அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, January 7, 2012

நாளை உலக அமைதிக்கான நெடுந்தூர ஓட்டப்போட்டி-2012 வெற்றி வாகை சூடப்போவது யார்?






நெடுந்தூர ஓட்டப்போட்டியாளர்களின் அணிவகுப்பு, பேருந்து நிலையத் திடல் அழங்காரம், வான வேடிக்கைகள்  பல வகையான குளிர்பானங்கள், பலவகை பழச்சாறுகள் போன்றவற்றால் நாளை 08-01-2012 காலை 7 மணியளவில் புது குதூகுலத்துடன் இன்ஷா அல்லாஹ் நாளை அதிரை பேருந்துநிலையமே  மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்கப்போகிறது. அனைவரும் வாரிர்! அணிவகுப்பையும் போட்டி அழகையும் பாரிர்!
 அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் உலக அமைதிக்கான நெடுந்தூர ஓட்டப்போட்டி வருகிற நாளை 8-ம் தேதி துவங்க உள்ளது. இந்த ஓட்டப்போட்டியில் போட்டியாளர்கள் 334 கலந்து ஒரு குதூகலமான கொண்டாட்த்தை பார்வையாளர்களுக்கும் நமது ஊர் மற்றும் சுற்றுபுறமக்களின் மனதில் மகிழ்ச்சி தோரணத்தை காட்டவும் புத்துணர்வு கொண்ட நெடுந்தூர ஒட்டத்தை இன்ஷா அல்லாஹ் நாளை துவங்க உள்ளார்கள். நாளை  நடப்பதை இன்டெர் நெட் உலகம் முழுதும் உலா வரச்செய்யும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவிக்கின்றோம். சிறப்பு விருந்தினர்களும்,    அவர்களின் கால நேரங்களை நம்முடைய வேண்டுகோளுக்காக சற்று ஒதுக்கி வைத்து நம்முடைய ஒட்பட்போட்டிக்கு சிறப்பளிக்க உள்ளார்கள் என்று சொன்னால் மிகையாகாது. நாளை பொழுதில் வெற்றி பெறுவோம் என்று ழுழுநம்பிக்கையில் நமக்கு மகிழ்ச்சியோடு களம் இறங்குகிறார்கள்.  
 
 உலகத்தில் மூலை முடுக்களிலும் இந்த போட்டியைக் காண அதிகமானோர் ஆர்வத்தோடு எதிர்ப்பார்த்த வண்ணம் உள்ளனர் என்பது அவர்களின் மின் அஞ்சல் மற்றும் தொலைபேசி தொடர்புகள் கொண்டு அறியலாம். நாளை வெல்வது யார்? பரிசுகளை தட்டிச்செல்லும் வீரர்கள் யார்?
 அதிராம்பட்டினத்தின் ஒற்றுமையை பற்றி அனைவரும் அறிவர். இந்த ஒற்றுமையை வழியுறுத்தியும், ஒற்றுமையை சிதைக்கும் வண்ணம் சினம் கொண்டு திரியும் விசமிகளின் எண்ணங்களை வேறருக்கவேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த நெடுந்தூர ஒட்டப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த போட்டி செம்மையாக நடைபெற ஒத்துழைப்பதுடன் இந்த போட்டியை உற்சாகத்துடன் நடத்திக்கொண்டிருக்கும் அதிரை ஸ்போர்ட்ஸ கிளப் இளைஞர்களை பாராட்டியும் பலர் தங்கள் ஆதரவுகளை கொடுத்துவருகின்றனர். 
 நமது ஊரை அமைதிப்படுத்தினால் உலகமே அமைதியுறும். இளைஞர்களே உற்சாகத்துடன் களம் இறங்குவீர் வெற்றி வாகை சூடுவீர். துள்ளி ஓடும் போட்டியாளர்களை ஊக்கத்தையும், ஒத்துழைப்புககளையும் கொடுத்து வாழ்த்துவீர்!
உலக அமைதிக்கான எங்களின் வாழ்த்துக்கள்

1 பின்னூட்டங்கள்:

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உலக அமைதிக்காக ஓட்ட பந்தயம் வைப்பதை விட.... திருமறை குர்ஆணை பிற சமுதாய மக்களிடம் கொண்டு சேர்த்தால் தான்..... அமைதி தழைத்தோங்கும்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.