அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Tuesday, January 3, 2012

S S L C தேர்வுகள் ஏப்ரல் மாதம் 4ம் தேதி துவங்குகிறது.

வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் துவங்குகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பள்ளி கல்வி துறையின் மூலம் இன்று வெளியானது. 2011-2012 கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி அமல்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகளால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தாமதமாக துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பாடங்கள் முழுமையாக நடத்தப்படாதது தான் அதற்கு காரணம். வழக்கமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு மார்ச் மாத இறுதியில் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு தாமதமாக ஏப்ரல் மாதம் 4ம் தேதி துவங்குகிறது.

தேர்வு அட்டவணை:
4-4-12 : தமிழ் முதல் தாள்
9-4-12: தமிழ் இரண்டாம் தாள்
11-4-12: ஆங்கிலம் முதல் தாள்
12-4-12: ஆங்கிலம் இரண்டாம் தாள்
16-4-12: கணிதம்
19-4-12: அறிவியல்
23-4-12: சமூக அறிவியல்

நடப்பு கல்வியாண்டில் சுமார் 11 லட்சம் மாணவ, மாணவியர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகின்றனர்.

9 பின்னூட்டங்கள்:

VANJOOR said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சுட்டியை சொடுக்கி படியுங்கள்

******
புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. பாகம் 2.
மன்னிப்போம் மறக்கமாட்டோம்.

புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை .புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.
ரணில்-பிரபாகரன் சமாதான ஒப்பந்ததின் போது நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மண்ணிப்புக் கோரினார்?……..
**********
…….



2. *******
ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1 மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம்.
********
.

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

///வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் துவங்குகிறது. ///

பாருங்கள் இந்த போட்டோவை பெண் பிள்ளைகள் பரீட்சை எழுதுவதை காட்டி இருக்கிறார்கள். நான்றாக தெரிகின்றது அவர்களின் கவலை மிகுந்த படிப்பின் ஆர்வம். இந்த பெண் பிள்ளைகளுக்கு பதிலாக ஆண் பிள்ளைகளை போட்டோ எடுத்து இருந்தால் பிட் அடிப்பது போலவும், காப்பி அடிப்பது போலவும் இருந்திருக்குமே...! என்ற பயத்தில் தான் எடுக்கவில்லை போலும்.

முன்பெல்லாம் படித்தது பரிட்சையில் வராது.
இப்பொழுது பிட்டு பேப்பரில் உள்ளதும் வராது. ஏன் engireergalaa ????
எந்தப் பாட பரீட்சை என்பது கூட தெரியாத காரணத்தால்தான்....

விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறோம் என்பதற்காக பாலாப் போன கிரிக்கட்டை ஊக்கப்படுத்துவது தான் வேதனை. கிரிக்கெட் விளையாடுவது தப்பில்லை, ஆனான் ஒவ்வொரு நொடிப் பொழுதும் அதே சிந்தனையாக....கையில் பாலே இல்லாமல் பந்து வீசுவது, மட்டயடிப்பது, பரீட்சை நேரம், தொழுகை நேரம் என்று கூட பார்க்காமல் 24 மணிநேரமும் டிவி யில் கிரிக்கட்டை பார்ப்பது என்பது தனது வாழ்வின் இலட்சியபடுத்தும் சிந்தனையை அலட்சியப் படுத்துவதுதான்.

20X20 மேட்சின் இடையில் அரை நிர்வாண உடையுடன் டான்ஸ் ஆடுவதை நம்மவாதிகளும் பார்க்கும் காட்சி இருக்கே.....இதுக்கு மேல வேதனையான விஷயம் வேறு என்ன இருக்க முடியும்.

இஸ்லாமிய கொள்கை பிடிப்புவாதிகளே... நாமும் நம் குழந்தை விஷியத்தில் கொஞ்சம் ஜாக்கிரதயாத்தான் இருக்க வேண்டும்.

புனைபெயா்களில் ஒருவன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பெண் பிள்ளைகள் மட்டும் நன்றாக படிக்கிறார்கள். ஆண் பிள்ளைகள் நன்றாக படிப்பது கிடையாது என்று கூறுகின்றிர்..
அது தவறு...
பெண் பிள்ளைகளை விட ஆண் பிள்ளைகள் தான் நன்றாக படிக்கிறார்கள்...

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

படிப்பின் கவனம் சிதறுகின்றது என்பதுதான் மையக்கருத்து.

புனைபெயா்களில் ஒருவன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இந்த வயதில் விளையாடவில்லை என்றால் வேற எந்த வயதில் விளையாடுவார்கள்...
விளையாட்டு அவர்களின் பொழுது போக்கு மட்டுமே... படிக்கின்ற நேரம் தவிர ஒய்வு நேரங்களில் தான் அவர்கள் விளையாடுகிறார்கள்.

புனைபெயா்களில் ஒருவன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நமது ஊரில் அதிகமான ஆண் பிள்ளைகள் +2 முடித்து பிறகு என்ன படிக்கபோகின்றார்கள் என்று கேட்டால் engineering, b.com, b.sc, bba தான் அதிகபடியான ஆண்பிள்ளைகள் சொல்கிறார்கள்.
இது தெரியவில்லையா உங்களுக்கு...

புனைபெயா்களில் ஒருவன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

///முன்பெல்லாம் படித்தது பரிட்சையில் வராது.
இப்பொழுது பிட்டு பேப்பரில் உள்ளதும் வராது. ஏன் engireergalaa ????
எந்தப் பாட பரீட்சை என்பது கூட தெரியாத நிலைமையில் தான் தாங்கள் இருந்தீர்கள் என்று தற்போது தான் எங்களுக்கு தெரிகிறது....//

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மாணவர்களே பொறுமையுடன் நிதானமாக பரீட்ச்சை எழுதவும்.... முறையாக ஆரம்பம் முதல் கடைசிவரை வரிசையாக எழுதினால் தான் திருத்துபவர்களுக்கு எரிச்சல் வராமல் இருக்கும்.

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கிரிகெட் பிரியர்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கட்டும் என்பதற்காக இந்த விமர்சனத்தை சந்தோசமாக ஏற்றுக் கொள்கிறோம்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.