பட்டுக்கோட்டை மார்க்கமாக காரைக்குடி வரையான அகல இரயில் பாதை கடந்த பத்தாண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பிறகு சென்னை செல்வதற்கு பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு தற்போது அரியலூர், தஞ்சாவூர் மார்க்கமே இரயில் பயணத்திற்கான ஓரே வழியாகும்.
தஞ்சாவூர் வழியாக செல்லும் இரயில் காலை பத்துமணிக்கு ஏறினால் இரவு 7 மணிக்கு தான் சென்னை சென்றடைகிறது. ஆனால் அரியலூர் மார்க்கமாக சென்றால் 3 மணிநேரம் பயண நேரம் குறைகிறது.
திருச்சியிலிருந்து சென்னைக்கு செல்லும் அநேக இரயில்கள் அரியலூரில் நின்று செல்கின்றன. இதனை கருத்தில் கொண்டு நமதூர் அதிரை, பட்டுக்கோட்டை போன்ற ஊர்களிலிருந்து பொதுமக்கள், இரயிலில் சென்னை செல்பவர்கள், அரியலூர் வழியாக செல்கின்றனர்.
அரியலூர் வழியாக சென்னை செல்பவர்களுக்காக பட்டுக்கோட்டையிலிருந்து தினமும் அதிகாலை 4 மணிக்கு அரியலூர் இரயில் நிலையத்திற்கு அரசுப் பேருந்து ஒன்று இயக்கப்படுகிறது.
இது தற்போதைய நமது சட்டமன்ற உறுப்பினர் கடந்த ஆட்சியின் போது கேட்டுப் பெற்ற பாராட்டுக்குரிய சேவையாகும். இந்த வசதியை வெறும் பத்து நிமிட தூரத்தில் இருக்கும் அதிரையிலிருந்து செல்லும் பேருந்தாக இயக்கவேண்டும் என்பதே நமது கோரிக்கை.
அதுபோல் அரியலூர் இரயில் நிலையத்தில் பல்லவன் இரயில் வந்தவுடன் சுமார் இரவு 7.30 க்கு பட்டுக்கோட்டைக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. இது பட்டுக்கோட்டையை சுமார் 11 மணிக்கு வந்தடைகிறது. ஆனால் இரயில் தாமதமாகும்போது இப்பேருந்து சரியான நேரத்தில் வந்தடைவதில்லை. இதனால் அதிரைக்கு 11.30 மணிக்கு இயக்கப்படும் பேருந்தை பிடிக்க முடியாது. 11.30 மணிக்கு இயக்கப்படும் இப்பேருந்தை தவறவிடும் பட்சத்தில் கடைசிப்பேருந்துக்காக நடுநிசி ஒரு மணி வரை காத்திருக்கவேண்டி உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்,
1. பட்டுக்கோட்டையிலிருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் பேருந்தை அதிகாலை 3.45 மணிக்கு அதிரையிலிருந்து புறப்படுமாறு செய்து தர வேண்டுகிறோம்.
2. அரியலூர் இரயில் நிலையத்தில் இரவு 7.30 மணிக்கு புறப்படும் பேருந்தை அதிரை வரை நீட்டித்து தர வேண்டுகிறோம்.
இக்கோரிக்கையை கணிவுடன் பரிசீலிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1 பின்னூட்டங்கள்:
மிகச்சரியான கோரிக்கை, நம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இக்கோரிக்கையை சர்காருக்கு தெரிவிப்பாரா...? சட்டமன்ற உறுப்பினரின் காதுகளுக்கு நமது கோரிக்கை எப்படி செல்லும்...? இந்த தளத்தின் மூலமாகவா...? அல்லது சட்டமன்ற உறுப்பினரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்களா...? இல்லை, இனிமேல்தான் முயற்சி எடுக்கனுமா...? உரியவர்கள் விளக்கம் தந்தால் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். இன்ஷா அல்லாஹ்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment