மஸ்ஜித் அல் பாக்கியத்துஸ் சாலிஹாத் :
அதிரையில் உள்ள அல் பாக்கியத்துஸ் சாலிஹாத் பள்ளியில் சிறுவர், சிறுமிகளுக்கு மார்க்க கல்வி பயிற்றுவிக்கும் வகுப்புகள் தினமும் ( வெள்ளிக்கிழமை தவிர ) காலை மணி 6.30 முதல் மணி 8.00 வரை நடைபெறுகிறது. இதற்காக மெளலவி அப்துல் மஜீது ஆலிம் – ( இப்பள்ளியின் இமாம் ), மெளலவி மாலிக் மீரான், மெளலவி முஹம்மத் இத்ரீஸ் – (அரபி பேராசிரியர் KMC ), அஸ்கர் அலி போன்ற ஆசிரியர்களால் குரான் ஓதும் பயிற்சிகள், ஹதீஸ்களின் விளக்கங்கள், சூராக்கள் மனனம், இஸ்லாமிய பொதுஅறிவு கேள்வி-வினாக்கள் போன்றவைகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இப்பகுதியை சேர்ந்த ஒரு சில நல் உள்ளங்களின் நிதி உதவியால் நடைபெறும் இப்பயிற்சி வகுப்புகளால் சிறுவர், சிறுமிகள் நல்ல ஒழுக்கத்துடன் கூடிய கட்டுப்பாடுகளை பின்பற்றுவது அனைவர்களையும் வியக்க வைக்கிறது. ஆசிரியர் குழுவால் மாதம் ஒரு முறை சிறுவர், சிறுமிகளின் பெற்றோர்களை வரவழைத்து தங்களின் குழந்தைகளின் நிலைகளை விளக்குவது குறிப்பிடத்தக்கது.
இருபத்திஒன்பது மஸ்ஜித்களைக் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க நமதூரில் ஒருசில மஸ்ஜித்களில் மட்டுமே சிறுவர், சிறுமிகளுக்கான “குரான் ஓதுதல் பயிற்சிகளின்” வகுப்புகள் நடைபெறுகின்றன. உலகக்கல்வியை சிறப்பாக கற்கும் நமது சிறுவர், சிறுமிகள், மார்க்க கல்வியை அவர்களுக்கு பயிற்றுவிப்பது என்பது அவசியமாகிறது. இதற்காக நமதூரில் உள்ள இஸ்லாமிய பொது அமைப்புகள் குரான் ஓதுதல் பயிற்சிகள் நடைபெறாத மற்ற மஸ்ஜித்களை கண்டறிந்து அதற்குண்டான ஏற்பாடுகளை செய்து ஸாலிஹான தலைமுறைகளை உருவாக்க வேண்டுமாய் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இதற்கு உதவி புரிவானாக ! ஆமின் !
இறைவன் நாடினால் ! தொடரும்.....................
2 பின்னூட்டங்கள்:
மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியை தந்துவிட்டார் அருமை சகோதரர் சேகனா M நிஜாம் அவர்கள்.
ஒவ்வொரு முஸ்லீம்கள் வீட்டிலும் டிவி போன்ற அனாச்சாரங்கள் பெருகுவதர்ற்கு அதி முக்கிய காரணம் டிவியில் வரும் இஸ்லாம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை காட்டி, அந்த நிகழ்ச்சியைப் பற்றி பெருமையாகப் பேசி மற்றவர்களை பார்க்கத் தூண்டுவதால் தான். (Best exchamble : இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்). ஒரு முஸ்லிம் வீட்டில் (தொழுகை நேரம் போக) சராசரியாக ஒரு நாளைக்கு 6 மணிநேரம் டிவி ஓடுது என்றால் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை இஸ்லாமிய நிகழ்ச்சி காட்டுவார்கள் என்றால் ஒரு நாளைக்கு 10 நிமிடம் தான் ஓடும். இடைடையில் அவை நிர்வாண விளம்பரம் வேறு.
என்னதான் விஷத்தில் தேன் கலந்தாலும் அதன் நச்சுத் தன்மையை காட்டாமலா இருக்கும்.
சகோ. சொன்னதுப் போல் எல்லா பள்ளியிலும் இது போன்ற இஸ்லாமிய பாடம் நடத்தினால் குறைந்த பட்சம் விஷத்தை குறைப்பதற்கு வேப்பில்லையை வைத்து அடிப்பது போலாவது இருக்கும்.
நன்றி சகோ. சேகனா M நிஜாம்
தொலைகாட்சி என்பது இன்று ஒரு தவிர்க்க முடியாத சாதனம்..... கத்தியை கொண்டு எப்படி நல்ல விசயங்களுக்கும் மற்றும் தீய விசயங்களுக்கும் பயன்படுத்த முடியுமோ அது போன்று தான் இந்த சாதனமும்..... தகுந்த விழிப்புணர்வி முக்கியம்...
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment