அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, January 28, 2012

அதிரையில் தொடரும் நூதன திருட்டுகள்

கடந்த் சில வாரங்களாக அதிரையில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் திருட்டுகள் இருக்கிறது. கடந்த வாரம் நெசவுத்தெருவில் திருட்டு போன பொருட்களை போலிசார் கண்டுபிடித்து கொடுத்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் ஈ.சி.ஆர் ரோட்டில் ஹவான் ஹோட்டலுக்கு அருகில் இருக்கும் கே.ஆர். நகைக்கடையில் சுமார் 25 லட்சம் மதிப்புமிக்க தங்கமும், வெள்ளியும் நூதனமுறையில் திருட்டு போனது. இந்த திருட்டை கண்டுபிடிப்பதற்காக கைரேகை நிபுணர்களும், காவல்துறையின் மோப்ப நாய் வரவழைக்ப்பட்டு திருடர்களை பிடிப்பதற்காக போலிஸ் வலைவிரித்துதேடுகிறது. தொடரும் திருட்டுக்களை தவிர்க்க மக்களும் கவனமாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோளும் கோரப்படுகிறது.






















உங்கள் வீட்டின் அருகே சம்மதமில்லாத புதிய நபர்களின் நோட்டம் அதிகமாயிருந்தால் உங்கள் முஹல்லா அல்லது நண்பருக்கு தகவல் கொடுத்து அவர்களைப் பற்றி முழுவிபரம் தெரிந்துக்கொள்ளுங்கள்
வீட்டின் அருகே சந்தேகம்படியாக வாகனங்கள் நிறுத்தியிருந்தாலோ, வாகனங்கள் உங்கள் ஏரியாவையே வலம் வந்துக்கொண்டிருந்தாலோ தகவல் உங்கள் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து உடன் விசாரனை செய்யுங்கள்.

உங்கள் அருகாமையில் உள்ள வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருக்கும் உங்கள் அண்டைவீட்டாரகள் அல்லது உறவினர்களின் வீட்டை ஒரு நோட்டமிடுங்கள் உடன் தகவல் வழங்குங்கள்.

சம்மந்தமில்லாமல் வரும் தொலைபேசி, அலைபேசி அழைப்புகளுக்கு பதில் கொடுக்கவேண்டாம்.

திருட்டுகளை ஒழிக்க காவல்துறைக்கு நாமும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
இருட்டாய் தெரியும் வீதியில் வெளிச்சம் கொடுங்கள் உங்கள் வீட்டு வாசல் விளக்குகளை எரியவிடுங்கள்.

1 பின்னூட்டங்கள்:

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இழந்தவனுக்கு தான் தெரியும் வேதனை.... அவனை கேட்டல் திருடுனுவன் கையை வெட்டனும் என்பான்.... இதை தான் இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டது என்றால் அதை பற்றி சிந்திக்க மறுப்பான்.... சிந்திப்பவனுக்கு நல்வழி உண்டு....

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.