அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Thursday, May 10, 2012

செல்பேசி பிரியர்கள் கவனத்திற்கு....
உங்களில் யாருக்கு நோமோபோபியா ?
Webdunia
Nomophobia
உலகத்திலேயே மிகப்பெரிய பயம் என்று நீங்கள் எதை நினைக்கிறீர்கள்..?

ரொம்ப மூளையை கசக்காம தொடர்ந்து படிங்க...

உங்க போன் உங்க கிட்ட இல்லைனா உங்க ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்?

ஒரு நிமிடம் யோசித்து பாருங்க...

ஒரு பதற்றம், பயம், மன உளைச்சல் ...

இன்னும் சொல்லனும்னா...

அய்யயோ முக்கியமான கால் வருமே, நிறைய விஐபி காண்டாக்ட்ஸ் எல்லாம் இருக்கேன்னு நீங்கள்
புலம்பூவீங்களா... கவலைப்படுவீங்களா...

இதுதாங்க உலகிலேயே மிகப்பெரிய பயம். இந்த பயத்தோடு நிறைய பேர் இருக்கிறார்களாம்.

இதை நாங்க சொல்லலைங்க... இங்கிலாந்தில் நடத்திய ஆய்வு ஒன்று இப்படி ஒரு தகவலை நமக்கு தருகிறது.

இந்த மாதிரி ஃபோன் காணாமல் போனால் பயப்படறதுக்கு பெயர் நோமோபோபியா.

அதாவது நோ மொபைல் போன் போபியா.

இந்த வியாதி உங்களுக்கு இருக்கிறதா என்று சந்தேகமிருந்தால் கீழ்காணும் சில அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா என்று சோதித்து பார்த்துக்கொள்ளுங்கள்.

* எப்பவுமே போன் சுவிட்ச் ஆப் செய்ய முடியாமை.

* மிஸ்டு கால், ஈமெயில், எஸ்.எம்.எஸ்சை அடிக்கடி பார்த்தல்

* போன் பேட்டரியை எப்பவும் முழுமையாக வைத்திருத்தல்

* பாத் ரூம் போகும் போது கூட கூடவே போனை கொண்டு செல்லுதல்

இந்த நோமோபோபியா நிறைய பேருக்கு உள்ளதாக ஆய்வு கூறுகிறது.
75 விழுக்காட்டினர் பாத்ரூமில் செல்போன் பயன்படுத்துகிறார்களாம். கேட்டால், மாடர்ன் செய்தித்தாள் என்று சொல்கிறார்களாம்.

தற்போது இங்கிலாந்தில் 1000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 66 விழுக்காட்டினரிடம் இந்த நோமோபோபியா
இருப்பதாக அறிய முடிகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன் இதேப்போன்ற ஆய்வை நடத்தியபோது, 53 விழுக்காட்டினர் போன் தொலைந்துபோனால் அச்சமடைய கூடிய வியாதி இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது
அன்று ஆண்கள் அதிகமாக நோமோபோபொயாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று பெண்கள் அதிகாக உள்ளனர்
அதுவும் 18-லிருந்து 24 வயது வரை உள்ளவர்கள் தான் மொபைல் போனுக்கு அதிகம் அடிமையானவர்களாக உள்ளனர். இவர்களில் 77 விழுக்காட்டினர் சில நிமிடம் கூட போனை பிரிந்து இருக்க முடியவில்லையாம்.

இதேப்போன்று, 25-இருந்து 34 வயது வரை உள்ளவர்களில் 68 விழுக்காட்டினர் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.

இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், 75 விழுக்காட்டினர் பாத்ரூமில் செல்போன் பயன்படுத்துகிறார்களாம். கேட்டால், மாடர்ன் செய்தித்தாள் என்று சொல்கிறார்களாம்.

இதேப்போன்று, சராசரியாக ஒரு நாளைக்கு 34 முறை தங்கள் போனை எடுத்து சும்மாவே பார்த்து வைக்கின்றனராம்.

இதுகுறித்து ஆய்வு நடத்திய செகியூர் என்வாய் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான அன்டி கெம்ஷல்
தெரிவிக்கும் போது, நாங்கள் 2008 ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல்கள் தற்போது அப்படி தலைகீழாக
உள்ளதாக கூறியுள்ளார். அதாவது, அன்று ஆண்கள் அதிகமாக நோமோபோபொயாவால்
பாதிக்கப்பட்டிருந்தனர் இன்று பெண்கள் அதிகாக உள்ளனர் என்றார்.

தனது மெசேஜ்களை, பார்ட்னர் பார்த்துவிட்டால் அப்செட் ஆவோர் எண்ணிக்கை 49 விழுக்காடு .
அதேசமயம், தனது போன் பாதுகாப்பு பற்றி பெரும்பாலானோர் கவலை படுவது இல்லையாம். வெறும் 46 விழுக்காட்டினர் மட்டுமே ரகசிய லாக் கோட் பாயன்படுத்துவதாகவும், 10 விழுக்காட்டினர் தனது தகவல்களை குறியீட்டு சொற்கள் மூலம் மறைத்து அனுப்புவதாக ஆய்வு கூறுகிறது.

இது இங்கிலாந்து நிலவரம்ங்க...
நம்ம ஊரில் இதுப்போன்ற வியாதி உள்ளவர்கள் எத்தனைப்பேரோ....?

2 பின்னூட்டங்கள்:

அதிரை சித்திக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

செல் போன் உளவியல் ரீதியாக ..

இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதில்

ஆச்சர்ய படுவதற்கு ஒன்றும் இல்லை .. அதே சமயத்தில்

கதிர் வீச்சுக்களால் கேன்சர் வருகிறதாமே ..அதை பற்றியும்

கொஞ்சம் எழுதுங்களேன் ..

KALAM SHAICK ABDUL KADER said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கைப்பேசி பேசினால்..........!!

நான் செய்த புரட்சிகள்:


தத்திச் சென்ற
தந்தியை வென்றேன்

குறுஞ்செய்தியால்
குவலயம் ஆள்கின்றேன்

ஆறாம் விரலாய்
ஆட்கொண்டே
ஆட்டுவிக்கின்றேன்

கைக்குள் அடக்கமாய்
ஹைக்கூ கவிதையாய்
“நச்”சென்று பேச வைத்தேன்

ஏபிசிடி தெரியாமலே
ஏடேதும் படிக்காமலே
மிஸ்டு கால்
மெஸேஜ் எல்லாம்
புரிய வைத்தேன்

ஆடம்பரமாய்
ஆரம்பமானேன்
தேவைக்குரியோனாய்த்
தேர்ந்தெடுக்கப்பட்டேன்

உயர்ந்த விலையில்
உடலாம் எனக்கு
குறைந்த விலையில்
உயிராம் “சிம்” அதற்கு

பல்லுப் போனால்
சொல்லுப் போச்சு
சில்லு(சிம்)ப் போனால்
செல்லுப் போச்சு

கையில் வைத்தேன்
உலகை
கைவிரல் பட்டதும்
திறந்து காட்டுவேன்
உலகை

மின்னஞ்சல் கணிப்பொறி
என்னெஞ்சில் அடக்கம்
கணிதப்பொறியின்
வணிகம் எல்லாம்
என்னால் முடக்கம்

நாட்காட்டி கூட
ஆட்காட்டி விரலில்

கைக்கடிகாரம் வாங்காமல்
கைப்பேசியேக் கடிகாரமாய்க்
கைக்குள் அட்க்கினேன்

வானொலியின்
தேனோலியாய்
நானொலிப்பதையே
நானிலமும் நாடும்

இசைகேட்டு
அசைய வைத்தேன்
திசையெட்டும் என்றன்
விசைக்குள்ளே

நான் செய்த வீழ்ச்சிகள்:

புரட்சிகள் வெடிக்கும் அன்று
வெடிக்கும் புரட்சிகள் இன்று
வெடிகுண்டுத் தீவிரவாதிகளின்
மடிகொண்டுத் தங்கினேன்

படிக்கும் மாணவர்களைப்
பாழாக்கினேன்

இறைதரிசன தளங்களில்
இடையூறு செய்பவனானேன்

குறுஞ்செய்திகளால்
குடும்பங்களைப் பிரித்தேன்

அருவருக்கத்தக்க
அனாச்சாரங்களை
விதைத்தேன்
விபச்சாரத்தை
அறுவடை செய்தேன்

மணவிலக்கும் என்னால்
மண்டி விட்டது தன்னால்

மன்னிப்பே இல்லாத
மகா பாவியானேன்

அலைக்கற்றை ஊழல்மீனுக்கு
வலைவீசி ஆசையை நாட்டினேன்
நிலைப்பெற்ற ஆட்சியை ஓட்டினேன்
நிலைகுலைய வைத்துக் காட்டினேன்

காதலர்கட்கு நண்பனானேன்
பெற்றோர்கட்கு எதிரியானேன்
ஆதலினால் என்னை
ஆதரிப்போரும் உண்டு;
ஆத்திரம் கொள்வோரும் உண்டு

--

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.