அதிராம்பட்டினம் காதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ரோசம்மாள் அவர்களுக்கு "சிறந்த தலைமை ஆசிரியருக்கான விருது" வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி 'ஆசிரியர் தின'த்தன்று லயன்ஸ் சங்கம் சார்பாக வழங்கப்பட இருக்கின்றது. காதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி துவங்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை பத்தாம் வகுப்பில் இந்த ஆண்டுதான் தேர்ச்சி சதவிகிதம் 93%ஐ எட்டி உள்ளது . இதுபோன்று சென்ற வருடத்திற்கு முந்தைய வருடம் 12 ஆம் வகுப்பின் தேர்ச்சி சதவிகிதம் 98%-ஐ எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி, பள்ளியின் தரத்தை உயர்த்தியதில் தலைமை ஆசிரியை ரோசம்மாள் அவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இது போல் மேலும் சாதனை பல படைக்க அதிரை பிபிசி வாழ்த்துகிறது .
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.
11 பின்னூட்டங்கள்:
வாழ்த்துக்கள்..
மேலும் காதிர் முகைதீன் மேல் நிலை பள்ளியின் தரம் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் தலைசிறந்து விளங்கவேண்டும் என்பது ஊர்வாசிகள் அனைவரின் விருப்பம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
சந்தோஷமான செய்தி !
எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் மேலும் தொடர்ந்து இதுபோல் கா.மு.மே.நி.ப. தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்றும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் !
காதர் முகைதீன் தலைமை ஆசிரியை ரோசம்மா அவர்களுக்கு எனது மனம்மார்ந்த வாழ்த்துக்கள்
யான்படித்தப் பள்ளிக்கு இவ்வளவுப் புகழ்வந்தது என்ற செய்தியிலே; தேன்குடித்த இன்பம் எய்தினேனே
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு என் வாழ்த்துக்கள்.
பயின்ற பொழுதும் பெரிதுவக்கும் என்பள்ளியை
சான்றோர்போற்ற செவியுறும் முன்னால்மாணவன்
மறுபடியும் வகுப்பறை செல்ல பேராவல் கொண்டேன்
அனுமதி மறுத்த காலத்தை வெறுத்தவனாக...
மென்மேலும் நம் பள்ளி மேன்மையடைய என் வாழ்த்துக்களும், இறை பிரார்த்தனையும்...
மு.செ.மு. நெய்னா முஹம்மது
முன்னால் மாணவன்
(வருடம் 1986 - 1992)
என் ஆசிரியைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.எல்லாம் வல்ல அல்லாஹ் நீண்ட ஆயுளும்,பரக்கத்தும் வழங்குவானாக.ஆமீன்
இந்த இழையினைக் கண்டேன்; யான் படித்தப் பள்ளித்தரம் உயர்வினைப் படித்த்ன்; நன்றிக் கடனாக இப்பா வடித்தேன்
யான்படித்தப் பள்ளித்தரம் உயர்வானச் செய்தியினால்
தேன்குடித்த வின்பம்போல் தித்திப்பை எய்தினேனே
யான்வடிக்கும் பாக்கட்கு யாப்புத்தந் தபள்ளியாமே
யான்குடித்தத் தமிழ்ப்பால் இன்னுமூறு மேயள்ளி
காதிர்மு கைதீனென்(னும்) கல்விச்சாலை கண்டேனே
சாதிமத பேதமற்ற சமத்துவமேக் கொண்டேனே
ஆதியிறை ஞானமுள்ள ஆசானைப் பெற்றேனே
நீதிக்கதைகள் மூலம்தான் நெறிமுறைகள் கற்றேனே
தமிழ்வழியிற் கற்றாலும் தரமான ஆங்கிலமும்
அமிழ்தெனவே ஊட்டியதால் அயல்நாட்டிற் பிழைக்கின்றோம்
இமைகள்தான் கண்களையே இயல்பாகக் காப்பதுபோல்
சுமையாகக் கருதாமல் சுகமாகக் கற்பிக்கும்
தியாகமுள்ள ஆசான்கள் திகழ்கின்ற பள்ளியாகி
வியாபார நோக்கங்கள் விட்டொழித் தெல்லார்க்கும்
நியாயமானக் கல்விதனை நிலைநிறுத்தும் நிர்வாகம்
அயராது ழைக்கின்ற அம்மையார் தலைமையினால்
”
யாப்பிலக்கணம்: காய்+காய்+காய்+காய் (கலிவிருத்தம்)
கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com/
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
shaickkalam@yahoo.com
kalaamkathir7@gmail.com
அலை பேசி: 00971-50-8351499
(அப்துல்)கலாம்-காதிர் காக்கா அவர்களின் கவி வரிகளில் உணர்வுகளோடு உறவாடும் வரிகள்
//தமிழ்வழியிற் கற்றாலும் தரமான ஆங்கிலமும்
அமிழ்தெனவே ஊட்டியதால் அயல்நாட்டிற் பிழைக்கின்றோம்
இமைகள்தான் கண்களையே இயல்பாகக் காப்பதுபோல்
சுமையாகக் கருதாமல் சுகமாகக் கற்பிக்கும்
தியாகமுள்ள ஆசான்கள் திகழ்கின்ற பள்ளியாகி
வியாபார நோக்கங்கள் விட்டொழித் தெல்லார்க்கும்
நியாயமானக் கல்விதனை நிலைநிறுத்தும் நிர்வாகம்
அயராது ழைக்கின்ற அம்மையார் தலைமையினால்//
அஸ்ஸலாமு அலைக்கும்.
மாஷாஅல்லாஹ்...
ஆறு மற்றும் ஏழாம் வகுப்பில் எனக்கு சிறப்பாக கற்பித்த ரோசம்மா டீச்சர் அவர்கள் இன்று அதே பள்ளியில் தலைமை ஆசிரியையாய் சிறப்பாக பணிபுரிவது கண்டு மகிழ்ச்சி.
சாதனையாளரான இவருக்கும் உடன் பணியாற்றும் மற்ற ஆசிரியர்களுக்கும் சாதனை செய்த மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் மென்மேலும் சிறப்புற நான் பிரார்த்திக்கிறேன்.
மிக இனிமையான நல்ல பகிர்வை அளித்த அதிரை பிபிசி தளத்தினருக்கு நன்றி.
நம் முஸ்லிம் சமுதாயம் சார்பாக அவர்களை விருது வழங்கி கவுரவிக்கவேண்டும்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment