அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, October 22, 2011

முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளும் நேரலை இன்று இரவு 9.30மணிக்கு (இந்தியா நேரப்படி ) !

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமதூர் பேரூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள இச்சூழலில், அதிரை அனைத்து முஹல்லா ஜமாத்களின் ஒருங்கிணைப்பிற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வகையில் இன்ஷா அல்லாஹ், நமதூர் மார்க்க அறிஞர்கள், அனைத்து ஜமாஅத் முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொள்ளும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று (23/10/2011) இரவு 9.30 மணிக்கு (இந்திய நேரப்படி) அதிரையிலிருந்து நேரலையாக ஒலிப் பேழை (AUDIO) முறையில் ‘அதிரைபிபிசி’வலைத்தளத்திலிருந்து வெளிநாட்டிலிருக்கும் அதிரைவாசிகள் கேட்கலாம். இந்நிகழ்ச்சியில் அனைத்து ஜமாத் முக்கியப் பிரமுகர்களுடன் மின்னஞ்சல் வழியாகவும், பின்னூட்டங்கள் வாயிலாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பங்களிப்பாளார்களின் பதிலுரையும், விளக்கங்கங்களும் உடணுடக்குடன் கொடுத்திட ஏற்பாடுசெய்யப் பட்டுள்ளன.

வெளிநாட்டிலிருக்கும் அதிரைவாசிகளின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றிடும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால், அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் அனைத்து ஜமாத் அதிரைவாசிகளும் ஈடுபடுத்திக்கொள்ளவும்.

இந்நிகழ்ச்சியை ஏற்பாடுகளை முன்னின்று செய்திடும் சகோ.அப்துல்ரசாக்(chasecom) அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .

இப்படிக்கு,

அதிரைபிபிசி

1 பின்னூட்டங்கள்:

U.ABOOBACKER (MK) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அல்ஹம்துலில்லாஹ்! அக்கூட்டம் சமுதாய ஒற்றுமைக்கும், ஊருக்கு பயனுள்ளதாக்வும் அமைய எல்லாம் வ்ல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.