அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Wednesday, October 19, 2011

அதிரை பிபிசி வாசகர்கள் அனைவருக்கும்,


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஊரரிந்த நிலையை அதிரை பிபிசி வலைத்தளம் நடுநிலையுடன் காத்து வருகிறது என்பதை நன்கு அறிவீர்கள் இதில் எவ்வித பாகுபாடுகள் இன்றி எமது சொந்த வேலைப்பளுகளுக்கு இடையே இந்தச் சேவையை செய்து வருகிறோம் அல்ஹம்துலில்லாஹ்.

அதிரை நிகழ்வுகளை அப்படியே வெளிக்காட்டுவதில் என்றுமே முன்னிலை வகிப்போம் இன்ஷா அலலாஹ், இதற்காக எல்லா வகையான ஒத்துழைப்புகளை நல்கிடும் நண்பர்கள் இன்னும் பிற வலைத்தளங்களின் சகோதரர்கள் அனைவருக்கும் நன்றியுடையவர்களாக இருப்போம்.

சமீபத்திய அனல் பறக்க்கும் பிரச்சாரங்களும் விமர்சனங்களும் உங்கள் அனைவராலும் அலசி ஆரயப்பட்டிருக்கும் அதன் காரண காரனிகளை கண்டிருப்பீர்கள் நிறைவில் உங்களின் மேலான கருத்துக்களையும் பகிர்ந்தளித்திருப்பீர்கள்.

இந்த பேரூராட்சித் தேர்தல் மட்டுமல்ல இனிவரும் காலங்களிலும் அதிரை பிபிசி எந்த ஒரு சார்பு இயக்கத்திற்கோ அல்லது தனி நபருக்கு சார்ந்திராத வண்ணம் எங்கள் நிலைபாட்டை தொடர்ந்து கொண்டு செல்வோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

தேர்தல் முடிவுகளை விரைவிலும் உடனுக்குடனும் உங்களுக்கு பகிர்ந்தளித்திட எங்களின் குழு தயாராகி வருகிறது முடிவுகள் யாருக்கு சாதகமாக அல்லத் பாதகமாக இருப்பினும் உள்ளதை உள்ளபடி உங்கள் அனைவரின் பார்வைக்கும் கொண்டுவரும் இன்ஷா அல்லாஹ்...

இப்படிக்கு,
அதிரை பிபிசி-குழு

6 பின்னூட்டங்கள்:

Riyas said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அழைக்கும் BBC சேவை தொடர அதிரை.இன் சார்பாக வாழ்த்துகள் . இன்ஷால்லாஹ் நண்பர்களின் ஒற்றுமை தொடரட்டும்.
உங்கள் நண்பன்
ரியாஸ் அஹமது

adirami said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வாழ்த்துக்கள். அல்லாஹ் மென்மேலும் இப்பணியில் அபிவிருத்தி செய்வானாக

AdiraiBBC FM Radio நேரலை துவங்கி முதியோர்கள் பெண்களுக்கு செவிவழி ஊடகமும் இருந்தால் பலன் அதிகமாக இருக்கும். அத்துடன் காலை மாலை நகர செய்திகளும் ஒலிபரப்பினால் மிகுந்த வரவேற்பும் கிடைக்கும். அல்லாஹ் உங்கள் பொருளாதாரத்தை வளப்படுத்துவன். இன்ஷாஅல்லாஹ்.

Shafeeq said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Salam to BBC Team!!! Keep your good sprit, Appreciate all your(s) Team effort. All adirai people expects unbiased (neutral)news from you all, hope you maintain & follow the same. Wish you all the Best....K.Shafeeq Ahamed

அப்துல்மாலிக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Excellent work DONE by you peoples...

A.J. Thajudeen said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வாழ்த்துக்கள் அதிரை BBC, உங்களின் சொந்த வேலையை விட்டுவிட்டு அயராது பாடுபட்டு எங்கள் போன்றோருக்கு அவ்வப்போது செய்திகளை பதிவதை மனதார பாராட்டுகிறேன். இதற்குண்டான கூலி உங்களுக்கு அல்லாஹ் மறுமையில் வழங்குவானாக, ஆமீன்!!

தயவுசெய்து! நடுநிலையான பாதையை விட்டு தவறிவிடாதீர்கள். ஓரிரு பதிவுகள் ஒரு சாராரை ஆதரிப்பதாக இருந்தது. இனிமேல் நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டுகிறேன், ஏனென்றால் உங்கள் வளர்ச்சி இதோடு நின்றுவிடக்கூடாது, பன்மடங்கு பெருகவேண்டும். இன்ஷா-அல்லாஹ்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தோளுக்கு மேலே வளர்ந்த புள்ளைய இன்னும் வளருன்னு சொல்லுவங்களா ?... (புரிஞ்சுக்கங்கபபா)

அட ! அதுவல்ல வளர்ச்சியா !? சரி சரி..

நல்லதையே நாடுவோம் நல்லதையே செய்திடுவோமே உறுதியோடு ! :)

நடு(வில் தெருக்களின்)நிலை என்னவென்பதை(யும்) நினைவில் வைத்துக் கொள்ளவும் :)

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.