சி.ப- சு.ப நீங்க ஓட்டுபோட்டுட்ட உடனே மதராஸூக்கு போய்ட்டியா?
சு.ப- ஆமாண்டா அதற்குமுன்னாலே நீங்க போகவேணா நம்ம ஜெயிக்கணும். இதற்கு முன்னாடி இருந்த சேர்மனால நமக்கு என்ன பயன் நடந்தது. நம்ம அதமாத்தணும் என்று சொல்லி என்னை ஓட்டுபோட வைச்சாங்க... அதிருக்கட்டும் எலக்ன் முடிஞ்சிச்சே என்ன நடக்குது நம்ம ஊருலே. நல்லதெல்லாம் நடக்குதா நாமே எதிர்பார்த்தமாதிரி இருக்குதா?
சி.ப- எல்லாம் அரசியல்ணு அனுபவ பட்டுபட்டுதான் நாம தெரிஞ்சிக்கணுங்கிறது நம்ம விதியா இருக்குது! என்னத்த சொல்றது ம்.ம்.ம்.... நான் ஒன்னு சொல்றேன் யாரிடமும் சொல்லாதீங்க நம்ம பேரூராட்சில 3800(38000) செக் மோசடி நடந்ததாம். இத நம்ம இப்ப உள்ள சேர்மன் கையும் களவுமாக பிடித்து “நான் ஒன்னு சொல்றேன்” யாரிடமும் இதை சொல்லவேண்டாம் என்று எல்லோரிடமும் சொல்லிக்கிட்டு அலைகிறாருன்னு அங்கங்கே பேசிக்கிறாங்கே.
சு.ப- ஏன் அவருதான் தவறையயல்லாம் தட்டிகேட்பேன்னு சொன்னாரே! ஏன் இதை சும்மாவிட்டாருன்னு நீ விசாரிக்கலையா?
சி.ப- அதையும் கேட்டுப்பார்த்தேன் உடனே எதற்கும் முடிவெல்லாம் எடுத்து விடக்கூடாது நான் சிங்கப்பூர் சிட்டிங்ல போய் யோசித்துவிட்டு வருவாராம்... ஆட்சிக்கு வந்தவுடன் சுத்தம் சுத்தம்னு பேசி சுத்தமா எதுமே நடக்காம இருக்குன்னு பேச்சாக்கிடக்குது..
சு.ப- என்ன ஒன்றும் செய்யலனு சொல்றா குப்பை கூடை அங்காங்கே வைச்சிருக்காரே!
சி.ப-அதுக்கூட(டை) பழைசுயயல்லாம் எடுத்து புதுசாத்தான் வைத்திருக்காராம். அரசியலுக்கு வந்தவுடன்தான் ரோட்டுக்கு கீழே உள்ள தெருவெல்லாம் தெரிகிறதாம். இதற்கு முன்னால் இந்த கூடைகளெல்லாம் வைப்பதற்கு இந்த தெருவில் இடமில்லைபோலுனு அதிரை மக்கள் விலாசிறாங்க. சு.ப.- அடபோப்பா... எல்லாரும் அரசியலுக்குள் நுழைவதற்குமுன் நாம் அப்படி செய்யலாம், இப்படிசெய்யலாம்னு சொல்றாங்க அரசியலில் புகுந்தவுடன் அரசியலுக்கு தகுந்தபடிதான் செய்யமுடியும்னு மாறவும் செய்றாங்க... என்னத்த சொல்றது....?
பழைய சேர்மன் இருக்கும்போது வி.ஐ.பிகளின் மாடிவீட்டுக்கெல்லாம், வணிகஸ்தாபனத்திற்கெல்லாம் குறைந்த வரிகள் அதாவது குடிசை வீட்டு வரிகள்தான் வாங்கினார்களாமே அதற்கெல்லாம் நம்ம இப்ப உள்ள சேர்மன் முடிவு கட்டுவாரா இல்ல... இதையும் இப்ப செய்யக்கூடாதுன்னு சும்மா விட்டுருவாரா? ஏன் கேட்கிறேன்னா...... இப்ப வரி,வாய்தாக்கள் எல்லாம் முறையா கட்டுவதற்கு கடைசி தேதிலாம் வச்சிருக்காங்கலாம்... இதற்கும் முடிவெடுத்தாங்களா...இந்த களத்தில் சேர்மன் இறங்குகிறாரா இல்லையானு தெரியல. ஏனென்றால் ரேசன் கடைகளில் மக்கள் குறைகளை நீக்க அதிமுக அதிரடி ஆய்வு நடத்தி அதில் வெற்றியும் கிடைத்துள்ளது இதனால் அதிமுக மொவுசு கூடியிருக்குதுன்னு பேச்சாக்கிடக்குது அதனாலேதான் கேட்டேன் கிளைமாக்சல தெரிஞ்சுக்கிடவும் முடியல. சேர்மனுக்கு தெரியாமலிருந்தாலும் தெரிந்துக்கொள்வாருங்ற நோக்கத்துல சொல்றேன். ம்... ம்... போடா இதப்பத்தி பேசிக்கிட்டேயிருந்தா மறுபடியும் மருத்துவமனைக்குதான் போகனும்...
3 பின்னூட்டங்கள்:
தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகள் நான்கு நிலைகளாக அதாவது நிலை-2, நிலை-1 , தேர்வு நிலை, சிறப்பு நிலை என்று பிரிக்கப்பட்டு அதில் நமதூர் தேர்வு நிலை பேருராட்சியாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இதில் சொத்து, வீடு, குடிநீர் கட்டணம், குத்தகை / வாடகைகள், உரிமங்கள், கட்டிட உரிமை, பிறப்பு/இறப்பு பதிவு கட்டணங்கள் போன்ற வரிகள் மூலம் நமது பேரூராட்சிக்கு கிடைக்ககூடிய ஆண்டு வருமானம் ரூபாய் பதினாறு இலட்சத்திற்க்கு மேல் இருந்தால் அவை சிறப்பு நிலை அல்லது நகராட்சி எனும் அந்தஸ்தை பெற்றுவிடும் வாய்ப்புகள் அதிகம்.
முழுசா கணக்கு வந்தால் இன்னும் கூடும். இருத்த குளத்தை எல்லாம் பராமரித்தால் இன்னும் கூடி இருக்கும். இப்போ அதில் மனை ரேட் தான் கூடும்...
பொறுங்கப்பா அதுக்குள்ள கிளம்புட்டீன்களா.... அரசியல்ல இது சஜகமப்பா இது போன்ற வாக்கியங்களெல்லாம் அரசியல் வட்டாரங்களால் அதிகம் பயன்படுத்தபடுவது.... இங்கேயும் இது பொருந்தும்..
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment