செல்போனுக்கு கிடைக்ககூடிய சிக்னல்கள் அனைத்தும் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் செல்போன் டவரிலிருந்தே வெளிப்படும். இந்த டவர்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு கதிர்வீச்சு அதிகமாக இருக்கும்.
இக்கதிர்வீச்சால் புற்று நோய், தலைவலி, தூக்கமின்மை, மயக்கம், கவனக்குறைவு, காதில் இரைச்சல், ஞாபகசக்தி குறைவு, அஜிரணக் கோளாறு, இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்றவை ஏற்படக்கூடும் என்று ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.
மேலும் சிட்டுக் குருவிகள், மைனா, தேனீக்கள் போன்ற இனங்களைப் பார்ப்பதே ரொம்ப அபூர்வமாகி அழிந்துகொண்டு வருகிறது.
தீர்வுதான் என்ன ?
1. குறைந்த அளவு கதிரியக்கத்தை வெளிபடுத்தும் சிறிய வகை ஆன்டெனாக்களை, குறைந்த பட்சம் 30 மீட்டர் . சுற்றளவிலான பாதுகாப்பு வளையத்துக்குள் அமைக்கலாம்
2. மக்கள் அதிகமாக வசிக்கும் குடியிருப்பு பகுதிகள், மஸ்ஜித்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் செல்போன் டவர்கள் அமைப்பதை தவிர்க்கலாம்.
3. செல்போன் டவர்கள் இல்லாமலேயே செயல்படக் கூடிய நவீன செல்போன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம்.
4. பொதுமக்கள் தங்கள் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதியின் ஒரு பகுதியை செல்போன் டவர்கள் அமைக்கும் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவதை தவிர்க்கலாம்.
தீர்வுதான் என்ன ?
1. குறைந்த அளவு கதிரியக்கத்தை வெளிபடுத்தும் சிறிய வகை ஆன்டெனாக்களை, குறைந்த பட்சம் 30 மீட்டர் . சுற்றளவிலான பாதுகாப்பு வளையத்துக்குள் அமைக்கலாம்
2. மக்கள் அதிகமாக வசிக்கும் குடியிருப்பு பகுதிகள், மஸ்ஜித்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் செல்போன் டவர்கள் அமைப்பதை தவிர்க்கலாம்.
3. செல்போன் டவர்கள் இல்லாமலேயே செயல்படக் கூடிய நவீன செல்போன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம்.
4. பொதுமக்கள் தங்கள் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதியின் ஒரு பகுதியை செல்போன் டவர்கள் அமைக்கும் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவதை தவிர்க்கலாம்.
இறைவன் நாடினால் ! தொடரும்.....................
11 பின்னூட்டங்கள்:
இப்பொழுது செல்போன் வந்ததால், மாப்ப்ளில்லையை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு "அவர் பறந்து போனாரே, என்னை மறந்து போனாரே" என்றெல்லாம் இப்பொழுது யாரும் கடிதத்தைப் பார்த்து படிப்பதில்லை.
அஸ்ஸலாமு அழைக்கும்... நான் இந்த தோற்றத்தை கண்டு வெகுநாட்கள் கடந்துவிட்டது...என் சிறுவயதில் எங்கள்வீட்டில் அதற்காக சிறு வீடுகட்டி அதில் வைக்கோல் வைத்து பின்னர் அதனை தொங்கவிடுவோம்...இட்சிருக்குருவிகள் அக்கூடினில் வந்தமர்ந்து ஒருவிதமான சப்தமிடும், இதனை என் பெரியம்மா சிறு கதை ஒன்றை கூறுவார்கள். அக்குருவி நமக்காக இறைவனிடத்தில் நன்மைகள் வேண்டி துஆ செய்கிறதென்று.....இப்பொழுதும்கூட எங்கள் வீட்டில் கொத்து விளக்குவொன்றில் கூடுகட்டி வாழ்கின்றது....
சிட்டுக்குருவி மட்டுமல்ல, உள்ளான்குருவி, காச்சல்குருவி,மைனா போன்ற பறைவைகள் எல்லாம் இப்போ காணாமல் போய்விட்டது. செல்போன் டவர் வைப்பவர்கள் வீட்டைதான் பார்க்கிறார்கள் டவர் வைப்பதற்கு ஏன் என்றால் அவர்களுக்கு விளம்பரமாகவும் போகுது அதை சமையம் வியாபாரமாகவும் போகுது. வீட்டில் உள்ளவர்கள் செல்போன் டவர் வைப்பதற்கு இடம் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள் அவர்களுக்கு வருமானம் வரும் என்பதால். அப்படி இடம் கொடுப்பவர்கள் பக்கத்தில் உள்ள நோயாளிகளையும் பார்ப்பதில்லை அவர்களுக்கு வருமானம் வந்தால் போதும் என்ற மனப்பான்மையில் உள்ளனர். செல்போன் டவறினால் என்ன என்ன தீமைகள் ஏற்படும் என்பது அறிவதில்லை. இப்போ பறவை இனம் அழிந்து வருகிறது செல்போன் டவரினால்.
// 4. பொதுமக்கள் தங்கள் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதியின் ஒரு பகுதியை செல்போன் டவர்கள் அமைக்கும் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவதை தவிர்க்கலாம்.//
நம்ம ஊருலே இருக்கிற நபர்கள் இதை முக்கியமாக பின்பற்ற வேண்டும்.
இந்த பறவையின் பெயர்க்காரணத்தை அறிய ஆவல், 'சிட்டு' என்பதும் ( பூஞ்சிட்டு, தேன்சிட்டு) சிறு பறவையினம். குருவி என்பதும் (உள்ளான்,மரங்கொத்தி) மற்றொரு பறவையினம்!! ஆனால் இந்த பறவைக்கு மட்டும் சிட்டுக்குறுவி என்று பெயர் !! இது பற்றிய தகவல் யாருக்கேனும் தெரிய வந்தால் சொல்லுங்கள். நானும் வலையில் தேடிக் கொண்டிருக்கின்றேன்
சிட்டுக் குருவி பற்றிய கூடுதல் தகவலுக்கு இந்த சுட்டியைப் பாருங்கள்.
http://www.mazhalaigal.com/tamil/articles/articles-002/0907nkn_endangered-sparrow.php
சிட்டுக்குருவிகளின் ரீங்காரம்...... எவ்வளவு ரம்மியமான சூழலில் நெல் காய வைத்த இடமெல்லாம் செல்லமாய் பறந்து பறந்து தனது சிறிய (அழகை) சொண்டை கொண்டு சிறிய சிறிய உணவுகளை எடுத்துன்னும்..... இனி இந்த இனத்தை பற்றி இது போன்று வரிகளில் தான் பார்க்க முடியும் போல்.... இறைவா எங்களின் மனம் குளிர்வதர்காக இந்த சிறிய உயிரினத்தை காப்பாற்றுவாயாக......
நல்ல வேலை கட்டுரையாளர் புல் புல் பறவையை காணவில்லை என்று தலைப்பிடாமல் விட்டாரே !
அறிவியலின் முன்னேற்றம் என்பது ஆக்கத்திருக்காவும், அழிவுக்காகவுமே உள்ளது.
அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக. ஆமின் !
வாழ்த்துக்கள் சகோ. என். ஷஃபாத்,
சிட்டுக் குருவிப் பற்றிய கூடுதல் தகவல்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் சுட்டியை தந்தமைக்கு.
செல் போனால் வீடுக்குருவிகளும் பறந்து செல்கின்றன. வேதனைக்குரிய விஷயம்
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment