தேர்தல் முடிவுக்கு வந்துவிட்டது. நம் எல்லோரின் கவனம் , எதிர்பார்ப்பு எல்லாம் யார் வெற்றி கனியை பறிக்கப் போகிரார்கள் என்பதுதான்.
நமக்கு வேண்டியவர் வெற்றி பெறவேண்டும் என்று அவரவர்கள் ஆசைப்படுவது இயல்பே ! ஆனால் நினைப்பது நடப்பதில்லை. எத்தனை பேர் போட்ட்டிட்டாலும் ஒரு தலைவர் , 21 உறுப்பினர்கள் மட்டுமே அதிரை பேருரார்ச்சியை அலங்கரிக்க போகின்றனர் . பொது makkalaakநாம் பார்வையாளர்களே ! அதற்காக நாம் மௌன பார்வையாளர்களாக இருக்க வேண்டியதில்லை. நம் உரிமைகளை அவ்வபோது கேட்டு பெற நாம் உரிமை கொண்டுள்ளோம்.
தேர்தலின் போது நமக்கிடையே பல கருத்து வேறுபாடுகள் , மோதல்கள் தோன்றி இருக்கலாம். அவை அனைத்தையும் மறந்து, மன்னித்து ஒற்றுமையுடன் நம் பணியை தொடருவோம் . தோற்றவர்கள் இனியாவது ஒற்றுமையுடன் இணைந்து செயலாற்றினால் வரும் காலங்களில் வெற்றியடைய வாய்ப்புள்ளதை மறுப்பதற்கில்லை. வெற்றி அடைந்தவர்கள் எப்படி வென்றார்கள் என்பதை சிந்திக்க, அவர்களுக்கு நேரம் இருக்காது, தோற்றவர்கள் , நான் ஏன் தோற்றேன் ? மக்களிடத்தில் என் அணுகு எவ்வாறு இருந்தது ? தனக்கு தானே கேள்வி கேட்டு , தன்னை சீர்படுதிகொள்ள வேண்டும். எதிர் அணியினர் எப்படி வென்றார்கள் என்று சிந்திப்பதை விட, நாம் ஏன் தோற்றோம் என்பதை ஆராய வேண்டும் .தோற்றதற்கு பல முனை போட்டியாக கூட இருக்கலாம்.
வென்றவர்கள், நாம் வென்றுவிட்டோம் என்ற மமதை ஏற்படா வண்ணம் நடந்து கொள்ள வேண்டும் வென்றவரின் பொறுப்பு மிக அதிகம் . எல்லா பகுதியும் மக்களுடன் இணைந்து செயல் பட்டால் அதிரை பஞ்சாயத்தை முதன்மை பஞ்சாயத்தாக மாற்றிகாட்டலாம்.
உதாரணமாக சூரிய ஓளி திட்டத்தை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளல்லாம். இவை போன்று எத்தனையோ ?
சிந்திப்போம் ! செயல்படுவோம் ! ஒற்றுமையை எனும் கயிற்றை பற்றிக்கொள்வோம் !
அல்லாஹ்வின் உதவிகொண்டு நாம் நம் சமுதாயம் மேன்மையடைய பிராத்திப்போமாக !
அப்துல் ரஜாக்
0 பின்னூட்டங்கள்:
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment