் என்று கூறுகின்றனர்.



அதுசரி அதிமுக நிலைமை என்னவாம்?


எப்படியோ உறுப்பினர் இல்லாமலேயே சீட்டுவாங்கினாராம்! இது எப்படியா சாத்தியம் என்று கட்சிக்குள் முணுமுணுக்க, அட போங்கையா அம்மா வின் சிநேகிதி வட்டாரத்தை வைத்து காய் நகர்த்தியுள்ளார். இந்த விஷயம் என் கவனத்திற்கே வரவில்லை என்றாராம் அமைச்சர் வைத்தி.சீட்டு வாங்கியதுதானாம் வந்தவர் பணத்தை வாறி இறைக்கிறார். கோபக்காரர் என்று சொன்னவர்கள் எல்லாம் ஆளும்கட்சி வந்தா நல்லது என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர் என்று அவரின் ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்.
இதற்கு பதிலடியாக மோடிக்கு ஆதரவான கட்சிப்பா என்று எதிர் தரப்பு பிரச்சாரம் செய்கின்றது. அம்மா அறிவித்துள்ள பேன், மிக்சி, கிரைண்டர் விண்ணப்ப விநியோகம் படு ஜோராக நடக்கிறதாம். என்னசொல்வது தேர்தல் விதி மீறல் என்பதெல்லாம் ஆளும் கட்சிக்கு இல்லைங்கோ..!


இரு தரப்பையும் ஆதரித்து மற்றும் சூசகமாகசாடிவரும் துண்டு நோட்டிஸ்ஸால் அவ்வபோது பரபரப்பு ஏற்படுகிறது.


கை என்ன சொல்கிறது?! 


40 வருடம் ஆண்ட பாரம்பரிய குடும்பம் அதிகார வட்டாரத்தை நன்கு தெரிந்தவர். வேட்பாளர் சற்று கோபக்காரர். முழுக் குடும்பமும் காரில் வலம் வருகிறார்கள். தெருபலம் மற்றும் கட்சி பலம் தன்னை ஜெய்க்கவைக்கும் என்று நம்புகிறார். ‘கை’ விடாமல் தெருதோரும் வலம் வரும் ஆதரவாளர்கள். பேருராட்சி தலைவர் பதவியை கோட்டை விடக்கூடாதுன்னு ஒற்றைக் காலில் நிற்கும் ‘கோட்டை அமீரின்’ சொந்தங்கள்.

'திமுக குணசேகரனின் நண்பர்கள் ரொம்ப சந்தோசத்தில் உள்ளார்களாமே?'

'ஆமாம். இருக்காதா பின்ன. குணசேகரனின் தந்தை இராமச்சந்திரன், பாட்சா மரைக்காரால் அரவணைக்கப்பட்ட தோடல்லாமல் தமது பதவிகளையும் அவருக்காக விட்டுக்கொடுத்தனர். கடந்த முறை சாச்சாவால் குணசேகரன் அரசியலில் தூக்கி விடப்பட்டார். கடந்தமுறை திறமையான மற்ற முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்தும் துணைசேர்மன் பதவிகொடுத்து கவுரப்படுத்தினார். தனது குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருவரை கூட வளர்த்துவிடவில்லை. 

ஆனால் தற்போதும் அக்குடும்பத்தினர் துணை சேர்மன் பதவி குணசேகரனிற்கு என்று கூறி வருகின்றனராம். அது மட்டுமில்லாமல்திமுக வேட்பாளர் ஜெயிச்சாலும் அவர் வெளிநாடு சென்றுவிடுவார். துணை சேர்மன், சேர்மனாக பவனிவரலாம் என்று படு சந்தோசத்தில் உள்ளனராம்.'


ஒரு சங்கதி தெரியுமா உமக்கு, தற்போதைய எம்எல்ஏ ரெங்கராஜன் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரமாட்டார் என்று திமுகவிலுள்ள முக்கிய பிரமுகர்  சொல்லி வந்திருக்கிறார், கோபம் அடைந்த காங்கிரஸ் தரப்பு வாசன் மூலமா ஊருக்கு வந்து பிரசாரம் பண்ண வைத்தது.  சாச்சா இருந்த வரைக்கும் அவரை கேட்டு செஞ்ச எம்எல்ஏ இப்படி ஆஹிட்டாரே என்று நொந்து கொள்ஹின்றனர். இருந்தாலும் ரெங்கராஜன் MLAவின் நட்பு இன்றளவும் திமுக வேட்பாளரிடம் குறையவில்லையாம். நன்றி மறப்பது நன்றன்று..!

'மனுசன் சந்தோசமா இருக்குறது உமக்கு பிடிக்காதா?'

ஏன் பிடிக்காது? அதிரை பிபிசி ஆரம்பித்து நான்கு மாதத்திலேயே முதல் இடத்தில் வந்திருக்கிறோமே என்கிற சந்தோசத்தை உங்களிடம் பகிர்ந்துக்கிறேனே? தினமும் 1000 வாசகர்கள் வந்து செல்கின்றனர் என்கிற சந்தோசமான செய்தியைப்  பிடியும்.

'
சங்கம் தொடர்பில் அவதூறாக வெளியான செய்திக்கு சப்பை கட்டை கவனித்தீரா?'

'
ம்... கவனித்தேன். '

'
ஏற்கெனவே திமுக எதிர் நிலைபாட்டை எடுத்ததாக கூறி குற்றஞ்சாட்டியதும் தூக்கியெறிந்து வெளியேறியது உமக்குத் தெரியாதா என்ன?'

'
ம்..'
'ஆமாம். ஏற்கெனவே சென்ற தேர்தலில் ஓட்டுகளை அதிரையில் இழந்த திமுக வேறு வார்டில் வேட்பாளர்களை நிறுத்தாமல் சங்கம் நிறுத்தியுள்ள பகுதியில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனரே.
'வேறு எந்த தைரியத்தில், பணம் தான்! அதுதான் விநியோகிக்க கிளம்பிட்டாங்களே. 'கோழி' க்கு பெயர்போன கரைவேட்டிக்காரர் ஓட்டுக்கு 200 ரூபாய் பட்டுவாடாவை ஆரம்பிச்சுட்டார் தெரியுமா?' என்று போட்டுடைத்த காக்கையாரை 'சரி யாருக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றுக் கேட்டோம்.''தற்போதைய  ஆளும்கட்சி வேட்பாளரே  ரேஸில் முந்துகிறார் போட்டி  ஆளும் கட்சிக்கும் ஊரை ஆண்ட கட்சிக்கும் தான் என்று சொல்லி கா..கா என்று கரைந்து கிளம்பினார் காக்கையார்.

6 பின்னூட்டங்கள்:

M.B.A.அஹமது said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

என்ன காக்கையாரே நீண்ட நாட்களாக ஆளையே கானோமே தேர்தல் ஜுரம் 103 டிஹிரியை தான்டி கதகததுகொன்டிருந்தபோது காக்கையாரின் கட்டுரையை பிபிசியில் கன்டதும் ஒரு உற்சாகம் காக்கையாருக்கு பெரிய குடும்பத்திலும் ரசிகர் உண்டு இப்போதல்ல காக்கையாரே நீ முதன்முதல் பிபிசியில் குஞ்சு பொரித்தபோது பெரிய குடும்பம் உண்மைதான் பேசும் முஹமதிடம் நீன்ட தொலைவிலிருந்து தொலைபெசியில் அழைத்து காக்கையாருக்கு என்னுடைய சிறப்பு வாழ்த்தை தெரிவித்தேன் நான் 25 ஆண்டுகளாக ஜினியர் விகடனில் ஆந்தையாரை படித்துவந்துள்ளேன் அதிரை பிபிசியில் நாங்களும் காக்கையார் என்று எழுதுவோம்ல என்று முதல் கட்டுரையை பார்த்து பரவசப்பட்டு அதிரையிலும் ஆட்கள் உண்டு என்று சந்தோசப்பட்டு முஹமதிடம் அப்போதே காக்கையாருக்கு பாராட்டை தெரிவித்தேன் தொடரட்டும் காக்கையாரின் எழுத்து பணி

riyas said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தொடரட்டும் ! வாழ்த்துக்கள் !

Adirai Nesan said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

முதல் பத்தியே இருபத்தி ஐந்து வயதுக்கு மேல் உடைய கழுகாரை சாப்பிட்டுவிட்டீர். வடையை கொத்தி தின்னும் அதே சமயம் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொருவரையும் கொத்தி சாப்பிட்டுவிட்டீர். படத்தில் கொஞ்சம் மெலிந்தும், வெளுத்தும் போயிருக்கிரீரே வெளிநாட்டு விஜயம் செய்து வந்து இருக்கிறீரோ...? அதிரை பிபிசியை பற்றி சொல்லி எமக்கும் பாதி வடையை போட்டுவிட்டு, கடைசியில் மார்டின் சட்டைக்காரர் யார் என்று கக்கா போடாமல் சென்றீரே அது வரையில் சந்தோசம்.

M.B.A.அஹமது said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

காக்கையார் நீன்ட நாட்களுக்கு பிற்கு வந்துள்ளார் கழுகார் என்று சொன்னால் கழுகாரை பார்த்தால் உடனே பரந்து விடுவார் அதனாலேயே காக்கையாரை இன்னும் ரசிக்க வேண்டும் காக்கையாரை பயமுருட்த்தி விரட்டி விடவேன்டாம் எற்கனவே காக்கையாருக்கு பெரிய குடம்பத்தை சுத்தமாக பிடிக்க்வில்லை அவருடைய கட்டுரையை படித்தால் தெரியும் இதில் ஏன் காக்கையாருக்கு பயமான கழுகார் பெயரைசொல்லவேன்டும் என்ற நோக்கதில்தான் நானே ஆந்தையார் என்றேன் காக்கையாரே அடிக்கடி வந்து போகவும்

Mohamed Rafeek Taj said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அதிரையிலே இவ்வளவு தெய்ரியமான காக்கைய......??????

இந்த காக்கையை காட்டி எங்க வீட்டு பிள்ளைகளுக்கு சோறு தித்தலாம் ...

எந்த கொரபயலும் சுட்டுபுடாம இருக்கணும்

வாழ்த்துக்கள் !!!

abdul azeez said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

kaka yarea pinnittinga yannatha solrathu

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.