அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Tuesday, February 14, 2012

அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தின் ஓர் முக்கிய அறிவிப்பு

அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தின் ஓர் முக்கிய அறிவிப்பு

அன்பார்ந்த பொதுமக்களின் கவனத்திற்கு அடிக்கடி மின்சாரம்  தடை ஏற்படுவதின் காரணமாக நாள் தோறும் வழங்கப்படுகின்ற குடிதண்ணீர் இனிமேல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கப்படும் என்பதை இதன் மூலம் தெரியப்படுத்துகிறோம். ஆகவே வருகின்ற குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாய் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

இங்கனம் 
 
பேரூராட்சி அலுவலக நிர்வாக அதிகாரி
 
அதிராம்பட்டினம்.

7 பின்னூட்டங்கள்:

சேக்கனா M. நிஜாம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நண்பர். அபூபக்கர் ( அமேஜான் ) அவர்களே,

உங்கள் எதிர் வீட்டு பேரூராட்சி தலைவரிடம் சொல்லுங்க............ஜெனேரேட்டர் வரவழைத்து பம்பு மோட்டார்களை இயக்க சொல்லுங்க.............

ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணிர் வழங்கப்படுவது என்பதால், பொதுமக்களுக்கு பாதிப்புகள் கடுமையாக இருக்கும்.

இப்படி ஆனால் எப்படி அதிரைப்பட்டினத்தை ஜி(சி)ங்கப்பூரா ஆக்குவது ?

Abdul Razik said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Dear Mr. Nijam this query have to TN Government only. Now the Electricity deficit is all over Tamil Nadu. Before writing the remarks we must scrutinize the reason. If we survived even if we had separate production industry for Adirai, we can force our Local Panchayat, . Any way….we hope Our Chairman will move with particular Government t Authorities to recover this problem.

Abdul Razik
Dubai

Abdul Razik said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Dear Mr. Nijam this query have to TN Government only. Now the Electricity deficit is all over Tamil Nadu. Before writing the remarks we must scrutinize the reason. If we survived even if we had separate production industry for Adirai, we can blame our Local Panchayat, . Any way….we hope Our Chairman will move with particular Government t Authorities to recover this problem.

Abdul Razik
Dubai

ADIRAI TODAY said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஏற்கனவே அதிரையில் காணமல் போனவர்கள் இருவர் ஒருவர் நாம் (வெற்று) வோட்டளித்து ஊர் பக்கம் தலையே வைத்து படுக்காத எம்.எல்.ஏ. ரெங்கராஜன் மற்றும் எம்.பி. பழனிமாணிக்கம், 3 வது இடத்தை சகோ. அஸ்லம் பிடித்து விடுவரோ என்ற அச்சம் மனதில் வந்துவிட்டது சிங்கப்பூர் வேண்டாம் சொந்த ஊர் சிக்கல் இல்லா ஊராக இருந்தால் போதும்.

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நமது பேரூராட்சியின் மற்றொரு வேண்டுதல்.

ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 6 லிட்டர் தண்ணீர் குடிக்கணும், இனிமேல் நீங்கள் எல்லோரும் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதும். (டீ, காபி, சர்பத் உள்பட)

தாகம் அதிகமாக இருந்தால் குளுகோஸ் ஏற்றிக் கொள்ளலாம்.

மழை பெய்தால் தண்ணீர் விடப்படமாட்டாது. ஆகாச தண்ணீர் பிடித்துக் கொள்ளுங்கள்.

சிறு நீர் அதிகமாக கழிக்க வேண்டாம்.

தும்மல், தடுமல், காய்ச்சல், வாயிற்று வலி போன்ற நோய்களுக்கு உள்ள மாத்திரைகளை தண்ணீர் இல்லாமல் சாப்பிட பழகிக் கொள்ளுங்கள்.

வயிற்றில் பாலை வார்த்தது போல் இருந்தது என்பதற்கு பதிலாக தண்ணீர் வார்த்துவிட்டாய் என்று சொல்லப் பழகிக் கொள்ளுங்கள்.

வெளியூரிலிருந்து வருபவர்கள் குறைந்தது 10 லிட்டர் தண்ணீராவது ஊருக்கு கொண்டு வரவும். இல்லாவிட்டால் அபராதம்.

நமதூர் எல்லாக் குளங்களையும் தூர் வாரி அது குடி நீருக்காக மட்டும் பயன்படுத்தப்படும். அதுவரை மனப்பங் குளத்தில் தண்ணீர் கொண்டுவந்தால் கவுரவப் பட்டம் அளிக்கப்படும்.

தண்ணீரும் நியாய விலைக்கடையில் சேர்த்து விடலாம் என்ற தீர்மானம் கொண்டு வரவுள்ளது.

அடுத்த மாதத்திலிருந்து ஸ்ரீ லங்காவிலிருந்து தண்ணீர் கொண்டு வர பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறது. இங்கு கொசு, குப்பை, வரதட்சணை, ஜால்ரா அதிகமாக இருப்பதாலும் கரண்ட்டு குறைவாக இருப்பதாலும் பம்ப்பு செட்டை ஸ்ரீ லங்காவிலேயே வைத்து விடலாம் என்ற கூடுதல் கவனமும் உள்ளது.

நமதூர் வெகு விரைவில் சிங்கப்பூரா மாறிவிடும்.

imran kareem said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

முஸ்லிம் வாழும் பகுதிகளில் மட்டும் அரசும்,அரசு இயந்திரமும் சிக்கன நடவடிக்கை எடுப்பது காலம்காலமாக நடக்கும் ஒன்று தான். ஓட்டு கேட்டு வரும் போது சிங்கப்பூர்,துபாய் என்று சொல்லும் போதே நமக்கு தெரிந்து விடும் சராசரி அரசியல்வாதியின் இலட்சணம் எது என்று , மக்களின் அத்தியாவசிமான தேவையை மட்டுமாவது அரசு சிரமம் பாராது சேவை செய்ய வேண்டும்

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மேற்குறிப்பிட்டஆலோசனைகளை ஜெனரடோர் மூலம் தண்ணீர் இறைக்க முயற்சித்தால் நன்மை பயக்குமே

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.