அதிரை தமுமுக வின் செயலாளர் தையுப் நேற்று (27/2/12)மர்ம நபர்களால் தாக்கப்பட்டரர் . கடந்த 26.2.12அன்று SDPI யின் சார்பாக திருவாரூரில் அகல ரயில் பாதை விசயமாக மறியல் நடைபெற்றது இதில் கலந்து கொள்ள சென்ற ஒருவரை சகோ.தையுப் அவர்கள் தடுத்து நிறுத்தினார் என்ற காரணத்தால் சகோ.தையுப் அவர்களுக்கும் அதிரை SDPI இல்யாஸ் அவர்களுக்கும் சிறிது கைகலப்பு ஏற்ப்பட்டது இது தொடர்பாக இரு தரப்பிலும் அதிரை காவல்துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டது அதிரை காவல்துறை ஆய்வாளர் செங்கமலைக் கண்ணன் அவர்கள் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சமாதானம் ஏற்ப்பட்டு பின்னர் வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
மறுநாள்(27/2/12) தையுப் அவர்கள் தக்வா பள்ளி அருகில் இருக்கும் மார்க்கெட்டில் இருந்து நடுத்தெரு வழியாக பைக்கில் வந்து கொண்டு இருக்கும்போது முகத்தை முடிக்கொண்டு இருவர் பைக்கில் வந்து இரும்பு பைப்பால் தாக்கினார்கள் இதில் தையுப் அவர்களின் முகத்திலும் தோள்பட்டையிலும் காயம் ஏற்பட்டு அதிரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.தமுமுகாவின் சார்பாக அதிரை காவல் துறையிடம் நேற்று நடந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக தாக்கியது SDPI யை தான் என்று மனு கொடுக்கப்பட்டுள்ளது . வழக்கு பதிவு செய்து அதிரை காவல்துறை ஆய்வாளர் செங்கமலைக் கண்ணன் விசாரணை நடத்தி வருக்கிறார் சகோ தையுப் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் முலம் கொண்டு செல்லப்பட்டார்.
14 பின்னூட்டங்கள்:
மனித நேயத்திற்கு எடுத்தக்காட்ட விளங்கக்கூடிய நமதூரில் இப்படி ஒரு சம்பவம்............................மிகவும் வேதனைக்குரியது !
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களையும் பாதுகாப்பானாக ஆமின் !
நம் சமுதாய மக்களுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் பிளவு மிகவும் வேதனையளிக்கிறது. சகோ. தைய்யுப் குணமடைய இறைவனிடம் வேண்டுகிறேன்!!!
அதில் தமுமுக உண்டு sdpi இயை ய்ம் உண்டு pfi ய்ம் ஆகும் etc..
மிகவும் வேதனையான செய்தி.அல்லாஹ் நம் சமுதாய மக்களிடையே ஒற்றுமை ஏற்பட உதவி செய்வானாக
சகோதரரை தாக்கிய மர்ம நபர்கள் விரட்டிச்சென்று பிடிக்கப்பட்டு உண்மை நிலை உடனுக்குடன் தோலுறித்துக்காட்டப்பட்டிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட இயக்கத்தினர்களாலேயே அவ்வியக்கத்திற்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் கிடைத்து ஊர் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த ஒரு இயக்கமும் துடைத்தெறியப்பட வேண்டும். நாடும் அதன் மக்களும் நலமுடன் வாழ வழிவகை செய்ய வேண்டும். மதங்களுக்கு அப்பாற்பட்ட மனிதம் மதிக்கப்பட வேண்டும்.
கண்டதற்கெல்லாம் மாறி, மாறி வசைபாடிக்கொள்ளும் அரசியல் கட்சிகள் போல் இல்லாமல் இது போன்ற துரதிஸ்டவசமான சம்பவங்களுக்கு நாம் மத்திய, மாநில அரசுகளையோ அல்லது ஊர் பஞ்சாயத்தையோ குறை சொல்ல முடியாது.
"ஏன்ய்யா ஊரு நல்லாத்தானே அமைதியா போய்க்கிட்டு இருக்கு? சும்மா இருக்க மாட்டியளா? குடும்பங்களையெல்லாம் ஊரில் இறைவனுடைய பாதுகாப்பில் விட்டு விட்டு உங்களின் ஆதரவு, அனுசரணைகளையும் விமானம் ஏறுவதற்கு முன் அமானிதமாக உங்களிடம் ஒப்படைத்து விட்டு இங்கு வந்ததற்கு நீர் செய்யும் நன்றிக்கடனா? அல்லது நம்பிக்கை துரோகமா? நீயே உம் நெஞ்சை யாருமறியாமல் தனியே ஒரு ஓரமாய் நின்று ஒரு முறை தொட்டுப்பார்த்துக்கொள்ளும்!!!"
ஊரில் எப்படியாவது கலகமும், குழப்பமும் ஏற்படுத்த துடிக்கும் அந்த துர்குணம் உடையவர்களுக்கு வெளிநாடு வாழ் அதிரை வாசிகளின் ஒருமித்த கருத்தாகிய ஒரே கேள்வியே மேலே கேட்கப்பட்டுள்ளது பதில் சொல்லும்......
அப்பாவிகளின் செங்குருதியில் சிகப்புக்கம்பளம் விரிக்க நினைக்காதே; பிடிக்காதவர்களெல்லாம் வெட்டி வீழ்த்தப்பட வேண்டுமென்றால் உன்னை ஊருக்கே பிடிக்கவில்லையே என்ன செய்வது?
பிற இயக்கத்தவகர்லின் ஆர்ப்பாட்டமோ அல்லது போராட்டமோ தடுத்தல் என்பது தவறு.... அதிலும் குறிப்பாக நமதூர் சம்பத்தப்பட்ட ரயில்வே பிரச்சினைக்காக யார் போர்டினாலும் தோள்கொடுக்க வேண்டும்.... இருப்பினும் தய்யிப் அவர்களை அரக்கன் போன்று தாக்கியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது அதிலும் நமக்குள் இத்தனை பிரச்சினை என்பது வெட்கி தலை குனிய வைத்துள்ளது....
ஊரில் நடந்த உருப்படாத வேளைகளில் இந்த தாக்குதலும் ஒன்று!
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்
பெரும்பாலும் நம்மூரில் இது போல் நடந்தது கிடையாது எப்பொழுது இயக்கங்கள் மரவேற்போல் பிரிந்தனவோ அப்பொழுதான் இந்த பகைமை என்னும் இலை முளைக்க தொடங்கிற்று ஏன் இந்த இயக்க வெறி பிடித்து அலையும் இந்த இளைய சமுதாயம் நம்மூரில் மட்டுமல்லாது போன நோன்பில் நடந்த சம்பவம் இருவேறு இயக்கங்களுக்குள் நடந்தேறிய இந்த இழிவு செயல் தூப்பாக்கி குண்டு துளைத்து ஒருவர் கொல்லப்பட்டார்
சாதாரணமாக முஸ்லிம் இயக்கங்கள் என்றாலே மாற்று மதத்தார் மத்தியில் நிலவும் குழப்பங்களும், அவர்கள் கருதும் எண்ணமே வேறு இப்படி இருக்க நமக்குள் நிலவும் இயக்க வெறி எதற்கு? நம் இளைய சமுதாயம் சிந்திக்க வேண்டும்
இவர்கள் மத்தியில் நிகழும் இந்த மோதல் அவரவர் இயக்க தலைவர்கள் என்ன செய்துகொண்டு இருகிறார்கள் இதை தான் அவர்கள் இளைய சமுதாய சகோதரகளுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்களா?
ஊர் நலன் கருதி நம்மூர் ஆலிம்களும் / உலாமாக்களும் மற்றும் ஊர் பெரியவர்களும் இந்த மோதலை கண்டித்து அவரவர் இயக்க தலைவர்களை அணுகி இருதரப்பிலும் சமரசம் செய்து இனிமேல் எக்காலத்திலும் இந்த மோதல் வராமலிருக்க முயற்ச்சிகள் மேற்கொள்(ளலாமே?)வோம்....இன்ஷா அல்லாஹ்
பசியிலிருந்து விடுதலை- பயத்திலிருந்து விடுதலை என்ற SDPI யின் கொள்கை இதுதானா? நமது எதிரி நம் சகோதரனா? அல்லது சங்பரிவார்களா? என்பதை SDPI சகோதரர்கள் சிந்தியுங்கள்.
பாதிக்கப்பட்ட மனிதன் மன்னிக்காவிட்டால் அல்லாஹ் மன்னிக்கமாட்டான் என்பதை உணர்ந்து, தவறுக்கு வருந்தி பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்டு, ஒற்றுமையாக இஸ்லாம் காட்டிய வழியில் அரசியல் நடத்துங்கள்.
சாதிக்கொரு வண்ணக்கொடிகளை வைத்துக்கொண்டு அடித்துக்கொண்டு செத்த கலாச்சாரம் இயக்கங்களின் பேருதவியால் அதிரையில் தொடங்கியு்ள்ளது. பக்குமவற்ற இளைஞர்களிடமிருந்து இயக்கங்களையும், பேதங்கள் வளர்த்து சமுதாயத்தைக்கூறுபோடும் இயக்கங்களிடமிருந்து முஸ்லிம்களையும் எல்லா வல்ல அல்லாஹ் காத்தருள்வானாக. ஆமீன்.
இரண்டுபேர் தனிப்பட்ட மோதலை அல்லது சில சுயநலவாதிகள் இயக்கத்தில் இருந்தால் இயக்கம் எப்படி கெட்ட இயக்கமாகும் , அப்படியென்றால் இஸ்லாம் தீவிரவாத , பயங்கரவாத மார்க்கமா?, உண்மைதெரியாமல் இயக்கங்களை குறை கூறகூடாது
சிலர் இயக சமுதாயம் ஓற்றுமை ஓற்றுமை என்று வாயினால் பேசுவார்கள் ஆனால் செயல்பாடுகளில் ஓற்றுமை பார்க்கமுடியாது
உதாரணம்:19 து முஸ்லிம் இயககளும் சேர்த்து ஒரு சமுதாய இயக்கத்தை வேமர்சித்தர்கள் அனால் உளளாச்சி தேர்தளில் குட ஓற்றுமை கட்ருலேய பரக்கவெடனர் ? இவர்களீன் ஒற்றுமை எங்கே போனது ?
இல்லையே.....
இதுவா இஸ்லாமிய கட்சி ??இஸ்லாத்திற்கு கடுகழஹு குட சம்மதம் இல்லையே.....
SDPI & TMMK ஆகிய இரண்டு வழிகேடர்களும் இஹ்வானிய சிந்தனையால் தாக்கம் பெற்றவர்கள். இவர்களுக்கு மத்தியில் ஒற்றுமை ஏற்படுத்த முடியவில்லை!!! இவர்கள் இந்த ஜனநாயக வழிமுறையில் ஆட்சிக்கு வந்தாள் இது போன்ற அடாவடிதனமான ஆட்சித்தான் செய்வார்கள்.
அல்லாஹ் இந்த சமுகத்தை இந்த வழிகெட்ட கும்பலிருந்து காப்பாற்றுவானாக....ஆமீன்
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment