அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Saturday, May 12, 2012

பள்ளி செல்வோம் – பள்ளி செல்ல உதவுவோம்

ஓதுவீராக! உங்களை படைத்த இறைவனின் திருப்பெயரைக்கொண்டு என்று ஆரம்பமான வேத வெளிப்பாட்டின் முதல் வரிகள் தொடங்கி, குர்ஆன் மற்றும் நபி மொழிகளில் கல்வி, சிந்தனை, அறிவியல் தொடர்பாக அவற்றை வழியுறுத்தும் ஏராளமான குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன. இதனடிப்படையில் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட மக்கள், மனித குலத்திற்கு பயன்தரும் அளப்பரிய கண்டுபிடிப்புகளை பல்வேறு துறைகளில் வெளிக்கொணர்ந்தனர்.
இந்திய முஸ்லிம்களின் கல்வி நிலை

ஒன்றுபட்ட இந்தியாவில் கல்வி பிராமனர்களின் தனிச்சொத்தாக கருதப்பட்ட காலகட்டத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்களே இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் இந்து-முஸ்லிம், ஆண்/பெண், ஏழை/பணக்காரன் என்ற பாரபட்சமின்றி கல்வி கற்கும் உரிமையை வழங்கினர்.

இந்தியாவில் தற்போது

22- மத்திய பல்கலைகழகம், 220-மாநில பல்கலைகழகம், 115-நிகர்நிலை பல்கலைகழம், 17-தேசிய கல்வி நிறுவனங்கள், 83% அரசு மற்றும் 17% தனியார் பள்ளி கூடங்கள் இயங்கி வருகின்றன.

இந்தியாவில் 16 சதவிதத்தினராக இருக்கும் முஸ்லிம்கள் தென்இந்தியாவைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் தலித் மற்றும் பழங்குடியினரைவிட மிகவும் மோசமாக இருப்பதாக சச்சார் கமிட்டியின் அறிக்கை படம் பிடித்துக் காட்டுகிறது.

மேலும், முஸ்லிம்களில் 66 சதவீத்தினர் இன்னும் ஆரம்ப கல்வி பெறாமலேயே இருப்பதாக தெரிவிக்கிறது. இது தவிர்த்து ஹரியானாவில் 98 சதவீதமும், அஸ்ஸாமில் 74 சதவீதமும், ம.பி. 65 சதவீதமான முஸ்லிம் பெண்கள் கல்வி பெறாமலேயே இருக்கின்றனர்.

(National Family Health Survey - NFHS)

கிராமப் புறங்களில் வாழும் 50 சதவீத முஸ்லிம்களுக்கு கல்வி எட்டாக்கணியாகவே உள்ளது.

இதற்கான காரணங்கள்:

·         ஏழ்மை

·         அறியாமை

·         குழந்தை தொழில்

·         அரசின் மெத்தனப் போக்கு

·         முஸ்லிம் விரோதப் போக்கு



முஸ்லிம்களின் நிலை


·         குடிசை மற்றும் சேரிப்புறங்களில் வாழ்க்கை

·         ரிக்ஷா ஒட்டுதல்

·         70 சதவீத முஸ்லிம்கள் வருமை கோட்டுக் கீழ்

·         மாத வருமானம் தேசிய வருமான உச்சவரம்பைவிட மிக குறைவு

·         தலித்களை விட பின்தங்கிய நிலை

-    National council of Applied Economic Research (NCAER) 1999

முஸ்லிம் சிறுவர்கள் தங்களது குடும்ப வருமானத்திற்காக ரெஸ்டாரண்ட், மொகானிக், தொழிற்சாலைகள் மற்றும் ஷூ பாலிஸ் போன்ற வேலைகள் செய்து மாதத்திற்கு வெறும் ரூ.150 மட்டுமே ஈட்டுகின்ற மோசமான நிலை.


·         33 சதவீத முஸ்லிம் கிராமங்களில் ஆரம்ப கல்வி கூடங்களும், 40 சதவீத முஸ்லிம் கிராமங்களில் ஆரம்ப சுகாதார கூடங்களும் இல்லாத பரிதாப நிலை

·         மேற்குவங்கத்திலுள்ள, முர்ஸிதாபாத் மாவட்டம் 70 சதவீதம் (இந்தியாவிலேயே அதிக) முஸ்லிம்கள் வாழும் மாவட்டமாக இருந்த போதிலும், அதுவே இந்தியாவிலேயே மிகவும் பின்தங்கிய ஏழ்மை நிலையிலுள்ள மாவட்டமாகவும் இருக்கிறது.



முஸ்லிம்களின் கல்வி நிலை:




இந்நிலையை சரிசெய்யும் முயற்சியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த 3 வருடங்களாக பள்ளி செல்வோம் என்ற கோஷத்தை முன்வைத்து தென் மாநிலங்களில் பல்வேறு பிரச்சாரம் மற்றும் உதவிகளைச் செய்து வருகிறது. அதிலொரு பகுதியாக கடந்த ஜனவரி மாதம் ரூ.300/- மதிப்பிலான School Kit கள் மேற்கு வங்கத்தில் 10,000 மும், மணிப்பூரில் 1000 மும் வழங்கப்பட்டது.


இந்த கல்வியாண்டில் ஆந்திரா, ம.பி. உ.பி. டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், பீகார் ஆகிய ஏழு மாநிலங்களில் சுமார் ஒரு லட்சம் குழந்தைகளை 1-5 வரையிலான வகுப்புகளில் சேர்த்துவிட்டு அவர்களுக்கு தேவையான School Kit வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் திட்ட மதிப்பு ரூ.3 கோடியாகும்.

இந்த செயல்திட்டத்தை வீரியத்துடன் செயல்படுத்தும் முகமாக:

·         கல்வி வழிகாட்டி முகாம்கள்

·         வீட்டுக்கு வீடு சென்று பிரச்சாரம்

·         தத்தெடுத்தல் மூலம் மாணவனின் முழு கல்விச் செலவையும் ஏற்றல்

·         பொது கூட்டங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்

·         படிப்பை பாதியில் நிறுத்தியவர்களை மறுபடியும் சேர்பித்தல்

·         பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கு கல்வி கற்க வேண்டி ஆர்வ மூட்டுதல்

·         ஒரு நபர் (ஆசிரியர்) பள்ளி கூடங்கள் அமைத்தல்

·         Sarva Shiksha Gram Project -  மூலம் முழு கிராமத்தையும் தத்தெடுத்து 100 சதவீத கல்வியை உறுதிசெய்வது

·         உதவித் தொகை வழங்குதல்

போன்ற எண்ணற்ற முயற்சிகளின் மூலம் நம் சமூகத்தை கல்வி ரீதியாக சக்திபடுத்த திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

பூமியிலுள்ளவர்களுக்கு கருணை காட்டுங்கள் மேலுள்ளவன் உங்களுக்கு கருணை காட்டுவான். – அபூதாவூது 4941

உங்களால் முடிந்த உதவிகளை செய்து மரணத்திற்குப்பின் பயன்தரும் நிலையான நன்மையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

-    தகவல் தொகுப்பு: முஅ ஸாலிஹ்

2 பின்னூட்டங்கள்:

அதிரை சித்திக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

அற்புதமான முயற்சி அணைத்து மக்களும்

கல்வி பயில வேண்டும் என வாய் கிழிய பேசும்

அரசியல் வாதிகளுக்கு மத்தியில் களம் இரங்கி

செயல் படும் நம்மவர்களுக்கு வாழ்த்துக்கள்

நன்கொடை வழங்க யாரை நாடுவது முகவரி

வெளியிட்டால் நன்றாக இருக்குமே,,.

இனியவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும்

அல்லாஹ் நற்கூலியை தருவானாக ஆமீன்

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

இது போன்ற அமைப்புகளின் செயல் திட்டங்களுக்கு முஸ்லிம்களாகிய நாம் ஒவ்வொருவரும் முன் வந்து உதவி புரிய வேண்டும்.

முஸ்லிம்களின் அதுவும் குறிப்பாக இந்திய முஸ்லிம்களின் அடிப்படை பிரச்சனையே உண்ண உணவும்,உடுத்த உடையும், கற்க கல்வியும் தான். அதை விட்டு விட்டு எத எதையோ பேசிக்கொண்டு இருக்கிறோம்.

இதற்க்கான செயல்பாடுகளுக்கு "துக்ளக் நியூஸ்" எப்பொழுதுமே துணை நிற்கும்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.