வெற்றி கனி !
நடந்து முடிந்த பேரூராட்சி தேர்தலில் ஜனாப் அஸ்லம் வெற்றிபெற்றுள்ளார். அல்ஹம்துலில்லாஹ் ! கடந்த வாரத்தில் எழுதிய வெற்றி யாருக்கு ? என்ற எழுதிய கட்டுரையை மீண்டும் நோக்கினால்., தி மு க அதிரை மக்களின் செல்ல பிள்ளை என்று எழுதி இருந்தேன்.
செல்ல பிள்ளை என்றால் செல்ல பிள்ளைதான். ஜனாப் அஸ்லம் கடந்த காலங்களில் எவ்வித பலனை எதிர்பார்க்காமல் பொது தொண்டுகளை செய்து வந்தார்.. மேலும் நல்ல குணங்களை கையாண்டு வந்தார். எந்த எதிர்ப்பார்புமின்றி நல்ல காரியங்களில் ஈடுபட்டால் இரண்டு உலகிலும் அதற்க்கான பயனை அடையடாலாம்.
வெற்றி பெற்றுள்ள அஸ்லம் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் , வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் ! எந்த காரணத்தை கொண்டும் நல்ல குணங்களை விட்டு கொடுக்காமல் நல்ல ஆட்சியை கொடுக்க வேண்டும் .
பெரியோர்களின் நல்ல வழி காட்டுலதுடன் தன் நற்பணியை தொடர அன்பார வாழ்த்துகிறோம் !
அப்துல் ரஜாக்
10 பின்னூட்டங்கள்:
CONGRATULATION TO ASLAM!!!!!
Let us pray for his good health and continuation of good works.........K.Shafeeq Ahamed.
Truly said.
Brother Aslam should now concentrate on the constructive issues, for which we have been waiting for. He should remember that although he contested as a party candidate, the victory could not have been achieved without the non-party supporters that he earned. Hence, he should now work solely as an Adraivaasy. He should manage himself to spend as many days in Adirai as possible. He should be easily reacheable by all means.
I would request here that even those who supported other candidates should work for the benefit of our community with the UNITY in mind, insha Allah.
Shahul Hameed,
Abu Dhabi
Alhamdulillah, It is good to hear this good news. Insha Allah Janab Aslam brother will fulfill all adirai peoples wishes.
Nijamudeen
Muscat
முஸ்லிம்கள் வாக்குகள் மொத்தமாய் இல்லாமல்
அஸ்லமின் வெற்றி அபூர்வமே என்பதில்
பாடத்தைக் கற்றதால்; பின்வரும் காலத்தில்
கேடயமாய் நின்றால் கூடும்.
இத்துணைப் பிரிவினைப் போட்டிகட்கிடையிலும் அன்புச் சகோதரார் என் அன்பு மாணவர் ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் தம்பி அஸ்லம் அவர்கள் அதிரைப் பேரூராட்சித் தலைவாராய் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தெரிவு செய்யப்பட்டச் செய்தி மகிழ்ச்சி அளிக்கின்றது. இவ்வளவு பேர் அவருக்கு நெருக்கடிகள் கொடுக்காமல் குறைவானப் போட்டிகள் இருந்திருந்தால் இன்னும் கூடுதலான வாக்குகள் பெறக்கூடிய செல்வாக்கும் சொல்வாக்கும் மிக்க நல்ல பண்புகளும், நற்சேவைகளின் பால் நாட்டமும் கொண்ட அவர்களால் பெற இயலும். எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. முன்னொரு முறை அஸ்லம் அவர்கள் செய்த நற்சேவைகளின் பலனால் இவ்வெற்றியை அல்லாஹ் அவ்ர்க்கு வழங்கியுள்ளான் என்பதால் அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் வண்ணம் மேன்மேலும் நற்சேவைகள் செய்வதுடன் அன்னாரின் தொடர்பு கைப்பேசி எண்ணைத் தவறாமல் தெரியப்படுத்தினால் நலம்.
Dear Kalam Kaka, Assalamu alaikkum wa rah., I would like to post Janab Aslam 's contact number +919790282432
Thanks Brother Nijamudeen (Muscat). I have immediately got response from you and my friend in uae about his contact number.
It shows our eagernes and awareness towards welfare of our born soil.
அதிரைப் பேரூராட்சியின் தலைவர் அஸ்லம் அவர்களிடம் உடனடியாகத் தொடர்பு கொள்ள இயலாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அளவுக்கு அவர்கட்கு வாழ்த்தலைகள் வந்து அலைபேசியினூடே அலைகளாய் பெரும் மலைகளாய்/ மாலைகளாய் விழுவதனால் சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொள்வேன்
இஸ்லாம் காட்டும் உமரின்(அலை)
இனிய பாதை ஆட்சி
அஸ்லம் காட்ட வேண்டும்
அதிரை பெறும் மாட்சி
இஸ்லாம் காட்டும் உமரின்(அலை)
இனிய பாதை ஆட்சி
அஸ்லம் காட்ட வேண்டும்
அதிரை பெறும் மாட்சி
இறைவனின் திருப்பெயரால்...
தேர்ந்துஎடுக்கப்பட்ட தலைவர் கவனம் செலுத்தவேண்டிய விசயங்கள்...
ஒன்று :
ஊரில் உள்ள அனைத்து சங்கத்தையும் இணைத்து ஒரு தலைமையில் கீழ கொண்டு வருவது.
இரண்டு :
வரதட்சனை வாங்க / கொடுக்க விடாமல் தடுக்க வழிவகை செய்வது.
மூன்று :
ஜகாத் முறையாக வாங்கி, அதிரை பைத்துல்மால்இடம் ஒப்படைத்து முறையாக விநியோகம் செய்ய வழிவகை செய்வது.
நான்கு :
அரசு உதவிகளை தவறாமல் அதிரைக்கு கிடைக்க வழிவகை செய்வது.
ஐந்து :
மின்சாரம் தட்டுபாடு, மாற்று வழியை கண்டறிந்து அதிரைவாசிகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவது.
ஆறு :
ஆட்டோவினால் நம்மவர்களின் பொருளாதாரம் அதிகமாக வீண் விரயமாகிறது, இதற்கு பதிலாக ஊர் முழுவதற்கும் பேருந்து வசித் செய்து தருவது.
ஏழு :
இரண்டு தர்காவில் மதிப்பிற்கு ஊறிய அவுலிய வின் பெயரால் தவறு (கூத்து / கும்மாளம் / குறத்தி ஆட்டம் / பிற அனச்சரங்கள் ) நடக்க விடாமல தடுத்து அவுளியாவின் பெயரால் நூல் நிலயம் (Public Library) துவங்க முயற்சி எடுப்பது.
Alhamdulillah all praic be to the allah.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment