அதிரை செக்கடி மேட்டில் அமைந்துள்ள ஜம்ஜம் உணவகம் அதிகாலை 3.45 மணி அளவில் தீ விபத்து ஏற்ப்பட்டது . ஜம்ஜம் உணவகம் கிற்று கொட்டைகையில் அமைந்துள்ளதால் சுலபமாக எறிந்து முற்றிலும் சாம்பல் ஆனது . உணவகம் எறிந்துகொண்டு இருந்த நேரத்தில் செக்கடி பள்ளி வாசலில் ஒலிபெருக்கி முலம் உதவிக்கு அழைத்தார்கள். பொதுமக்கள் இயன்றவரை தீயை அணைக்க அணைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர், இதன்படி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் தீ அணைப்பு துறையினரும் வந்து தீயை அணைத்தனர்.
தீ விபத்து குறித்து காரணம் இதுவரை தெரியவில்லை . விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா என்று காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நன்றி
அதிரை பிபிசி செய்திகளுக்காக
4 பின்னூட்டங்கள்:
உடணடி தகவல் பதிந்தமைக்கு நன்றி...
அவசரத்தில் பதிந்திருக்கலாம், ஏனென்றால் இந்த கானொளியை இடது பக்கம் படுத்துக் கொண்டு பார்க்கனும் போல் இருக்கிறது கானொளிபதிப்பு !
நம் ஊருக்கு ஒரு தீயணைப்பு நிலையம் அவசியம் வேண்டும். இதை அரசிடமிருந்து கேட்டுப்பெற வேண்டும். நமது தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மூலம் இந்த முயற்சி நடைபெற வேண்டும். அதற்கான வேலைகளில் உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், இன்ன பிற அமைப்புகளும் ஒருங்கினைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக அதிரை பைத்துல்மால், அதிரை அரிமா சங்கம், அனைத்து சமுதாய இயக்கங்களும் இதற்கான முயற்சிகளில் முனைப்புடன் செயல் பட வேண்டும். தற்பொழுது அதிரையின் பரப்பளவு நீண்டு கொண்டே செல்கிறது, ஆகையால் குறைந்தது ஒரு தீயணைப்பு வண்டியுடன் கூடிய தீயணைப்பு நிலையம் அவசியம் அமைய ஊர் மக்கள் ஒற்றுமையுடன் போராடி கேட்டு பெற வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஜம்ஜம் ஹோட்டல் உரிமையாளருக்கு என் ஆறுதல்கள்.
புனித ரமளானில் நோன்பாளிக்காக பிரத்யோகமாக சமூசா வாடா போன்ற பண்டங்கள் தயாரித்து விற்க இருந்திருப்பார்கள். இறைவனின் நாட்டம்.
விபத்து இரவில் நடதுள்ளது, வீடுகள் அருகில் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
நம் ஊருக்கு ஒரு தீயணைப்பு நிலையம் அவசியம் வேண்டும்.
தொடரும் தீவிபத்தினால் அதிரை மக்கள் அச்சத்தின் பிடியில் இருக்கின்றனர் .இப்பகுதியல் ஒரு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது எனவ அரசு உடனடியாக எங்கல் பகுதி எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு அதிரையில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பதே கோரிக்கையாகும் .
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment