அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Wednesday, February 8, 2012

முந்தைய திமுக அரசின் அலட்சியம் சரி, அதற்காக இப்போது மக்கள் மீது பெரும் சுமை ஏன்!

மின் கட்டணத்தை 110 சதவீத அளவுக்கு உயர்த்த வேண்டிய கட்டாய நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறதாம்.  மின் கட்டண உயர்வுக்கான பரிந்துரை நடைமுறைக்கு வந்தால், கூடுதல் கட்டணமாக ஆண்டுக்கு ரூ. 8,200 கோடி மக்கள் மீது திணிக்கப்படும். அதாவது, இதுவரை யூனிட் ஒன்றுக்கு 75 பைசா, 85 பைசா என செலுத்தி வந்த நுகர்வோர் இனிமேல் குறைந்தபட்சம் ரூ. 2 என்ற அளவில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இப்போது 5 படிகளாகப் பிரித்து மின் கட்டணம் அளிவீடு செய்யப்படுகிறது. அது, இனிமேல் 3 படிகளாகக் குறைக்கப்படும். அதோடு தற்போது 600 யூனிட் வரை வழங்கப்படும் மானியம், இனிமேல் 500 யூனிட்களாகக் குறைக்கப்படும்.
இதனால் 600 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்கள் இதுவரை செலுத்தி வந்த ரூ. 1,100 கட்டணத்துக்கு பதில் ரூ. 2,375-க்கு மேல் அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
கட்டண உயர்வு ஏன்?÷கடந்த ஆண்டு நிலவரப்படி மின்வாரியத்துக்கு ரூ. 42 ஆயிரத்து 175 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு, நிகழாண்டில் ரூ. 53 ஆயிரம் கோடியாக உயர உள்ளது. இதுவே மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்குக் காரணம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
உண்மைக் காரணம் என்ன? மானியம் மற்றும் கட்டணங்களை தமிழக அரசு முழுமையாக அளிக்காததே, மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதற்கான முக்கிய காரணம் என்று மின்வாரிய அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர்.
தமிழக அரசின் கொள்கை முடிவின்படி 19 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கும், 14 லட்சம் குடிசைகளின் மின் இணைப்புகளுக்கும், விசைத்தறி, நெசவு, ஆலயங்கள் ஆகியவற்றின் இணைப்புகளுக்கும் இலவசமாக மின்சாரம் அளிக்கப்படுகிறது.
இந்த இலவசங்களுக்கு ஈடாக 2008-2009 நிதியாண்டில் ரூ. 4,118 கோடியை மானியமாக மின்வாரியத்துக்கு அரசு அளித்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு வழங்கியதோ ரூ. 263 கோடி மட்டுமே.
2009-10 நிதியாண்டில் அரசு வழங்கியிருக்க வேண்டிய மானியத் தொகை ரூ. 5,858 கோடி. ஆனால் அரசு வழங்கியதோ ரூ. 267 கோடி மட்டுமே. எனவே, மின்வாரியத்தின் வருவாய் இழப்புக்கு கடந்த திமுக அரசே முக்கிய காரணம்.
மின்வாரியத்தின் மின் ஆதாரத்தில் 25 சதவீதம் விவசாய மின் இணைப்புகளுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, மானியங்களுக்கான தொகையை அரசு முழுமையாக அளித்திருந்தால், மின்வாரியத்தின் வருவாய் இழப்பு மிகவும் குறைவாக இருந்திருக்கும்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கும் ஆந்திரத்தில், மானியத் தொகையாக ரூ. 3,665 கோடியை அம்மாநில அரசு மின் வாரியத்துக்கு அளிக்கிறது. இதேபோல பஞ்சாப் அரசு அம்மாநில மின் வாரியத்துக்கு ரூ. 2,565 கோடி மானியத் தொகை அளிக்கிறது. ஆனால் தமிழக அரசு முழு மானியத் தொகையை தொடர்ந்து வழங்கவில்லை.
வாரியத்துக்கு மீட்சி நிதி தேவை: கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் அதிகரித்துவரும் மின் நுகர்வோருக்கு ஏற்ப மின் உற்பத்தி செய்வதற்குத் திட்டம் கொண்டு வரப்படவில்லை.
மேலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்பதற்காக வெளிச் சந்தையில் கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டதும், வருவாய் இழப்புக்கு முக்கியக் காரணமாகும்.
எனவே, இந்த இழப்புக்கு பொறுப்பேற்று மின்வாரியத்துக்கு மீட்சி நிதி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர்.
ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மின் கட்டணத்தை 110 சதவீத அளவுக்கு உயர்த்துவதற்கு பதிலாக, வருவாய் இழப்பைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது மொத்த மின் உற்பத்தியில் தனியாரின் பங்களிப்பு 11 சதவீதம் மட்டுமே. ஆனால், இந்தத் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்காக, மொத்த வருவாயில் 30 சதவீதத்தை மின்வாரியம் செலவிடுகிறது. எனவே, இந்தத் தனியார் நிறுவனங்களுடன் செய்துள்ள ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.
அரசுத் துறைகள் வைத்துள்ள மின் கட்டண பாக்கியை வசூலிக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், கூடுதல் சுமையை நுகர்வோர் மீது ஏற்றுவதைத் தவிர்க்கலாம் என்கின்றனர் மின் நுகர்வோர் நல ஆர்வலர்கள்.

விவசாயிகள் என்ற போர்வையில் நிறைய பண்ணை யார்களும், பெருவிவசாயிகளும் தான் இலவச மின்சாரத்தை உபயோகிக்கிறார்கள். அவர்களுக்கு வீடுகளுக்கு வசூலிக்கும் கட்டணத்தை அவசியம் வசூலிக்கவேண்டும். உண்மையான ஏழை குறுநில விவசாயிகளை கணக்கெடுத்து அவர்களுக்கு மட்டும் இலவச மின்சாரம் வழங்கவேண்டும். மேலும் உண்மையாக குடிசையில் வசிப்பவர்களின் சொந்த குடிசையாக மட்டுமிருந்தால் மட்டுமே இலவச மின்சாரம் வழங்க வேண்டும். முக்கால் வாசி குடிசைகளில் இருப்போர் அந்தந்த பகுதிகளில் செல்வாக்கு மிகுந்த அரசியல் வாதிகள், கவுன்சிலர்கள் மற்றும் தாதாக்களுக்கு சொந்த மான குடிசைகளில் வாடகைக்கு இருக்கிறார்கள். சில தொழிற்சாலை களுக்கு, பணத்திற்கு ஆசைப்படும் மின் பணியாளர் களின் உதவியுடன் மின் உபயோகம் குறையும் படி யும் ஏற்பாடு செய்யபட்டிருக்கலாம். அவர்களின் உண்மையான மின் உபயோகத்தை கண்டறிவதுடன் முறைகேடான பயன் பாட்டிற்கு அவர்கள் மேல் நஷ்ட்ட்ட ஈடு நடவடிக்கையும் எடுக்கலாம். இப்படியெல்லாம் செய்தால் கூடுதல் சுமையை நுகர்வோர் மீது ஏற்றுவதைத் தவிர்க்கலாம். 

இந்த செய்தியை தந்தமைக்கு நன்றி. 

பயனுள்ள தகவல்.  

2 பின்னூட்டங்கள்:

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

காட்டாட்சி தர்பார் நடக்கிறதோ என்று என்ன தோன்றுகிறது.... நிர்வாக முறைகேட்டை முதலில் சீர் செய்யட்டும் இந்த ஒழுங்குமுறை குழு..... இதை விடுத்துவிட்டு மின் சுவிட்சை தொட்டாலே மின்சாரத்தை பாய்ச்சுவது போன்று கட்டண கொள்ளையில் இறங்க முனைந்துள்ளது இந்த அரசாங்கம்..... ஏன் இந்த நிலைப்பாடு சென்ற ஆட்ச்சியில் மக்களை கூட்டி விலை வாசி உயர்வை கண்டித்த இந்த அம்மையார்..... இன்று தன்னிலை அறியாமல் பயனித்துகொண்டிருக்கிறார்..... களியாட்டம் தொடர்ந்தால் காலம் பதில் சொல்லும் என்பதை நினைவில் நிருத்திகொள்ளட்டும்...

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மின்வெட்டு - அம்மா நம் கழுத்தை வெட்டுவது போல் உள்ளது.

சோதனையில் ஒரு வேதனை.
வேதனையில் ஒரு போதனை - ஆம்
தொடர்ந்து சீரியல் பார்ப்பது மெத்தனமாகும்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.