அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Wednesday, January 11, 2012

ஸலஃபிகள் இதற்கு பதில் தருவார்களா ?


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் ஹதீஸ்களை மறுக்கிறார்கள். என்று சொல்லி அதிரை B B C யில் எங்களை விமர்சிக்கும்
 நீங்கள் மக்களுக்கு சத்தியத்தைச் சொல்லும் யோக்கியத்தனத்தை மக்களுக்கு நாங்கள் வெளிச்சம் போட்டுக்காட்டவேண்டும். உங்கள் அறிவுக் கடலைக்கொண்டு குர்ஆனுக்கு மாற்றமாக படுபாதகமான செய்திகளையும் நபிகளாருக்கு இழுக்கு ஏற்படும் செய்திகளுக்கு நீங்கள் விளக்கம் தருகிறேன் என்று சொல்லும் உங்கள் வார்த்தைக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். அல்லாஹ்வுக்குப் பயந்து எங்களை விமர்சிக்கும் முன்னர். ஒரு கணம் உங்கள் நிலையை யோசிக்க வேண்டும் சலபி சலபி என்று மூச்சு விடும் நீங்கள் இந்த சலபி என்ற வார்த்தையை எங்கிருந்து எடுத்தீர்கள். முதலில் இந்த வார்த்தை எப்போது பிரயோகிக்கப்பட்டது. யாருக்குப் பிரயோகிக்கப்பட்டது என்பதை விளக்கவேண்டும்?

இப்போது விசயத்திற்கு வருவோம்.
நீங்களும் நானும் அனைத்து முஸ்லீம்களும் ஏற்றுக் கொண்ட ஒரு செய்திதான் அல்குர்ஆன் முழுமைப் படுத்தப்பட்டுள்ளது.

அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். அல்குர்ஆன்:15:09

இதில் யாருக்கும் கூட்டல் குறைத்தல் செய்யமுடியாது என்பதை அல்லாஹ் திருமறையில் தன்னுடைய வேதத்தை தானே பாதுகாப்பேன் என்று சொல்கிறான். அப்படி இருக்கும் போது அல்குர்ஆனில் ஒரு வசனம் இருந்தது. அது ஓதப்பட்டுக்கொண்டும் இருந்த நிலையில்தான் நபியவர்கள் மரணித்தார்கள். என்று அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதோ அந்த செய்தி:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: "குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்'' என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப் பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.(முஸ்லிம் 2876)

அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள் இந்த ஒரு செய்திக்கு முதலில் நீங்கள் பதில் தரவேண்டும் பத்து வசனமாக இருந்து மாற்றப்பட்ட ஐந்து வசனங்கள் எங்கே?

உங்கள் கூற்றின் படி குர்ஆனுக்கு ஹதீஸ் முரண் படவில்லையென்றால் அந்த வசனங்கள் இன்றுள்ள குர்ஆனில் இருக்கின்றதா? உங்களால் காட்ட முடியுமா? அல்லது மாற்றுமதத்தவர்கள் இதை காட்டி விமர்சிக்கும் போது உங்களால் பதில் சொல்ல முடியுமா?அல்லது இது தான் அந்த வசனம் என்று காட்ட முடியுமா?

அடுத்தவர்களை விமர்சிக்கும் முன்னர் நான் இருக்கும் கொள்ளை சரிதானா? என்பதை ஒரு கணம் அல்லாஹ்வையும் மறுமை வாழ்வையும் முன்னிறுத்தி ஆழமாக சிந்தியுங்கள். அப்போது புரியும் குறை பிடிக்கத்தெரிந்த உங்களுக்கு நிறைகாணத் தெரியுமா? விமர்சிப்பதென்றால் ஏராளமான செய்திகள் உள்ளது.

முதலில் நீங்கள் இதற்கு மறுப்புக் கொடுங்கள் அடுத்தடுத்து கேள்விக்கணைகள் உங்களை நோக்கி எறியப்படும். உங்கள் வாதத்தின் படி ஹதீஸ் முரண்படாது என்றால் அல்லாஹ் தன்னுடைய வேதத்தைப் பாதுகாக்கவில்லை அல்லாஹ்வின்தூதரும் மார்க்த்தை முழுமைப் படுத்தவில்லை என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்

சலஃபி அவர்களே உங்கள் அறிவுக் கண்னைக் கொஞ்சம் திறக்க முடியுமா?

9 பின்னூட்டங்கள்:

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

பிஜே மதுகபினர் வெளியிட்ட “குர்ஆனுடன் முரண்படும் ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்களை பற்றிய அறிஞர்களின் கருத்து என்ன?” என்ற ஒரு கட்டுரையை அதிரை பிபிசியில் வெளியிட்டார்கள். அதில் அவர்கள் சொன்ன விசியத்தை பாருங்கள்.

//பிஜே ஹதீஸ்களை மறுத்துவிட்டார் என்று விமர்சனம் செய்யும் யாரும் பிஜே மறுத்துள்ள ஹதீஸ்களை செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடதக்கது (தேவைப்பட்டால் ஹதீஸ்களின் பட்டியல் வெளியிடப்படும்). ஹதீஸ்களின் பட்டியலை வெளியிட்டால் பிஜே ஹதீஸ்களை மறுக்கிறார் என்று விமர்சனம் செய்பவர்களின் உண்மை முகம் (ஹதீஸ்களை மறுக்கும் முகம்) தெரியவரும்.//

அன்னன் மதுகப்பை சார்ந்தவர்கள் என்ன சொன்னார்கள்

”பிஜே மறுத்துள்ள ஹதீஸ்களை செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடதக்கது ”

அவர்களாக ஒத்துகொண்ட ஒரு விசியம்தான் ஹதிஸ்களை நாங்கள் மறுக்கிரோம் என்று.

இபோழுது இங்கு கேட்கிரார்கள்

//தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் ஹதீஸ்களை மறுக்கிறார்கள். என்று சொல்லி அதிரை B B C யில் எங்களை விமர்சிக்கும் நீங்கள்//

பிஜேவை கண் மூடி பின்பற்றும் இவர்களின் அறியாமை இது.

//நீங்கள் மக்களுக்கு சத்தியத்தைச் சொல்லும் யோக்கியத்தனத்தை மக்களுக்கு நாங்கள் வெளிச்சம் போட்டுக்காட்டவேண்டும். உங்கள் அறிவுக் கடலைக்கொண்டு குர்ஆனுக்கு மாற்றமாக படுபாதகமான செய்திகளையும் நபிகளாருக்கு இழுக்கு ஏற்படும் செய்திகளுக்கு நீங்கள் விளக்கம் தருகிறேன் என்று சொல்லும் உங்கள் வார்த்தைக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம்//

நீங்கள் மக்களுக்கு சத்தியத்தைச் சொல்லும் யோக்கியத்தனத்தை மக்களுக்கு நாங்கள் வெளிச்சம் போட்டுக்காட்டவேண்டும். இந்த வார்த்தைகளை நாங்கள் சொல்ல வேண்டும்.

எந்த ஒரு விசியத்தை அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் எங்களுக்கு வழிகாட்டி தந்துவிட்டார்களோ அதில் மாறு செய்வதற்க்கு எந்த மூமினுக்கும் உரிமையில்லை.

நபி(ஸல்) அவர்களின் ஹதிஸ் சஹீஹ் ரிவாயத்தில் வந்த பின் அதில் ஈமான் கொள்வதுதான் ஒவ்வோறு முஸ்லிமின் மீது கடமை.

அப்படி ஒன்றுதான் ஸாலிம் (ரலி) ஹதிஸ்.

(ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே சாலிம் பின் மஅகில் என்னுடைய வீட்டிற்கு வரும் போது அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் பார்க்கிறேன் என்று கூறினார்கள். சாலிம் (ரலி) அவர்கள் அபூஹுதைஃபாவின் அடிமை ஆவார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு என்று கூறினார்கள். சஹ்லா (ரலி) அவர்கள் அவர் பருவ வயதை அடைந்த மனிதராயிற்றே. அவருக்கு நான் எவ்வாறு பாலூட்டுவேன்? என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறு அவர் பருவ வயதை அடைந்தவர் என்று எனக்கும் தெரியும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (2878)

இந்த ஹதிஸ் குர் ஆனுக்கு முறன் படுவதாக கூரி அன்னனை கண் மூடி பின்பற்றும் இவர்கள் மறுக்கின்றார். மேலும் அதை இப்போழுது அமல் படுத்வார்களா? என்று கேட்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்த ஒரு சுன்னா எனக்கு பிடிக்கவில்லை அது சரி இல்லை. அதை நபி(ஸல்) அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள் என்று கர்ப்பனை செய்து இந்த ஹதிஸ் குர் ஆனுக்கு முறன் படுகிறது என்று தனது அறிவுக்கு எட்டவில்லை என்றதான் இந்த ஹதிஸ் அன்னன் மதுகப்பினர் மறுக்கிரார்கள்.

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தொடர்ச்சி............

//அப்படி இருக்கும் போது அல்குர்ஆனில் ஒரு வசனம் இருந்தது. அது ஓதப்பட்டுக்கொண்டும் இருந்த நிலையில்தான் நபியவர்கள் மரணித்தார்கள். என்று அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.//

//ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: "குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்'' என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப் பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.(முஸ்லிம் 2876)

அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள் இந்த ஒரு செய்திக்கு முதலில் நீங்கள் பதில் தரவேண்டும் பத்து வசனமாக இருந்து மாற்றப்பட்ட ஐந்து வசனங்கள் எங்கே?

உங்கள் கூற்றின் படி குர்ஆனுக்கு ஹதீஸ் முரண் படவில்லையென்றால் அந்த வசனங்கள் இன்றுள்ள குர்ஆனில் இருக்கின்றதா? உங்களால் காட்ட முடியுமா?//

பிஜே மதுகபினரின் விமர்சனத்திற்க்கான விளக்கத்தை சகோதரர் இஸ்மாயில் ஸலபி அவர்களின் கட்டுரையில் படித்து தெரிந்து
கொள்ளுங்கள்.

http://www.islamkalvi.com/portal/?p=4930 (மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 3))

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//சலபி சலபி என்று மூச்சு விடும் நீங்கள் இந்த சலபி என்ற வார்த்தையை எங்கிருந்து....................அடுத்தடுத்து கேள்விக்கணைகள் உங்களை நோக்கி எறியப்படும்......................சத்தியத்தைச் சொல்லும் யோக்கியத்தனத்தை மக்களுக்கு................அடுத்தவர்களை விமர்சிக்கும் முன்னர் நான் இருக்கும் கொள்ளை சரிதானா?.//.

நாட்டை ஆள்கிறோம், சேவை செய்கிறோம், திட்டம் வகுக்கிறோம், மானியம் வழங்குகிறோம், சட்டங்களை இயற்றுகிறோம் என்று பிதற்றிக்கொள்ளும் அரசியல் வாதிகள், வறுமைகோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காவிடாமலும், நாட்டில் இறந்தவர்களை புதைப்பதற்கு இடம் தராமல் அதை தன் பெயரில் பட்டா போடும் அரசியல் வாதிகள் கூட இந்த அளவுக்கு பேசி விவாதித்ததாக நாங்கள் காணவில்லை,

ஒரு வேலை "சலாபி" என்பவர் உங்கள் பிளவுக் கோட்டுக்குள் (பாருங்கள் "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்" வாசகத்தை) உள்ளே வந்துவிட்டால் அதாவது உங்கள் அமைப்பில் சேர்ந்துவிட்டால்
நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்துவிடுமா.....நீங்கள் கேட்ட கேள்விகள் எல்லாம் தப்பாகி விடுமா.....இது மாதுரி கேள்விகளும் வசைபாடல்களும் நாம் சொல்லி இருக்கக் கூடாதோ!! என்று யோசிப்பீர்களா....இன்மேல் உங்களை சலாபி என்பதற்கு பதிலாக (கோட்டுக்கு உள்ளே இருப்பதால்) பிளபி என்று அழைப்பீர்களா.....உள்ளுக்குள்ளே சிரித்துக் கொள்வீர்களா....

சகோதரே.... உண்மையில் உங்களுக்கு ஆதங்கம் ஏற்பட்டால் நீங்கள் ஏன் சலபி போன்றவர்களுக்கு ஈமெயில் அனுப்பக் கூடாது.

யோவ் துக்ளக் முதல்ல ஒழு செய்யணும், அப்புறம்தான் தொழுகனும்.
ஆமாமா...முப்பது வருஷமா ஒழு செய்றீங்க, எப்ப தொழுப் போகபோகப் போறீங்க.......

சாந்தியையும் - சமாதானத்தையும் கையில் வைத்துக் கொண்டு இப்படி பெருசா வம்புக்கு போறீங்களே....... "என் அன்புச் சகோதரா" என்று இறுக்கி "அனைத்து"விட வேண்டாமா..... சத்திய மார்க்கத்தை உங்களிடத்தில் அல்லாஹ் கொடுத்திருக்கிறான் என்று என்றாவது ஒரு நாள் நீங்கள் யோசித்தது உண்டா..... அப்படி யோசித்து இருந்தால் இப்படி ஆகி இருக்காது என நினைத்துக் கொண்டே..................

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தொடர்ச்சி.....

//சலபி சலபி என்று மூச்சு விடும் நீங்கள் இந்த சலபி என்ற வார்த்தையை எங்கிருந்து எடுத்தீர்கள். முதலில் இந்த வார்த்தை எப்போது பிரயோகிக்கப்பட்டது. யாருக்குப் பிரயோகிக்கப்பட்டது என்பதை விளக்கவேண்டும்?//

ஸலஃபி என்றால் என்ன? அவர்கள் யார் என்று தெரியாதாவர்கள் குர் ஆன் சுன்னாவை சகாப்பாகள் அடிப்படையில் பின்பறும் எங்களிடம் ஸலஃபிகள் இதற்க்கு பதில் தருவார்களா என்று கேட்கிரார்கள்.

படியிங்கள் ஸலஃபி என்றால் என்ன , அவர்கள் குர் ஆன் சுன்னாவை எவ்வாறு புரிந்து கொண்டார்கள் என்று.

ஸலபி என்ற அடையாளப் பெயரும் அதன் அவசியமும்

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம்,
அல்ஹம்துலில்லாஹ், வ ஸலாத்து வஸ் ஸலாம் அலன் நபிய் அமா பஃ த்

அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இந்த உம்மது எழுபத்தி மூன்றாக பிரியும் , எல்லாம் நரகத்திற்கு ஒன்றை தவிர என்று சொல்லி, அந்த சுவர்க்கம் சொல்லும் கூட்டத்தின் பண்பையும் கூறிவிட்டார்கள்.

அது தான் , நானும் எனது தோழர்களும் இன்று என்ன நிலைப்பாட்டில் இருக்கிறோமோ , அந்த நிலைப்பாட்டில் இருக்கும் கூட்டமாகும். எனவே, இதனை தவிர்ந்து , யாரெல்லாம் என்ன பெயர் பட்டம் சூட்டிக் கொண்டாலும், இந்த கூட்டத்தின் வழி முறையில் மார்க்கத்தை பின்பற்றா விட்டால்
நரகத்திற்கு கட்டையாக வேண்டி வரும்.

இங்கு கவனிக்கப்பட வேண்டியது தான் , நபி சல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் , நான் என்ன நிலைப்பாட்டில் / எதன் மீது உள்ளேனோ என்று கூறவில்லை.

மாறாக, சஹாபாக்களையும் சேர்த்து, நானும் எனது சஹாபாக்களும் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறோமோ என்று கூறிவிட்டார்கள்.
மார்க்கத்தை பின்பற்றும் சரியான நிலைப்பாட்டை, சஹாபாக்களுடன் சேர்த்து சொல்கிறார்கள்.

எனவே, தான் மார்கத்தை , அந்த அருமை சஹாபாக்கள் அருமை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேர்ந்து , ஒன்றாக ஒத்தாசை புரிந்து, பக்கத்தில் அமர்ந்து நேரடியாக கற்று, விளங்கி நடைமுறை செய்தது போன்று , பின்னால் தோன்றும் உம்மத்தும் நடைமுறை செய்தால்
வெற்றி பெரும், இல்லையென்றால், நரகத்திற்கு கட்டையாக வேண்டியது தான்.

அன்று மார்க்கமாக அருமை நபியும் சஹாபாக்களும் எதனையெல்லாம்
பின்பற்ற வில்லையோ அவை அனைத்தும் , புதிய விடயங்கள், எல்லா புதிய விடயங்களும் நரகத்திற்கு என்று எச்சரிக்கையும் செய்து விட்டார்கள்.

எனவே, மார்க்கத்தில் புதிய விடயங்களை விட்டு ஒதுங்கி அந்த பண்ண பழைமையான வழிமுறையை பின்பற்றி பாதுகாப்பு பெற வேண்டுமெனில் , அருமை சஹாபாக்கள் சென்ற பாதையில், அவர்கள் பின்பற்றியது போன்று பின்பற்றினால் தான், மார்க்கத்தில், புதுமைகளை விட்டு ஒதுங்க முடியும். அது தான் பழைமையும் புதுமையையும் வித்தியாசப்படுத்தி பார்க்கும் உரை கல்.


எனவே, நல்லதையும் கெட்டதையும் உரசி பார்க்கும் உரைகல்லை , தூக்கி எரிந்து விட்டால் தான் , எல்லா வழிகேடர்களுக்கும் புதியவைகளை மார்கத்தினுள் புகுத்த முடியும். மார்க்கத்தை புதுமையால் நிரப்பி , மக்களை மயக்க முடியும்.

எனவே தான் இந்த அருமை சஹாபாக்கள் என்ற / அல் முஃமினீன் என்ற ஸலபி உரைகல்லை எந்நேரமும் ஒரு முஸ்லிம் கையோடு ஏந்தி திரிய வேண்டும். மக்கள் மத்தியில் இந்த உரைகல்லை பரப்பி விட வேண்டும். அது இருக்கும் , அதனை சுமந்து செல்லும் கூட்டத்தை மக்களுக்கு தெளிவாக அறிவித்தும் விட வேண்டும்.


அந்த அடிப்படையில் தான் , இந்த ஸலபி என்ற உரைகல் , அதனை சுமந்தவர்களின் பெயர்களின் பின்னால் தொங்குகிறது.

ஆகையால் , ஸலபி என்ற உரைகல் ஆயுதத்துடன் காணப்படும் முஸ்லிம்களை கண்டால் ஏனைய வழி கெட்ட முஸ்லிம்கள் பயப்படுகின்றனர். அந்த பயத்தின் காரணமாக , இந்த சலபி என்ற ஆயுதம் எந்நேரமும் ஏந்த தேவை இல்லை , இது எம்மை அச்சுறுத்துகிறது என்று பயந்து ஓடுகின்றனர். தங்களுடைய பயத்தை மறைக்க , ஸலபி என்ற ஆயுதத்தையே வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கூக்குரல் இடுகின்றனர்.

பிரிவுகள் காணப்படும் போது எந்த பிரிவுடன் இருக்க வேண்டும் என்ற சரியான அடையாளத்தை அழிக்க நாடுகின்றனர். அந்த சரியான அட்டையாளத்திற்கு பிரிவினை என்று பெயரிட்டு தன்னுடைய வழி கெட்ட பிரிவுகளை மறைக்கப் பார்க்கின்றனர். முஸ்லிம் என்றால் போதுமானது
என்கின்றனர். வழி கேட்ட முஸ்லிமையும், நேர் வழி பெற்ற முஸ்லிமையும் ஒன்றாக கலந்து , நேர் வழியை சுமந்த முஸ்லிமை மறைக்க , அழிக்க பார்க்கின்றனர்.

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தொடர்ச்சி......

எனவே, தான் , ஸலபி என்ற முஸ்லிம் 72 வழிகெட்ட முஸ்லிம்களில் இருந்தும் தன்னை ஸலபி என்று அடையாளப்படுத்திக் காட்டுகிறான். அருமை சஹாபாக்கள் முஸ்லிம்களா இருந்தும், அவர்களை சஹாபாக்கள்
என்று அடையாளப்படுத்துவது போன்று, தாபியீன்கள் முஸ்லிம்களாக இருந்தும் , தாபியீன்கள் என்று அடையாளப் படுத்துவது
போன்று, வெற்றி பெற்ற கூட்டமான நபியும் சஹாபாக்களும் செல்லும் பாதையில் இருக்கும் கூட்டம் ஸலபி என்று தன்னை
அடையாளப்படுத்துகிறது.

ஹிஸ்புஸ் ஷெய்த்தான் என்ற கூடத்தில் இருந்து ஹிஸ்புல்லாஹ் என்ற கூட்டத்தினை அடையாளப்படுத்துவதாகும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

மேலும் Allaah Has Named us Muslims, So Why Ascribe Ourselves to the Salaf ?
http://adiraisalafi.blogspot.com/2012/01/allaah-has-named-us-muslims-so-why.html

http://www.youtube.com/watch?v=7HGOcX-mUfc&feature=related

adiraithunder said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சகோதர்களே இங்கு நீங்கள் விவாதிட்டு இருக்கிறிர்கள், ஆனால் அங்கு நம்மை கேவல படுத்திக்கிட்டு கொண்டு இருகிறார்கள் .
http://christhunesan.blogspot.com/2010/07/blog-post_07.html

zubair said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

துங்குபவர்களைதான் எழுப்ப முடியும் தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்பமுடியாது

நாம் கேட்ட எந்த கேள்விக்கு இதுவரை பதில் சொல்லவி்ல்லை

மீண்டும் கேட்கிறோம் பதில்தரவும்

குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸ்களை எவ்வாறு அணுகுவது என்பதை பிஜேவை விட தெளிவாக முன்னர் வாழ்ந்த அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அந்த அறிஞர்களை பற்றி ஸலஃபி மத்கபின் நிலை என்ன?

\\அல்லாஹ்வின் தன்மைகளில்,செயல்களில் நமது அறிவைக் கொண்டு எவ்வித கருத்து மாற்றமோ பொருள் மாற்றமோ செய்யக்கூடாது அல்லாஹ்வின் தன்மைகளுக்கும் ,செயல்களுக்கும் படைப்பினங்களின் செயல்களையும் ,தன்மை களையும் உவமையாக கூறக்கூடாது படைப்பினங்களின் தன்மைகளைக்கொண்டும் செயல்களைக்கொண்டும் அல்லாஹ்வின் செயல்களையும் ,தன்மைகளையும் விவரிக்க கூடாது\\

2) ஓர் அடியான் கடமையான காரியங்களை செய்வதன் மூலம் தான் இறைவனை நெருங்க முடியும். கடமையான காரியங்களுக்கு பிறகு உபரியான காரியங்களை செய்து இறைவன் பால் நடந்தால் இறைவன் அந்த அடியானை நோக்கி நடக்கிறான். அடியான் இறைவனை நோக்கிஓடினால் அவனை நோக்கி இறைவன் ஓடி வருகிறான் இறுதியில் அவன் பார்க்கும் பார்வையாகவும். பிடிக்கும் கைகளாகவும். நடக்கும் கால்களாகவும் இறைவன் மாறி விடுகிறான் அவன் எதை கேட்டாலும் கொடுக்கிறான்.

இதை எப்படி விளங்குவது என்று இன்னும் பதில் சொல்லவில்லை.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: "குறிப்பிட்ட பத்து தடவைகள் பால்அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்'' என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப் பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.(முஸ்லிம் 2876)


அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள் இந்த ஒரு செய்திக்குமுதலில் நீங்கள் பதில் தரவேண்டும் பத்து வசனமாக இருந்து மாற்றப்பட்ட ஐந்து வசனங்கள் எங்கே?


உங்கள் கூற்றின் படி குர்ஆனுக்கு ஹதீஸ் முரண் படவில்லையென்றால் அந்த வசனங்கள் இன்றுள்ள குர்ஆனில் இருக்கின்றதா? உங்களால் காட்ட முடியுமா? அல்லது மாற்றுமதத்தவர்கள் இதை காட்டி விமர்சிக்கும் போது உங்களால் பதில் சொல்ல முடியுமா?அல்லது இது தான் அந்த வசனம் என்று காட்ட முடியுமா?

பின்னர் வளர்ப்புப் பிள்ளைகள் அவர்களுடைய சொந்தத் தந்தையருடன் இணைக்கப்பட்டனர். எவருக்குத் தந்தை (இருப்பதாக) அறியப்படவில்லையோ அவர் மார்க்க சிநேகிதராகவும் மார்க்கச் சகோதரராகவும் ஆனார். பிறகு அபூஹுதைஃபா பின் உத்பா அவர்களின் துணைவியார் சஹ்லா பின்த் சுஹைல் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நாங்கள் சாலிமை பிள்ளையாகவே கருதிக் கொண்டிருந்தோம். அவர் விஷயத்தில் அல்லாஹ் தாங்கள் அறிந்துள்ள (33 : 5 ஆவது) வசனத்தை அருளி விட்டான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (5088)


(ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே சாலிம் பின் மஅகில் என்னுடைய வீட்டிற்கு வரும் போது அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் பார்க்கிறேன் என்று கூறினார்கள். சாலிம் (ரலி) அவர்கள் அபூஹுதைஃபாவின் அடிமை ஆவார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு என்று கூறினார்கள். சஹ்லா (ரலி) அவர்கள் அவர் பருவ வயதை அடைந்த மனிதராயிற்றே. அவருக்கு நான் எவ்வாறு பாலூட்டுவேன்? என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறு அவர் பருவ வயதை அடைந்தவர் என்று எனக்கும் தெரியும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (2878)

முதலில் இதற்கு பதில் தாருங்கள்

nallaaboobucker said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

முதலில் தவ்ஹிது ஜாமாத்தும் த மு காவும் ஏன் பிரிந்தார்கள் அதுக்கு விளக்கம் சொல்லுங்கள் முதலில் ஏதோ பண கணக்குண்டு கேள்வி

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நமக்கு நாமே நாசம் எனும் திட்டம் கொண்டுவந்தால்..... அதில் நாம் தான் முன்னிளைபடுத்தபடுவோம்...... பிறை குறையை ஆராய வேண்டாம் என்று சொல்லப்பட்ட மார்கத்தில்.... பிறரின் குறையை நோண்டி நொங்கெடுத்து மாற்றார் பார்க்கும் வகையில், நம்மை நாமே நாசமாக்கி கொண்டிருக்கிறோம்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.