அதிராம்பட்டினத்தில் நேற்று 9/05/12 செய்வாய் கிழமை மேலத்தெருவில் இருக்கும், சேக் நஸ்ருதீன் தர்ஹா வளாகத்தில் மீலாத் விழாவும் முகைதீன் ஆண்டகை(?!) விழாவும் நடை பெற்றது.
விழாவில், அதிரையின் எல்லா முஹல்லாவை சேர்ந்தவர்களை அழைத்திருந்தனர்.அனைத்து முஹல்லா கூட்டமைப்பை சேர்ந்தவர்களையும் அழைத்திருந்தனர். அத்துடன் பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச்.அஸ்ஸலம் அவர்களையும் அழைத்திருந்தனர்; அவரும் சென்றார் மேடையில் வீற்றிருந்தார்.
அதிரை நகர முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் கே.கே.ஹாஜா அவர்கள்தான் இவ்விழாவின் தலைவர்! வரவேற்புரை ஆற்றினார். அப்போது, "பேரூராட்சி தலைவர் பதவி என்பது பெரும் பதவியெல்லாம் இல்லை;அதைவிடவும், அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் பதவிதான் உயர்ந்தது" என்று பேசியதாக கூறப்படுகிறது.
அங்கே மேடையில் வீற்றிருந்த அதிரை பேருராட்சித் தலைவர் எஸ்.ஹெச்.அஸ்லம் அவர்கள் தனது அதிர்ப்தியை தெரிவித்தார்.
விழாவில் கலந்துக்கொண்டவர்களும் தங்களது அதிர்ப்தியை காட்டினர்.
விழாவில், சற்று சலசலப்பு ஏற்பட்டது!
கே.கே.ஹாஜா அவர்கள் பேசிய இப்பேச்சு அதிரை முழுவதும் பரவியது. "தவறானது,தேவையற்றது" என்கிறார்கள் பொது மக்கள்!
"பேரூராட்சி தலைவர் பதவி என்பது பெரும் பதவியெல்லாம் இல்லை" என்றால், முஸ்லிம் லீக் சார்பாக அதிரை பேரூராட்சி தலைவர் பதவிக்கு சுயட்சை வேட்பாளராக வக்கீல் முனாஃப் அவர்களை களமிறக்கியதே ஏன்? கே.கே.ஹாஜா அவர்கள்தானே களமிறக்கியது... பெரும் பதவி இல்லை என்பதால்தானா? எத்தனையோ பல முஸ்லிம் லீக் கட்சியினர் ஊள்ளாட்சி பதவிகளில் இருக்கிறார்களே அதையும், சிறுபதவிதான் என்கிறார்களா?என்று கேட்கிறார்கள் மக்கள்!
எத்துனையோ பல மேடைகளில், கே.கே.ஹாஜா அவர்கள் பேசிய அனுபவம் உள்ளவர்கள்தான். ஆனால், ஏன் அப்படி பேசிட வேண்டும்..?பேசிடும் அவசியம் என்ன..?என்பதுதான் அதிரை மக்களின் இன்றைய கேள்வி!
இது குறித்து, கருத்தறிய தக்வா பள்ளியில் கே.கே.ஹாஜா காக்கா அவர்களை சந்தித்த போது,"வேண்டுமென்றோ,உள்நோக்கத்துடனோ பேசவில்லை;என் பேச்சு மனவறுத்ததை அளித்திருக்குமானால் மன்னிப்புக் கேட்டகவிரும்புகிறேன்"என்றார்.
நன்றி: அதிரை போஸ்ட்
12 பின்னூட்டங்கள்:
என்னப்பா இன்னும் சின்ன பிள்ளையா இருக்கிரிகளே அதான் வளர்ச்சியே இல்லே இந்த லிங்கில் உள்ள bayan கொஞ்சம் கேளுங்களேன்
http://makkamasjid.com/index.php?option=com_content&view=article&id=851%3Abirthday&catid=39%3Ajumma&lang=en
ஒரு சபைக்கு ஒருவரை அழைத்து
அவரை அவமானம் படுத்துவது போன்று
பேசுவது கண்டிக்கத்தக்கது ..,
பேசியதில் சொற்பிழையோ அல்லது புரிதலில் பொருட்பிழையோ ஏற்பட்டிருக்கக்கூடும் எனப் படுகிறது. கீழிருக்கும் பத்திக்கு இணங்க, தவறுக்காக வருத்த தெரிவித்த பின்னர், இவ்விஷயத்தை இப்படியே விட்டு விடுவதே சாலச் சிறந்தது.
/*இது குறித்து, கருத்தறிய தக்வா பள்ளியில் கே.கே.ஹாஜா காக்கா அவர்களை சந்தித்த போது,"வேண்டுமென்றோ,உள்நோக்கத்துடனோ பேசவில்லை;என் பேச்சு மனவறுத்ததை அளித்திருக்குமானால் மன்னிப்புக் கேட்டகவிரும்புகிறேன்"என்றார்.*/
அடக்கத்தலத்தில் விழா எடுக்க கூடாது:
உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 1746
அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்:
அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427, 434, 1341,
மீலாது விழா நடத்துவதற்கு மார்க்கத்தில் என்ன ஆதாரம் ?
கந்துரி விழா நடத்துவதற்கு மார்க்கத்தில் என்ன ஆதாரம் ?
பேசியவர் மன்னிப்பு கேட்க தயாராகிவிட்ட நிலையில் இதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்பது என் கருத்து. பேரூராட்சி தலைவரும் இதை பெரிதுபடுத்தாத நல்ல உள்ளம்படைத்தவராகட்டுமே. இப்படி நடந்தால் இருவரும் அவரவர் நிலையில் உயர்ந்தவர்களாகிவிடுவார்கள், இன்ஷா அல்லாஹ்.
தம்பி ஷபாஅத் கூறிய கருத்து ஏற்றுக்கொள்கிறேன்
ஆனால் .செய்திகளுக்கான பதிவு.. .கண்டிக்கத்தக்கது..
என்பதே ..அவர் மனம் வருந்தியதாக செய்தியில்
கூறப்பட்டிருந்தாலும் ..இது போன்ற நிகழ்வுகள்
நம்மவர்களின் பதிவில் அவர் செயல் நியாய படுத்தக்கூடாது
எல்லோரும் கலந்துக்கொண்ட கூட்டத்தில் ஒரு பேரூராட்சி தலைவரை அவமான படுத்திருப்பது நல்லது அல்ல. அவரவர் அவரவர் அந்த அந்த பொறுப்பில் இருக்கும் போது தான் தெரியும் அவர்களுடைய பணிகள்.
இறைவன் குர் ஆனிலும், ஹதீஸ்களிலும் தெள்ள தெளிவாக சொல்லிவிட்டான் அடுத்தவருடைய மனதை புண்படுத்தாதீர்கள் என்று. பேசியவர் மன்னிப்பு கேட்டாலும் அந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் மனதில் பேரூராட்சி தலைவர் மீது கெட்ட எண்ணம் ஏற்படும்.
பேசும் போது வார்த்தைகளை மிக கவனமாக பேச வேண்டும். பேசி விட்டு பிறகு மன்னிப்பு கேட்பது என்பது பெரிய விசயமல்ல. ஒருவருடைய மனம் புண்பட்டால் அதை யாராலும் சரி செய்ய முடியாது.
கொட்டுறது மிக சுலோபமாக கொட்டலாம் கொட்டியதை அல்ரது கஷ்ட்டம். அதைப்போல் தான் இந்த கூட்டத்தில் பேரூராட்சி தலைவரை பேசிய பேச்சும்.
அணைத்து முஹல்லாஹ் கமிட்டி பெரிதா இல்லையா அது அப்ப வெறும் டம்மியா அப்ப அதை கலைத்துவிடலாமே அது பெரிதில்லை என்றால் அது ஆரம்பித்தபோது உலகம் முழுவதும் உள்ள அதிரை தோழர்கள் ஆஹா ஓஹோ என்றிர்ஹல் இப்போது அது சவள பிள்ளையா
அந்த விழாவில் பேசிய அசலம் அனைத்து முஹல்லாஹ் கமிடீயையே அவர் தான் அனைத்தும் என்றும் அணைத்து முஹல்லாஹ் கமிட்டி என் சட்டை பையில் தான் என்று பேசியுள்ளார் அப்போது பார்வையாளர் ஒருவர் மேடை ஏறி கண்டனம் தெரிவித்தபோது அசலம் அத்துடன் பேச்சை நிறுத்திவிட்டார் என்றும் மேடை ஏறி கண்டனம் தெரிவித்தவரிடம் தான் விழா குழுவினர் மன்னிப்பு கேட்டதாஹ் உண்மை தகவல்
மார்க்கத்தில் அனுமதி இல்லாத இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்வதை இனி சேக் காக்கா அவர்களும் அஸ்லம் காக்கா அவர்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும் உங்களை இந்த பதவிகளில் அமர்த்தியவர்களில் தர்கா வழிபாடு கூடாது என்ற கொள்கை உள்ளவர்களும் உள்ளனர்.
அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427, 434, 1341,
இங்கு கூறப்பட்டிருக்கும் தகவலில் கே கே ஹாஜா அவர்கள் பேசியதை போட்டு இருக்கீர்கள். அவர் ஏன் அதை சொன்னார், அதற்கு முன்பு அஸ்லம் என்ன பேசினார் என்பதை ஏன் போட வில்லை ?
தேவை இல்லாத செலவில் நடத்திய கூட்டத்தில் தேவை இல்லாத பேச்சு.... உருப்படியான கூட்டத்தை நடத்தி உருப்படியான பேச்சை பேசுங்கய்யா... முகைதீன் அப்துல் காதற் ஜெயிலானி மட்டும் அங்கு இருந்தால் ஜெனரட்டர் அணைத்து விட்டு எல்லரையும் தொழுகைய ஜெமாத்தொடு தொழ சொல்லி இருப்பாரு...
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment