அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Monday, October 10, 2011

சங்கம் / இயக்கங்கள் : ஒற்றுமை ஓர் பார்வை

இறைவனின் திருப்பெயரால் 
அன்புள்ளவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

த.மு.மு.க நம் சமுதாயத்திற்காக கிடைத்த பெரும் பொக்கிஷம், இது அரசிடமிருந்து பெறவேண்டிய சலுகைகளை போராடி பெற்றுள்ளனர் இன்னும் பெற போராடிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் எத்தனையோ சேவைகளை செய்தவண்ணம் இருக்கின்றனர்.  இத்தகைய சமுதாய நலன் அமைப்புகளில் உள்ளவர்கள் சங்கத்தின் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாதா? ஏன் இன்னும் கோணல் பார்வை, குருடன் போக்கு.  

முந்தைய சங்கங்களின் செயல்பாடுகள் கல்யாண வரி வசூலிப்பதிலும் மற்றும் மணமுறிவு(தலாக்)  ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்பாக மட்டுமே இருந்துள்ளது. சங்கம் என்பது பலதரப்பட்ட மாற்று கருத்துடையவர்களின் கூட்டமைப்பே, பலதரப்பட்டவர்கள் மாற்று கருத்துள்ளவர்கள்  இதில் அங்கத்தினராக இருக்கலாம். ஆனால் அதன் செயல்பாடுகள்  அனைவருக்கும் சமமாகவும் / நீதனமாகவும் ஒளிவுமறைவின்றி   இருக்கவேண்டும். ஒருசில நேரங்களில் சமுதாய நலன் கருதி முடிவுகள் எடுக்க நேரிடும்பொழுது சிலரிடமிருந்து கசப்பான எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அதை சமுதாயத்திற்காக பொருந்திக் கொண்டுதான் ஆகவேண்டும், யாரும் பாதிக்கப்பட்டோம் என்று கருதினால்  மேல்முறையீடு செய்வதுதான் சாலச்சிறந்தது. பொதுவாக அமைப்புகள் /  சங்கங்கள் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. எல்லாவற்றையும்  எதிர் கொண்டுதான் ஆகவேண்டும், உணர்ச்சிவசப்பட வேண்டிய தேவை இல்லை. 


சிலசமயம்  த.மு.மு.க வின்(மேலும் சில இயக்கங்களின்)  செயல்பாடுகளில் நமக்கு மாற்று கருத்துகள் இருந்த போதிலும் அதை புறம் தள்ளிவிட்டு அல்லாவிற்காகவும்   நம் சமுதாயத்திற்காக   உழைக்க கூடிய அந்த மக்களுக்கு  முடிந்தவரை ஒத்துழைப்பையும் துவாவையும்  செலுத்தி கொண்டுதான் இருக்கின்றோம். 


புதிதாக அமைந்த சங்க நிர்வாகிகளின் நிர்வாக திறன் பாராட்ட தகுந்தவையாக உள்ளது,  சில விசயங்களில் உடனுக்குடன் சம்மந்த பட்டவர்களை தொடர்பு கொண்டு அதற்காக முயற்சியில் ஈடுபடுகின்றனர் . இவர்களுக்காக முடிந்தவரை ஒத்துழைக்க வேண்டும்.  இதற்கு மெருகூட்டும் வண்ணம் அமீரக வாழ் சம்சுல் இஸ்லாம் சங்கம் அமைப்பு நடத்திய ஒருங்கிணைந்த நிகழ்வும்,மேலும் அதிரை அனைத்து முஹல்லாக்களின் ஒருங்கிணைந்த பொதுக் கூட்டமும் மனதிற்கு புது தெம்பை தந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்.       


சங்கங்கள் தன்னை கல்யாணவரி மற்றும் தலாக் போன்ற பஞ்சாயத்தில் மட்டும் நின்று விடாமல்  நம் சமுதாயத்தில் நிலவும் சமுக ஒழுங்கீனங்ககளை சீர்படுத்த முயற்சி செய்ய வேண்டும். 


உலமாக்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றோம் என்று கூறும் சங்கங்கள்  பொருளாதாரத்தில் நலிவடைந்த உலமாக்களுக்கு / பள்ளிகளை பராமரிக்கும் முஅத்தீன்கள் / நம் பிள்ளைகளுக்கு ஓதிக் கொடுக்கும்  உஸ்தாதுகளுக்கு   நம் ஊர் வாழ்க்கை தரத்திற்கு  ஏற்றவாறு  ஊதிய உயர்வு அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.


வேட்பாளர் களிடத்தில் உறுதிமொழி வாங்கியது போல், சங்கத்திற்கு கல்யாண வரி வசூலிக்கும் முன்பு பெண் வீட்டில் மாப்பிள்ளை வீட்டிற்கு கை கூலி கொடுத்து இருக்கிறீர்களா என்று வினவ வேண்டும்  அப்படி கை கூலி வரதச்சனை வாங்கி இருந்தால் அந்த கல்யாணத்திற்கு பதிவு புத்தகத்தை அனுப்ப மாட்டோம் என்று (பெயரளவிலாவது) முதல் கட்ட  நடவடிக்கை எடுக்க வேண்டும்.      


ஒவ்வொரு முஹல்லாவிலும் படிக்கும் மாணவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு அந்தந்த முஹல்லாவில் அடிப்படை மார்க்க அறிவு போதிக்கப் படுகிறதா என்று ஆராய வேண்டும். 


பாதியில் பள்ளிப் படிப்பை இடைநிறுத்தம் (பொருளாதார அல்லது அறிவுரீதியாக கற்க கடினப்படும்) செய்யும் மாணவர்களை  இனம் கண்டு  அதற்கு ஏற்றவாறு உதவி செய்ய  ஆலோசனை வழங்க வேண்டும்.
        
துரதிஷ்டவசமாக நம் ஊர் மக்கள் ஏனோ இன்னும் இடஒதுக்கீட்டை அனுபவிக்காமல் இன்னும் அரசு தரும் சலுகைகளை பெற   முயற்சி செய்யாமல்  கடவுச் சீட்டை  மட்டுமே நம்பி வாழ்க்கையை தொலைத்து கொண்டு இருக்கின்றோம் என்பதும், நம் சமுதாயம் இன்னும் விசா வியாபாரிகளின் கையில் சிக்கி சின்ன பின்னமாகி கொண்டிருக்கின்றது என்பதுதான் கசப்பான உண்மை. 


மேலும் சில / பல கொள்கைகளால் பிரிந்து கிடக்கும் நம் சமுதாய இயக்க சகோதரர்கள் வீண் விதண்டவாதமும், கொள்கை சண்டைகளை முச்சந்திக்கு முச்சந்தி செய்வதை விட்டுவிட்டு பயனுள்ள வழியில் வருங்கால சந்ததியினருக்கு,  நாம் வரிசெலுத்தும் அரசிடமிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய சிறுபான்மை அல்லது  பொது  இட ஓதிக்கீட்டு முறையில்  கல்வி , வேலைவாய்ப்புகள்  பெற முயற்சி செய்தல் வேண்டும்.  முதியோர் ஊக்க தொகை, ஏழை விதவைகளுக்கான பணம், உலமாக்கள்  ஊதியம்  போன்ற  என்னென்ன சலுகைகளை பெறமுடியுமே அனைத்தையும் பெற சங்கங்களோடு சேர்ந்து  முயற்சிக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு முஹல்லா  சங்கத்தில்  உள்ள கட்டிடத்தில் தனி அலுவலகமே செயல் படவேண்டும்


இதுவரை நம் சமுதாயத்திற்கான பொது  பெண் மருத்துவரை பெற முயற்சி செய்யவில்லை நன்கு படிக்கும் நடுத்தர அல்லது  ஏழை மாணவிகளை இன்று முதல்    தேர்ந்தெடுங்கள்    இன்ஷா அல்லாஹ் அதற்கு தேவைப்படும் பொருளாதாரம் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகள்  செய்ய வெளியில் உள்ள நாங்கள் அதிரை சொந்தங்கள் மேலும் நட்பு வட்டங்களில் சொல்லி ஆதரவு திரட்டி  உதவி செய்கின்றோம்  இன்ஷா அல்லாஹ்.


மேலும் நமக்காக, நம் சமுதாயத்திற்கான சட்ட நிபுணர்கள், வழக்கறிஞர்கள் (lawyers), ஊடகவியலாளர்கள் (journalist )  இந்தியா மேலாண்மை அதிகாரிகள் (IAS & IPS Officers)   படிக்க ஆர்வமுடைய மாணவர்கள் தேவை இன்ஷா அல்லாஹ் இதற்காகவும்  அமைப்புகளும், சங்கங்களும் ஒருங்கிணைந்தால் அனைத்துதரப்பிலும் உதவி செய்ய ஒத்த கருத்துடைய நாங்கள்  தயாராக இருக்கின்றோம். 


இன்ஷா அல்லாஹ் ஒன்றுகூடி வளம் பெறுவோம்.


வல்லோனின் வான் துணையில் 
தங்களின் 
மு.அ. ஹாலித், சிட்னி    



6 பின்னூட்டங்கள்:

KALAM SHAICK ABDUL KADER said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தெருக்களின் பாகுபாடு உருக்குலைக்கும் ஒற்றுமைக் கூடு
தெருக்களின் பாகுபாடு உருக்குலைக்கும் ஒற்றுமைக் கூடு

ஊரை இணைக்கும் கோடுகளே
ஊரைப் பிரிக்கும் கேடுகளானது

வேற்றுமைத் தீயால்
வெந்து மடிகின்றோம்
வாஞ்சை வாளியால்
அன்பு நீரெடுத்து
வாரி அணைப்போம்
சிரட்டை அளவேனும்
சிரத்தை நினைப்போம்

கூட்டமைப்பு என்னும்
கூடாரம் அமைத்தோம்
ஓட்டுக்காகப் பிளக்கும்
வேட்டமைப்புகளை
வெளியில் நிறுத்துவோம்

உளத்தூய்மைப் பற்றினால்
உருவாகும் ஒற்றுமை
கத்தியில் நட்ப்பது போல்
பத்திரமாகவும்; கண்ணாடிப்
பாத்திரமாகவும் பக்குவமாய்க்
கோத்திரப் பெருமையின்றி
பழகுவோம்

எதிர்மறை எண்ணங்களின்
புதிர்களால் புறம்பேசுவதைப்
புறந்தள்ளுவோம்

அண்டைத் தெருவோடு
அன்பை மறந்தால்
அரவணைக்க ஆளின்றி
அடுத்துவரும் பெருங்கேடு

சமத்துவ மரத்தைச்
சாய்ப்பதற்குச் சாத்தானின் கைகளில்
சுயநலக் கோடாரி
சந்தித்துச் சொல்வோம்
சகோதரர்களின் வீடேறி
”எல்லா வீதிகளும் ஒன்றே”
இனியொரு விதி செய்வோம் நன்றே”







--

”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)


மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
shaickkalam@yahoo.com
kalaamkathir7@gmail.com


அலை பேசி: 00971-50-8351499

வளர்பிறை said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கடல் கடந்து குடியேறி சென்றாலும் நம் ஊரின் மேல் உள்ள அக்கறை, கவலை உங்களின் வரிகளில் தெரிகின்றது. நம் சமுதாயம் முன்னேற்றதிற்காக உங்களை போன்ற நல்லுள்ளங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் அல்லாஹ் துணை நிற்பான்.

Ameen Bin Jamal said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நண்பர் ஹாலித் நல்ல பலத் திட்டங்களுடன் அனைத்து முஹல்லா சங்கத்திர்க்கும் பொதுவான வேண்டுகோலையும் வைத்துள்ளார்.சிந்திப்போர்க்கு சில வரிகளே போதுமானது.

KALAM SHAICK ABDUL KADER said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஜஸாக்கல்லாஹ் கைரன் “வளர்பிறை” வளர்க.

விடைபெற்று வந்த நாளாய்
நடைபெற்று கொண்டிருப்பவைகளை
அசைபோட்டுப் பார்ப்பதில் அயற்
திசையில் வாழும் நாங்கள்
நேரம் எடுத்துக் கொள்கின்றோம்;
பாரம் சுமந்து கொள்கின்றோம.

உங்களின் மேலான ஆலோசனைகளை

http://adiraiallmuhallah.blogspot.com/

என்ற இழையில் பதிக

அதிரை என்.ஷஃபாத் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

/*நம் சமுதாயத்திற்கான சட்ட நிபுணர்கள், வழக்கறிஞர்கள் (லந்யெர்ச்), ஊடகவியலாளர்கள் (ஜொஉர்னலிச்ட் ) இந்தியா மேலாண்மை அதிகாரிகள் (ஈஆஸ் & ஈPஸ் ஓஇசெர்ச்) படிக்க ஆர்வமுடைய மாணவர்கள் தேவை இன்ஷா அல்லாஹ் இதற்காகவும் அமைப்புகளும், சங்கங்களும் ஒருங்கிணைந்தால் அனைத்துதரப்பிலும் உதவி செய்ய ஒத்த கருத்துடைய நாங்கள் தயாராக இருக்கின்றோம்*/

சமுதாய நலனில் அக்கறை கொண்டும், இறைவனது பொறுத்தத்தை மட்டும் கருத்தில் கொண்டு அறிவிக்கப் பட்டிருக்கும் இந்த உதவி அறிவிப்பு, தகுதி மற்றும் வெற்றி பெறும் எண்ணமுள்ள மாணவ மாணவியருக்கு ஒரு ஊக்கம் தரும் அறிவிப்பாகும். அல்லாஹ் இந்த முயற்சியில் வெற்றியைத் தர போதுமானவன்.

திப்புசுல்தான் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிகவும் அருமையான கருத்துக்கள்
உங்களின் சமுதாய பார்வை குறித்து மிகவும் மகிழ்ச்சி.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.