அதிரையின் தற்பொழுது தேர்தல் ஜுரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது எங்கு பார்த்தாலும் நட்புகளையும் உறவுகளையும் தாண்டி தன் விருபப்பட்டவரை வெற்றிபெற வைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் .இன்று காலை 6மணிக்கே 1500 ரூபாய் வாடைக்கு பிடிக்கப்பட்ட ஆட்டோக்கள் தெருக்கள் தோறும் செல்வதை காணமுடிந்தது. சில இடங்களில் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் சிலர் இடு படுவதையும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காததையும் பார்க்க முடிந்ததது . அனைத்து வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் எங்கு செல்கின்றோம் என்று தெரியாமலையே தனது வாகனத்தில் சீறிப்பாய்ந்து செல்கின்றனர்.
ஓட்டுப்போட வரும் வாக்களர்களை தங்கள் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி மிகமிக கடைசி கட்ட பிரச்சாரத்தில் வாக்குச்சாவடி அருகில் சிலர் ஈடுபட்டுள்ளனர் . பல இடங்களில் பிரச்சினை வந்துவிடுமோ என்று எண்ணத்தோன்றுகிறது.
அப்படி நடைபெற்ற நாம் பார்த்த சில புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு கிழே
"இறைவா இந்த தேர்தல் முலம் வரும் பகைமையில் இருந்து இந்த ஊரை காப்பாற்றுவாயாக"
6 பின்னூட்டங்கள்:
//"இறைவா இந்த தேர்தல் முலம் வரும் பகைமையில் இருந்து இந்த ஊரை காப்பாற்றுவாயாக"//
இது நம் அனைவரின் பிரார்த்தனையாக இருக்கட்டும் இன்ஷா அல்லாஹ் !
ஆமின் !. இன்ஷா அல்லாஹ் !.
இறைவா இந்த தேர்தல் முலம் வரும் பகைமையில் இருந்து இந்த ஊரை காப்பாற்றுவாயாக
ஆமீன்....
//இறைவா இந்த தேர்தல் முலம் வரும் பகைமையில் இருந்து இந்த ஊரை காப்பாற்றுவாயாக//
பாம்பு புற்றுக்குள் கையை விட்டுவிட்டு “இறைவா பாம்பு கடியிலிருந்து என்னைக் காப்பாற்றுவாயாக” என்று கேட்பதற்கு ஒப்பானது இந்த பிரார்த்தனை.
தேர்தல் என்றாலே பதவிக்காக போட்டியிடுதல் என்றாகிவிட்ட பின்னர் ஒற்றுமை எங்கிருந்து வரும்? தேர்தலும் ஜனநாயகமும் இஸ்லாமிய வழிமுறை தான் என்று சொல்லும் அறிவிலிகள் அறிந்து கொள்ளட்டும் ஜனநாயகம் ஒரு மேற்கத்திய இறக்குமதி என்பதை.
{The term Democracy first appeared in ancient Greek political and philosophical thought//The first nation in modern history to adopt a democratic constitution was the short-lived Corsican Republic in 1755.}
http://en.wikipedia.org/wiki/Democracy#Ancient_origins
சகோ. அஹ்மத் ஃபிர்தௌஸ்க்கு
வேறு வழி-இல்லை பாம்பு புத்தில் கை விட்டுத்தான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலை நிலவும்போது இப்படி துஆ கேட்பதில் தப்பில்லை, தயவுசெய்து இடக்கு பேசுவதை தவிர்க்கவும்.
நம் முஸ்லிம்களின் வாழ்வாதாரம், சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமை போன்றவைகளை போராடி பெறவேண்டும் என்றால் தேர்தல் என்கிற ஜனநாயக (although it is imported from west) வழிமுறையை நம்மால் தவிர்க்க முடியாது.
அதிரையின் வாக்குபதிவு நிலவரங்களை உடனுக்குடன் புகைப்படங்களுடன் தரும் அதிரை பிபிசியின் சேவை பாராட்டுக்குறியது.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment