அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Thursday, December 29, 2011

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .


அஸ்ஸலாமு அழைக்கும்
                      
               இணையத்தள சகோதரர்க்கு இதை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுகொல்கிறேன்.

தயவுசெய்து இதன் பிரதியைப், பொது இடங்களில் நிரந்தரமாய் ஒட்டிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வறுமையில் வாடும் பலரின் வாழ்வும் வெகு சிறப்பாய் மலரும்... இவர்களின் உதவியால், இன்ஷா அல்லாஹ்!


1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445


2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530

3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை - 06

4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை - 06

5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)

6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34

7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34

8. மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை - 02

9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி.

10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை - 03

11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு, அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564

12. அஸ்மா காசிம் அறக்கட்டளை ,மாண்டியத் சாலை, எழும்பூர் - சென்னை – 08

13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி - 614 207

14. டாம்கோ 807, - அண்ணா சாலை, 5 வது சாலை, சென்னை

15. ஹாஜி. அஹமது மீரான், Managing Director Professional Courier’s

16. 7 மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை - சென்னை – 18

17. மியாசி, புதுக் கல்லூரி வளாகம், பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14

18. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18



தயவுசெய்து, இவர்களைத் தொடர்புகொள்ளுமாறு மாணவர்க்கு தெரியப்படுத்தவேண்டுகிறேன். 
தகவல்:-                 
இப்படிக்கு
ஹாபில்.நைனா முஹம்மத் @ ரியாத்

Thursday, October 27, 2011

அதிரையில் கல்வி ஆவணப்படம் பாகம் 2 விரைவில் ...

அதிரையில் கல்வி என்ற ஆவணப்படம் முதல் பாகம் ஏற்கனவே வெளியிட்டு அனைவரின் ஆதரவை பெற்றது . நேரமின்மையால் அடுத்த பாகத்தை வெளிய்டுவதில் சற்று தாமதம் ஏற்பட்டுவிட்டது. மிகச் சிறப்பாக செய்யவேண்டும் என்ற காரணத்தால் கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்கள், சமுக ஆர்வளர்கள்  மற்றும் பெற்றோர்கள் ஒரு சிலர் பேட்டி எடுத்து இதுவரை முடிக்கப்பட்டுள்ளது இன்னும் ஒரு சில வேலைகள் மீதமுள்ள நிலையில் அடுத்த பாகம் எப்படி இருக்கவேண்டும் என்று உங்களின் கருத்துக்களை எங்களுக்கு மடலில் மூலமாக் பின்னுட்டத்தின் மூலமாகவே தங்களின் கருத்தக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

இப்படிக்கு 

அதிரை பிபிசி குழு 
adiraibbc@gmail.com

Friday, October 14, 2011

யாருக்கு வாக்கு ?


அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பதிலும் "கிராம சுயராஜ்யம்'தான் இந்தியாவின் சமச்சீர் வளர்ச்சிக்கு ஒரே தீர்வு என்பதிலும் கருத்து வேறுபாடே இல்லை. ஆனால், அது சரியான முறையில்தான் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதுதான் கேள்வி.

 "பஞ்சாயத்து ராஜ்' இந்தியாவின் கிராமங்களைத் தரம் உயர்த்தும் என்கிற எதிர்பார்ப்பு அநேகமாகப் பொய்த்துவிட்டது என்றுதான் கூற வேண்டும்.அதிகாரம் பரவலாக்கப்படுவதற்குப் பதிலாக ஊழல் பரவலாக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் கடந்த 20 ஆண்டுகளாக பஞ்சாயத்து ராஜ் சட்டம் இந்தியாவுக்குச் செய்திருக்கும் உதவி என்று நினைக்கத் தோன்றுகிறது. இல்லையென்றால், நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களில்கூட செலவிடப்படாத அளவுக்குப் பணம் வேட்பாளர்களால் உள்ளாட்சித் தேர்தலில் வாரி இறைக்கப்படுகிறதே, அது ஏன்?தமிழக உள்ளாட்சித் தேர்தலில், அரசியல் கட்சிகள் கூட்டணி இல்லாமல் தனித்தனியே போட்டியிடுகின்றன என்றபோது அவரவர் தகுதி என்ன, பலம் என்ன என்பதைப் பார்ப்பதற்கு இது ஒரு வாய்ப்பு என்று நினைத்து மகிழ்ந்தோம். 

கணக்கற்ற வேட்பாளர்களின் கட்டுப்பாடற்ற பிரசாரம், இவர்கள் பேசாமல் கூட்டணி வைத்தே பிரசாரம் செய்திருக்கலாமே என்று நம்மை எரிச்சலடைய வைத்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் வரைமுறைகள் எதுவும் இல்லாததால், ஒவ்வொரு வேட்பாளரும் பிரசாரம் என்கிற பெயரில் வீணடிக்கும் பணம் நம்மை மலைக்க வைக்கிறது.சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் எவ்வாறு இலவசத் திட்டங்களை அறிவித்தனவோ, அதற்கு இணையாக மேயர் வேட்பாளர்களும், நகர் மன்ற வேட்பாளர்களும், ஏன் பேரூராட்சி, ஊராட்சி உறுப்பினர்களும்கூட இலவசத் திட்டங்களை அறிவிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாகவும், கொஞ்சம் பதற்றமாகவும்கூட இருக்கிறது.வீட்டுக்கு 3 கிலோ மாமிசம் இலவசம் என்கிறார் ஒருவர். 

வீட்டுக்கொரு சிம் கார்டு இலவசம் என்கிறார் மற்றொருவர். உங்கள் வீட்டுக்கு மூன்று வாரம் தினமும் அரை லிட்டர் பால் இலவசமாக ஊற்றுகிறேன் என்கிறார் ஒருவர். பெண்களுக்குத் திரையரங்குகளில் இலவசமாகப் படம் பார்க்கலாம் என்கிறார் மற்றொருவர். கல்யாணம், காதுகுத்துக்குப் பத்திரிகை வைக்கும் வார்டு வாக்காளர்களுக்கு ரூ. 2,000 மொய்ப் பணம் என்றுகூட ஒருவர் வாக்குறுதி அளித்திருக்கிறார். இப்படியெல்லாம் நடக்கிறதா என்று ஆச்சரியப்படாதீர்கள்.

தமிழகத்தில் பல நகராட்சிகளில், நகர்ப் பஞ்சாயத்துகளில் பேரூராட்சிகளில், ஊராட்சிகளில் இதுபோன்ற வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன. இவை எப்படிச் சாத்தியம்?மாநில அரசு இலவசங்களை அள்ளி வழங்குகிறது என்றால் அதற்குக் காரணம் மது விற்பனையால் கிடைக்கும் வருவாய். சுமார் ரூ.14,000 கோடி வருமானம் மதுவால் கிடைக்கும் என்றால், அரசாங்கம் எதை வேண்டுமானாலும் இலவசமாக அளிக்கும்தான். அதைப் பின்பற்றி, உள்ளாட்சியிலும் இலவசம் என்று இவர்கள் அறிவித்தால், இதை இவர்களால் எவ்வாறு செயல்படுத்த முடியும்?உள்ளாட்சிகளில் கிடைக்கும் வருவாய் நேரடியாக அரசுக்குப் போகிறது.

அரசு ஒதுக்கும் நிதியில்தான் இவர்கள் திட்டங்களைச் செயல்படுத்தியாக வேண்டும். அப்படியிருக்க, வெற்றி பெற்றால் இவர்கள் எப்படித் தங்கள் வாக்குறுதிகளைச் செயல்படுத்துவார்கள்? அதுபோகட்டும், தனியொரு உறுப்பினருக்கு இப்படி வாக்குறுதிகளை அள்ளி வழங்க எங்கிருந்து வருமானம் கிடைக்கும்? ஒன்று அது பொய் வாக்குறுதியாக இருக்க வேண்டும். இல்லையென்றால், ஊழலின் ஊற்றுக்கண் ஊராட்சி அமைப்பு என்று இருக்க வேண்டும்.சட்டப்பேரவை உறுப்பினர் அல்லது மக்களவை உறுப்பினர்களுக்கு சம்பளமே ரூ. 60 ஆயிரம் வரை இருக்கிறது. மேலும் அவர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக சில கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் சேவை செய்ய வருவோருக்குச் சம்பளம் வெறும் டீச் செலவு என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களது அதிகார வரம்புகளும்கூட மிகக் குறைவுதான்.மேயருக்கு கார் உண்டு. வீடு உண்டு. அதற்கான செலவு மாநகராட்சி தரும். மாமன்றக் கூட்டம் நடக்கும் காலத்தில் மேயர், கவுன்சிலர்களுக்கு சிட்டிங் பீஸ் மட்டும்தான். அதிகபட்சம் மாதத்துக்கு இரண்டு கூட்டம் நடக்கலாம். இதில் ரூ,1,600 கிடைக்கும், அவ்வளவே.நகர்மன்றத் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியத் தலைவர்களுக்கு வாகன வசதி உண்டு. சம்பளம் ரூ.600-ஐத் தாண்டுவதில்லை.

இதேபோன்று நகராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி கவுன்சிலர்களுக்கு கூட்டத்தில் பங்கேற்றால் அதற்கான பங்கேற்பு கட்டணம் மட்டும்தான். இதன்மூலம் ஒரு மாதத்தில் அதிகபட்சம் ரூ.1,500 கிடைக்கலாம்.பிறகு ஏன் இத்தனை போட்டி. என்ன தைரியத்தில் இவர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள்? எவ்வாறு பல லட்சங்களையும், கோடிகளையும் வாரி இறைக்கிறார்கள்? மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளுக்காக பல்வேறு திட்ட அமலாக்கத்துக்காக அரசு வழங்கும் நிதியில், தன் வார்டுக்கு ஒதுக்கப்படும் தொகையில் ஒரு 10 விழுக்காட்டைப் "பார்த்தாலும்' போதும், இரண்டு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.ஆக, இலவசங்களையும், வாக்குறுதிகளையும் அறிவிப்பவர்கள் மிகமிக விவரமானவர்கள் என்பதையும் இவர்களது "நோக்கம்' தெளிவானது என்பதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் பிரதிநிதி என்பவர் மக்களுக்கான தேவை என்ன என்பதை மன்றத்தில் எடுத்துரைக்கும் கட்டியக்காரர், அதிகாரிகள் மக்கள் பணத்தைச் சாப்பிட்டுவிடாதபடி கண்காணிக்க மக்களால் நியமிக்கப்படும் காவல்காரர். அப்படிப்பட்ட வேட்பாளர்களை மட்டுமே மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டுமே தவிர, ஊழல் பரவலாக்கப்பட்டு விடக்கூடாது.


நன்றி
தினமணி

Wednesday, October 12, 2011

காதிர் முகைதின் ஆண்கள் பள்ளியின் விளையாட்டு மற்றும் பரிசளிப்பு விழா.

அதிரை காதிர் முகைதின் கல்லூரியில் இன்று (12/10/2011) காலையில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் காதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர் . தஞ்சை மாவட்ட அளவில் நடைபெற்ற  போட்டியில் நமது காதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் இடம் பெற்றுள்ளது அதில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிரை காவல்துறை ஆய்வாளர் v.செங்கமலைக்கண்ணன்,Bsc கொடியேற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் M.KN டிரஸ்ட் தாளாளர் Dr.S.முகம்மதுஅஸ்லம் அவர்கள் தலைமை ஏற்று நடத்த சிறப்பு விருந்தினர்களாக ஆ.மாதவன்.B.E செயற் பொறியாளர், பொதுப்பணித்துறை  பட்டுக்கோட்டை அவர்கள் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார் .

மாணவர்கள் அமர்ந்திருக்கும் காட்சி





மேடையில் அமர்ந்து இருக்கும் சிறப்பு விருந்தினர்





அதிரை காதிர்முகைதின் கல்லூரியின் விளையாட்டு மைதானம்


காதிர்முகத்தின் கல்லூரியின் முகப்புத் தோற்றம்



எழில்மிகு அழகோடு காட்சிதரும் கல்லூரி வளாகம்


Monday, August 8, 2011

இமாம் ஷாஃபி பள்ளியில் இருந்து நாளை (09/08/2011) நேரலை ..

நாளை(09/08/2011)  இமாம் ஷாஃபி பள்ளியில்
 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தன்னம்பிக்கை (self confidence ) மற்றும் ஊக்கம் (motivation) ஏற்படுத்துவதற்காக ஜாகிர்ஹுசைன் என்பவர் உரையாற்றுகிறார். காலை 10 மணிமுதல் 12.30 மணிவரை நடைபெறும் இந்த நிகழ்சியை அதிரை பிபிசியில் நேரலையாக காணலாம். இன்ஷா அல்லாஹ்

Sunday, August 7, 2011

அதிரை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் அதிரை மாணவர்களின் பங்கு என்ன?

அதிரையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் அமைந்துள்ளது ஹாஜி SMS ஷேக் ஜலாலுத்தீன் ஆசிரியர் பயிற்சி பள்ளி.


மிகப்பெரிய இடம் மற்றும் அழகிய கட்டிடத்துடன் அமைந்துள்ளது.


முன்பெல்லாம் ஆசிரியர் பயிற்சி முடிப்பதற்கு மன்னார்குடி நோக்கி பயணிக்கவேன்டும். ஆனால் தற்பொழுது நமதூரிலேயே ஆசிரியர் பயிற்சி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. BEd படிப்பிற்கு அரசு அங்கீகாரம் விரைவில் கிடைக்கும் தருவாயில் உள்ளது. 


இந்தியாவில் சிலத் துறைகளில்  முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கி அல்லது குறைவாக உள்ளவற்றில் கல்வித் துறையும் ஒன்று. இத்துறையில் பின்தங்கி இருப்பதால் தான் கல்வியிலும் மிகவும் பின்தங்கி உள்ளோம் என்பதையும் அறியவும்.

இத்தகைய சூழலில் நமதூரில் கண்ணியத்திற்குரிய ஹாஜி SMS ஷேக் ஜலாலுதீன் அப்பா அவர்களின் நினைவாக அவர்களுடைய வாரிசுகள் பள்ளிகளை நிறுவி சேவை ஆற்றுவது பாராட்டுக்குரியது. இத்தகைய கல்வி நிறுவனங்கள் நமதூருக்கு கிடைக்கப்பெற்றிருப்பது நமக்கு கிடைத்த பாக்கியம்.
இந்நிறுவனத்தில் சுமார் 100  மாணவர்கள் பயிற்சி பெற்று வரும் நிலையில் வெறும் ஆறு பேர் மட்டுமே முஸ்லிம்கள் என்பதும் அதிலும் அதிரையைச் சேர்ந்தவர்கள் ஒருவர்கூட சேரவில்லை என்பதும் வருத்ததிற்குரியதும் வேதனைக்குரியதுமாகும். இதுபற்றி அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜக்கரியா அவர்கள் உள்ளூர் மாணவ மாணவிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த நிறுவனத்தில் உள்ளுரிலிருந்து ஒருவர்கூட கல்வி கற்க வராதது மிகுந்த வருத்தம் தருவதாக நம்மிடம் தெரிவித்தார்.

ஆறாவது ஊதிய கமிசனின் அறிவிப்பிற்குப்பிறகு ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கான சம்பளம் கடுமையாக உயர்ந்து அவர்களின் சம்பளம் வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இணையாக உள்ளது. அதனால் வெளிநாட்டு வாய்ப்புகளைக்கூட வேண்டாம் என்று சொல்லும் நிலை உள்ளது.

இப்படி இருக்க அருகில் இருந்தால் அருமை தெரியாது என்று சொல்வது போன்று உள்ளூரில் கிடைக்கும் ஆசிரியர் பயிற்சி கல்வியை உதாசீனம் படுத்தாமல் கற்க மாணவர்கள் முன்வரவேண்டும்.

சிறந்த சமூகத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள், அத்தகைய பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. உள்ளூரிலேயே நல்ல சம்பளம், வருமானம்  எல்லோருக்கும் கிடைப்பதில்லை ஆசிரியர்களைத தவிர. 

எதிர்கால ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள். 

Monday, August 1, 2011

அதிரையில் கல்வி - ஆவணப்படம் பகுதி -1

அஸ்ஸலாமு அழைக்கும் ...

அதிரையில் கல்வி தொடர்பான ஆய்வு  ஒன்றை நடத்தி அதை  வெளிநாடுகளில் வசிக்கும் நமதூர் சகோதரர்களுக்கு அறியத்தரவேண்டும் என்ற நீண்ட நாள் முயற்சிக்கு பின்னர் இந்த ஆவணப்படத்தை வெளியிடுகிறோம் . புகழ் அனனத்தும் இறைவனுக்கே குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டவும். உங்களுடைய ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன . முதல் பகுதியை கீழே காணலாம். மற்ற பகுதிகள் விரைவில் இன்ஷா அல்லாஹ்.

அதிரை மக்களுக்கு இந்த ஆவணப்படத்தை சமர்ப்பித்து மகிழ்கிறோம்.

Thursday, July 28, 2011

அதிரையில் தரமான கல்வி?????



(இக்கட்டுரை யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதற்காகவோ,குற்றம் சாட்டவோ அல்ல.நம் அதிரை பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே உருவாக்கப்பட்டது.)

நம் அதிரையில் பல கல்வி நிறுவனங்கள் உள்ளன.அதிலும் +2 வரை உள்ளவை இரு பெரும் கல்வி நிறுவனங்கள்.அந்த பள்ளிகளில் படித்து,இன்று வாழ்வில் உயர்ந்த நிலையில் உள்ளோர் பலர்.ஆனால் இன்று,தரமான கல்வியை தேடி,பெற்றோர் பள்ளிகொண்டான்,திருச்சி, சென்னை பள்ளிகளை நோக்கி படையெடுக்கின்றனர்.

தந்தையின் பணியும் சென்னையில் இருந்து,குடும்பமும் அங்கு இருந்தால் சரி.ஆனால்,பிள்ளையின் படிப்பை காரணம் காட்டி,அங்கு இடம்பெயர்வோர் அதிகரித்து வருவது கவலைக்குரியது.

கேட்டால்,நம் அதிரை பள்ளிகளில் கல்வியில் தரமில்லை என்று காரணம் சொல்கின்றனர்.தம் பிள்ளைக்கு தரமான கல்வி வேண்டும் என்பதற்காக,இங்குள்ள பலர் தம் அழகிய சொந்த வீடுகளை பூட்டி போட்டு விட்டு,வெளியூர்களில் ஆயிரங்களை கொட்டி வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.

கணவர் வெளிநாடு சென்று,கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம்,வாடகை கொடுத்தே வீணாகிறது.கணவர் வெளிநாட்டிலும்,மனைவி பிள்ளைகளோடும் தனியே வாடகை வீட்டில் இருப்பதால்,பாதுகாப்பு பிரச்சினையும் எழுகிறது. இதற்கு முன் வரை,நம்மூரில் தானே நாமும் படித்தோம்,நாம் முன்னேறவில்லையா?

டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் தன் சொந்த ஊரில் படித்தும் முன்னேறவில்லையா? ஆங்கிலம் தான் சரளமாக பேசவில்லையா?அவருக்கு அவர் ஊரில் கிடைத்த தரமான கல்வி,நம் பிள்ளைகளுக்கு,நம் அதிரையில் கிடைக்காதா?

அது யார் குற்றம்?அதிரையில் பிறந்த நம் குற்றமா?ஆசிரியர் குற்றமா?பள்ளி நிர்வாகத்தின் குற்றமா?

வருடக்கணக்கில் மாறாத பாடத்திட்டத்தில்,5 வருட வினாத்தாள்களை திருப்பி படித்தாலே போதும் பாஸாகிவிடலாம் என்ற ரீதியில் எளிதான வினாத்தாள் அமைப்பு, அப்படியும் சரியாக மார்க் எடுக்காத பிள்ளைகளை தனித்தேர்வு எழுத வைத்து விட்டு, மீதி மாணவர்கள் 450க்கும் மேல் மதிப்பெண் பெறுவதும்,100% தேர்ச்சியும் இருந்தால்,அது தரமான கல்வியா? தரமான பள்ளியா?அதனால்,யாருக்கு என்ன பயன்?

தரமான கல்வி என்பது,நடைமுறை வாழ்வோடு தொடர்பு உடையதாக இருக்க வேண்டும் அல்லவா?வெறும் மதிப்பெண் மட்டும் இருந்தால்,உடன் வேலை தான் கிடைத்து விடுகிறதா?கல்வி தரமாக இருந்தால்,நம் பிள்ளைகள் சுயமாக சிந்திக்கவும்,தன்னம்பிக்கையோடு சுயமாக செயல்படவும்,ஆற்றலை கொடுக்க வேண்டும்.

அதற்கு ஏட்டுக்கல்வியோடு தொழில் சார்ந்த பல்துறை அறிவும் கற்பிக்கப்பட வேண்டும்.

பெற்றோர் தாம் கற்றதை விட தம் பிள்ளை மேம்பட்ட கல்வியை கற்க வேண்டும் என நினைக்கின்றனர்.ஆனால்,நம்மூரில் கல்வித்தரம் நாம் பெற்றதை விட இப்போது கீழ்நோக்கி போய் கொண்டு இருக்கிறது.

நாம் படித்த போது இருந்த ஆசிரியர்கள் தம் பணியை சேவையாக நினைத்து செய்தார்கள்.ஆனால் இப்போதுள்ள ஆசிரியர்களில் சிலர் சேவையாக நினைத்தாலும்,பலர் அதை தொழிலாக செய்கிறார்கள்.இலக்கண வகுப்பைக் கூட இனிமையாக நடத்தும் ஆசிரியர்கள் நமக்கு கிடைத்தார்கள்.ஆனால் இன்று?

பாடம் பிள்ளைகளுக்கு புரியும்படி நடத்தப்பட வேண்டும்.அவ்வாறு நடத்தினால்,பாடம் நடத்தி முடித்த பின் ஆசிரியர் கேட்கும் அத்தனைக் கேள்விக்கும்,நம் பிள்ளை கோனார் உரை இல்லாமல்,நோட்ஸ் இல்லாமல்,சரியான பதில் அளிக்குமே!இப்போதுள்ள ஆசிரியர்களில் எத்தனை பேர் பாடம் நடத்தி முடித்த பின் பிள்ளைகளிடம் நடத்திய பாடம் தொடர்பாக கேள்வி கேட்கிறார்கள்?கேட்டால் தானே சுயமாக பதில் சொல்லும் திறன் வளரும்?

கோனார் உரையில் அல்லது நோட்ஸில் உள்ள பதிலை தன் புரிந்துணர்வோடு சிறிது மாற்றி எழுதினாலே மார்க் கிடைப்பதில்லை.....இது தரமான கல்வியா?

நம்மூரில் சில பள்ளிகளில் பிள்ளை தவறான விடை எழுதினாலும் ஆசிரியரின் கவனக்குறைவால் சரி என டிக் போடப்படுகிறது. சில கேள்விகளுக்கு தவறான பதில் ஆசிரியராலேயே குறித்துக் கொடுக்கப்படுகிறது .ஒரு பள்ளியில் ஆங்கில வழி அரசு அங்கீகாரம் இன்றி நடப்பதோடு,சில பாடங்களுக்கு ஆசிரியரே நியமிக்கப்படாமல் உள்ளது.அங்கு பாடம் தமிழ் வழியில் தான் நடத்தப்படுகிறது.கட்டணம் ஆங்கில வழி என வசூலிக்கப்படுகிறது.

ஒரு பள்ளியில் சில ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் பிள்ளைகளின் தேர்வு விடைத்தாள்களை கூட திருத்துவதில்லை.சம்பந்தமே இல்லாத ஆசிரியரிடம் கொடுத்து திருத்தப்படுகிறது.இன்னும் சிலர்,நன்றாக படிக்கும் பிள்ளைகளின் பேப்பர்களை மட்டும் தாம் திருத்துவதும்,மற்ற பிள்ளைகளின் பேப்பர்கள் மற்றவர்களிடம் கொடுத்து திருத்துவதும் உண்டு.அப்புறம் எப்படி,அந்த பிள்ளைக்கு உரிய மார்க் கிடைக்கும்?

தன் பாட வேளையில் வகுப்பிற்கு வராத ஆசிரியரும் உள்ளனர். இப்படி குறைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

இவை கற்பனையல்ல.அப்பள்ளியில் இப்போது பயிலும்,அல்லது சென்ற ஆண்டுகளில் படித்த உங்கள் பிள்ளைகளை கேளுங்கள்.ஆம் என்று அடித்துச் சொல்வார்கள்.

நம் அதிரையில் பெரும்பாலும் தந்தை வெளிநாடு சென்று விடுவதால்,பிள்ளைகளோடு அதிக நேரம் செலவிடுவது தாய் தான்.

எத்தனை தாய்மார்கள் பள்ளி முடிந்து வீடு வரும் பிள்ளையிடம் அன்பாக பேசுகிறோம்?பிள்ளையிடம் உன் பள்ளியில் இன்று எத்தனை வகுப்புகள் நடந்தன?எல்லா பாடத்திற்கும் ஆசிரியர் உள்ளனரா?ஆசிரியர் வகுப்பிற்கு தவறாமல் வருகிறாரா?பாடம் புரிந்ததா?உனக்கு எந்த ஆசிரியர் நடத்துவது புரிந்தது?வீட்டுப்பாடம் உள்ளதா? என்றெல்லாம் அன்பாக கேட்டால்,அவர்களும் சொல்வார்கள். குறைபாடும் களையப்படும்.

சில தாய்மார்களுக்கு உண்மை தெரிந்தும்,யாரிடமும் முறையிட இயலாத நிலை.....ஆம்... தட்டிக் கேட்டால் தம் பிள்ளை ஆசிரியரால் பாரபட்சத்தோடு கவனிக்கப்பட்டு தம் பிள்ளையின் எதிர்காலம் வீணாகிடுமோ என்ற பயம்....

ஒரு ஆசிரியர் தன் சக ஆசிரியர் இது போன்ற தவறு செய்யும்போது அதை தட்டிக் கேட்கவோ,பிறரிடம் வெளிப்படுத்தவோ இயலாத நிலையும் உண்டு.பெரும்பாலும் இது போன்ற தவறு செய்வோர் அரசு ஊதியம் பெறுபவர்களாகவோ பணி மூப்பு அடிப்படையிலோ இருப்பதால்,சக ஆசிரியரின் மனிதநேயம் முடக்கப்படுகிறது.

அப்போ பூனைக்கு யார் தான் மணி கட்டுவது?

பள்ளி நிர்வாகம் தான்.

ஸ்கூல் பீஸை எவ்வளவு உயர்த்தலாம்,அதற்கு பெற்றோருக்கு என்ன காரணம் சொல்லலாம் என்று அடிக்கடி கூடும் பள்ளி நிர்வாகிகள்,அதிரை பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்க என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கு நன்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்,பாடம் பிள்ளைகளுக்கு புரியும்படி நடத்தப்பட வேண்டும்.

தம் பிள்ளை நுனி நாக்கில் ஆங்கிலம் பேச வேண்டும் என பெற்றோர் விரும்புகின்றனர்.அது கடினமானதும் அல்ல.பள்ளிகளில் சிறு வகுப்பில் இருந்தே ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தை பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்.அப்போது தான் நம் பிள்ளையாலும் ஆங்கிலம் பேச முடியும்.

தாய்மாரும் பீஸ் கட்டியதோடு சரி நம் கடமை முடிந்தது என்று இல்லாமல்,அவ்வப்பொது பள்ளிக்குச் சென்று ஆசிரியரிடம் தம் பிள்ளை பற்றி விசாரிக்க வேண்டும்.

தந்தையும் சம்பாதித்து பணம் அனுப்பியதோடு,நம் கடமை முடிந்தது என்று இல்லாமல்,விடுமுறையில் ஊர் வரும்போது பள்ளிக்குச் சென்றும்,தம் பிள்ளையிடம் விசாரித்தும் அவர்களின் கல்வி நிலையை அறியலாம்.

காலில் முள் குத்தியது என்பதற்காக காலை வெட்டி வீசுவதை விட,முள்ளை பக்குவமாக நீக்கிவிட்டு,காலுக்கு செருப்பு போட்டு நடப்பதே அறிவுடைமை...அது போல் அதிரையில் கல்வி தரமில்லை என்று புலம்புவதை விட,வேறு ஊர் பள்ளிக்கு இடம்பெயர்வதை விட,பெற்றோர் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அதிரையிலேயே நம் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

புகழ்பெற்ற இரு பெரும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகமும் நம் சமுதாய நலனை கருத்தில் கொண்டு இதற்கான சில சீர்திருத்தங்களை செய்து குறைகளை களைய முயல வேண்டும்.

ஆசிரியர்களும் தம் திறமையை,அறிவை (update)புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

சில மாணவர்களும் +2 வரை படிப்பில் ஈடுபாடு இல்லாமல் இருந்துவிட்டு,கல்லூரிக்கு சென்ற பிறகு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக படிக்காமல்,சிறு வகுப்பில் இருந்தே ஆர்வத்துடன் படிக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால்,நம் அதிரையிலும் சொந்த வீடுகளில் இருந்தபடியே பிள்ளைக்கு தரமான கல்வி கிடைக்கும் சூழல் உருவாகும். பொருளாதார விரயமும் தவிர்க்கப்படும்.

அதற்கு வல்ல இறைவன் அருள் புரிவானாக!!!
ஆக்கம்: அதிரைத்தென்றல்.

Thursday, July 14, 2011

இமாம் ஷாஃபி பள்ளியின் பரிசு வழங்கும் நிகழ்ச்சி ...

இமாம் ஷாஃபி பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி
நேற்று (13/07/2011) இமாம் ஷாஃபி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஓமன் நாட்டில் இருந்து சிறப்பு விருந்தினர் வருவதாக இருந்தது. சில தவிர்க்க இயலாத காரணத்தால் அவர் வரவில்லை .

விழாவின் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் விபரம் பின் வருமாறு:

நிகழ்ச்சி தலைமை : அப்துல் காதிர் ஆலிம் சாஹிப் அவர்கள்

வரவேற்புரை : பேரா. S பர்கத் MA. M.phil அவர்கள்

வாழ்த்துரை : பேரா. M.A அப்துல் காதிர் MA. M.phil CJMC அவர்கள்

சிறப்புரை : சகோ. M.B அஹ்மது அவர்கள்

பரிசு வழங்கி சிறப்பித்தோர் : சகோ. MST தாஜ்தீன் அவர்கள்
மற்றும் A.M இக்பால் ஹாஜியார் அவர்கள்.

நிகழ்ச்சியின் புகைப்படமும் காணொளியும் அதிரை BBC வாசகர்களுக்காக இதோ :

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.