அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Friday, February 3, 2012

புதிய பாஸ்போர்ட்/ பழைய பாஸ்போர்ட் எடுக்க தேவையான ஆவணங்கள்


நாம் வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) முக்கியமான ஒன்று. இந்த பாஸ்போர்ட்டை நாம் எப்படி புதிதாக பெறுவது. நாம் எடுத்த எப்படி பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.இந்த விசயம்பற்றி ஒவ்வொரும் தெரிந்துக்கொள்வது முக்கியம்.


புதிய பாஸ்போர்ட் எடுப்பது எப்படி.



1.நம்முடைய வசிப்பிடம் அடையாளத்திற்காக ரேசன் கார்டு- இது
கட்டாயம் கொண்டு செல்லவேண்டிய ஆவணம்


2.புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம் (ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம்,மத்திய அரசு அடையாள ஆவணம், அரசால் அங்கிகரிக்கப்பட்ட புகைப்படத்துடன்கூடிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்று)


3.பிறந்த தேதிஅல்லது ECNR-ன் தேவைகளுகு படிப்புச்சான்று அவசியம் கொண்டுசெல்லவேண்டும்


4.1989-ஆண்டு மற்றும் அதற்கு மேல் பிறந்தவர்கள் கட்டாயம் பிறந்த சான்றிதழ் கொண்டு செல்லவேண்டும்


5.திருமணமாகிருந்தால் நோட்டரி கிளப்உறுப்பினரிடம் சான்று ( (affidavit) பெற்று செல்லவேண்டும்.2009ம் ஆண்டு அல்லது அதற்கு மேல் திருமணம் செய்தவர்கள் கட்டாயம் தனது திருமணத்தை பதிவு அலுவலகத்தில் (Register Office) பதிவு செய்யதிருக்கவேண்டும்


6.சிறு குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் எடுக்கவேண்டுமேயானால் அந்த குழந்தையின் தாய் கட்டாயம் பாஸ்போர்ட் பெற்றிருக்க வேண்டும், தந்தை வெளிநாட்டில் இருந்தால் அந்த நாட்டில் இருக்கிறார் என்ற துதரகக் (Embasssy) கடிதம் கொண்டு செல்லவேண்டும்.

பழைய பாஸ்போர்ட புதுப்பித்தல் பழைய பாஸ்போர்ட் காலத்தவணை முடிந்துவிட்டது என்றாலோ காலத்தவணை முடியும் நேரத்திற்கு 1வருட காலத்தவணத்திற்கு முன்போ, புகைப்பட மாற்றம்வேண்டியோ, பாஸ்போர்ட் கிழிந்துவிட்டாலோ. காணாமல் போய்விட்டாலோ முகவரி மாற்றம், மனைவி/கணவன் பெயர் சேர்த்தல் காரணங்களுக்காக அதற்குரிய ஆவணங்களை சமர்பித்து புதிதாக பாஸ்போர்ட் பெறலாம்.



1. ஒரிஜினல் பழைய பாஸ்போர்ட்


2. நம்முடைய வசிப்பிடத்திற்கான ரேசன் கார்டு ஆவணம்


3. புதிப்பிக்கும் தருணத்தில் ECNR-ன் தேவைகளுக்கு படிப்பு சான்று அல்லது வெளிநாட்டில் இருந்த 3 வருட அனுபவங்களை நோட்டரி கிளப்உறுப்பினரிடம் சான்று (affidavit) பெற்றுசெல்லவேண்டும்.


மேலும் விபரங்களுக்கு டிஜிடெக் கம்ப்யூட்டர், காலேஜ்ரோடு, அதிராம்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் கலக்டர் அலுவலகத்திலும், இணையத்திலும் விபரங்கள் அறியலாம்.
ஆவணத்தில் உள்ள பெயர்கள், முகவரிகள் சரியாக இருக்கின்றன என்பதை சரிபார்க்கவும். சரியாக இல்லையயன்றால் அதுக்குரிய அலுவலகத்தில் அதனை திருத்தம் செய்து கொள்ளுங்கள்.

டிஜிடெக்கில், டிஜிடெக் கம்ப்யூட்டர், காலேஜ்ரோடு, அதிராம்பட்டினம் இதற்கான அப்பாயிண்ட்மெண்ட் எடுத்துக்கொடுக்கப்படுகிறது.

1 பின்னூட்டங்கள்:

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நமதூருக்கு மிக முக்கியமான பதிவு வயது வந்தவர்களின் கட்டாய கடமைகளில் ஒன்று..... சில நாட்கள் படிப்பு பல நாட்கள் வனவாசம் என்பது போன்று மேலை நாட்டு விசுவாசம்.... அல்லாஹ்தான் நம்மை காப்பாற்றவேண்டும்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.