அதிரையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் அமைந்துள்ளது ஹாஜி SMS ஷேக் ஜலாலுத்தீன் ஆசிரியர் பயிற்சி பள்ளி.
முன்பெல்லாம் ஆசிரியர் பயிற்சி முடிப்பதற்கு மன்னார்குடி நோக்கி பயணிக்கவேன்டும். ஆனால் தற்பொழுது நமதூரிலேயே ஆசிரியர் பயிற்சி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. BEd படிப்பிற்கு அரசு அங்கீகாரம் விரைவில் கிடைக்கும் தருவாயில் உள்ளது.
இந்தியாவில் சிலத் துறைகளில் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கி அல்லது குறைவாக உள்ளவற்றில் கல்வித் துறையும் ஒன்று. இத்துறையில் பின்தங்கி இருப்பதால் தான் கல்வியிலும் மிகவும் பின்தங்கி உள்ளோம் என்பதையும் அறியவும்.
இத்தகைய சூழலில் நமதூரில் கண்ணியத்திற்குரிய ஹாஜி SMS ஷேக் ஜலாலுதீன் அப்பா அவர்களின் நினைவாக அவர்களுடைய வாரிசுகள் பள்ளிகளை நிறுவி சேவை ஆற்றுவது பாராட்டுக்குரியது. இத்தகைய கல்வி நிறுவனங்கள் நமதூருக்கு கிடைக்கப்பெற்றிருப்பது நமக்கு கிடைத்த பாக்கியம்.
இந்நிறுவனத்தில் சுமார் 100 மாணவர்கள் பயிற்சி பெற்று வரும் நிலையில் வெறும் ஆறு பேர் மட்டுமே முஸ்லிம்கள் என்பதும் அதிலும் அதிரையைச் சேர்ந்தவர்கள் ஒருவர்கூட சேரவில்லை என்பதும் வருத்ததிற்குரியதும் வேதனைக்குரியதுமாகும். இதுபற்றி அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜக்கரியா அவர்கள் உள்ளூர் மாணவ மாணவிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த நிறுவனத்தில் உள்ளுரிலிருந்து ஒருவர்கூட கல்வி கற்க வராதது மிகுந்த வருத்தம் தருவதாக நம்மிடம் தெரிவித்தார்.
ஆறாவது ஊதிய கமிசனின் அறிவிப்பிற்குப்பிறகு ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கான சம்பளம் கடுமையாக உயர்ந்து அவர்களின் சம்பளம் வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இணையாக உள்ளது. அதனால் வெளிநாட்டு வாய்ப்புகளைக்கூட வேண்டாம் என்று சொல்லும் நிலை உள்ளது.
இப்படி இருக்க அருகில் இருந்தால் அருமை தெரியாது என்று சொல்வது போன்று உள்ளூரில் கிடைக்கும் ஆசிரியர் பயிற்சி கல்வியை உதாசீனம் படுத்தாமல் கற்க மாணவர்கள் முன்வரவேண்டும்.
சிறந்த சமூகத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள், அத்தகைய பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. உள்ளூரிலேயே நல்ல சம்பளம், வருமானம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை ஆசிரியர்களைத தவிர.
எதிர்கால ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்.
3 பின்னூட்டங்கள்:
நல்ல கவனஈர்ப்பு பதிவு !
சார் எங்கேயோ போயிட்டீங்க !
அஸ்ஸலாமு அலைக்கும்.
நல்ல கவன ஈர்ப்புதான்.ஆனால் நம்ம சமுதாயம் + நாம் பாஸ்போர்ட் நெனப்பாதானே இருக்கிறோம்.
வெளிநாட்டு மோகம் குறைந்தால்தான்.நம்ம ஊரில் வாத்தியார்மார்கள் அதிகரிப்பார்கள்
"வாத்தியார்” வேலையா என்று வாந்தி எடுக்கும் எண்ணம் முதலில் நம்மவரிடம் நீங்க வேண்டும்; முன்பிருந்த ஜனாப்கள் ஹாஜா முஹைதீன் சார், வாவன்னா சார், அலியார் சார் போன்ற நம்தூர் ஆசிரியர்கட்குப் பிறகு தியாகமும் சமுதாய நற்சிந்தையும் மிக்கவர்கள் இன்னமும் தேடியும் கிட்டாமல் இருப்பதுதான் நமது துர்பாக்கிய நிலை. உண்மையில் சமுதாய அக்கறையுடன் செயல்படும் உங்கள் பதிவுகள் சமுதாயத்தினை நோக்கி அக்கரையில் நிற்கும் எங்கள் உள்ளங்கட்கு இதம் அளிக்கின்றது. ஜஸாக்கல்லாஹ் கைரன்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment