அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Monday, December 5, 2011

“ பர்தா ” அணிவதைப்பற்றி அமெரிக்க கல்லுரி மாணவியின் அனுபவம் !




ஒரு நேரத்தில், பர்தா அணிவதைப் பற்றி மிகவும் அச்சம் கொண்டிருந்தேன். பெரும்பாலான மக்களைப்போல, எனக்கும் ‘முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிகின்றனர் ?’ என்ற ஐயம் எழவே செய்தது. நான் பருவம் எய்திய பின்பு, எனது முதல் எண்ணம், எனது முதல் அச்சம், எனது தலைமுடியை மறைக்கும் பர்தாவை நானும் அணிய வேண்டுமே என்பதேயாகும். பர்தா அணிவதன் உண்மைப் பொருள் என்னவென்பதைப் பிறகு விளங்கியதும் பர்தா அணிய வேண்டும் என்ற திடமான முடிவை மேற்கொண்டேன். ஆனால் அதனை மெல்ல மெல்லத் துவங்கினேன்.


தென் கலிஃபோர்னியா இஸ்லாமிய மையத்திலுள்ள மஸ்ஜிதுக்குச் செல்லும்போது மட்டும் பர்தா அணிவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அத்துடன் கைகளையும், கால்களையும் மறைக்கும் நீண்ட உடைகளையும் அணிந்து வந்தேன். பிறகு படிப்படியாக தோழிகளின் வீடுகளுக்குச் செல்லும்போது பர்தாவுடன் சென்றேன். கடைசியாக, வசந்தகால விடுமுறைக்குப் பிறகு கல்விக்கூடத்திநற்குச் செல்லும்போது பர்தாவைத் துணிந்து அணிந்து சென்றேன். பள்ளிக்கூடத்திற்கு பர்தாவுடன் செல்வதைப் பற்றித்தான் மிகவும் அச்சம் கொண்டிருந்தேன். ஆனால், இப்புதிய அனுபவம் மிகவும் உற்சாகம் மிகுந்த அனுபவமாக அமைந்துவிட்டது. எல்லோரும் என்னை வியப்புடன் பார்ப்பது எனக்குள் மிகுந்த பரபரப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.


வகுப்பு இடைவேளையின் போது சகமாணவிகள் பர்தாவைப் பற்றி பல கேள்விகளை எழுப்பினர். நான் பர்தா அணிந்திருப்பதைப் பார்த்த எனது ஆசிரியையும் அதன் காரணங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினார். ஆகவே, வரலாறு பாட வகுப்பின் போது அது பற்றி உரையாடலாம் எனக் குறிப்பிட்டார். இது நடந்தது பல ஆண்டுகளுக்கு முன்பு. திருமறை வலியுறுத்தும் பர்தாவின் பல நன்மைகளை எனது அனுபவத்தில் கண்டு கொண்டேன். முதலாவதாக, நான் பெண் என்று மரியாதை காட்டப்படுகிறது. ஒரு பால் பொருள் (Sex Object) என்று நோக்கப்படுவதில்லை.


இரண்டாவதாக, நான் ஒரு இஸ்லாமியப் பெண் என்று மக்களால் அறியப்படுகிறது. பர்தா அணிவதன் மூலம் நான் மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும், மற்றவர்கள் என்னைத் தெரிந்து கொள்ளவும் முடிகிறது. நான் பர்தா அணியவில்லை என்றால், அதைப்பற்றி கேள்விகள் யாரும் கேட்கப்போவதில்லை. ஆகவே, எனது நெறியான இஸ்லாம் பற்றிய செய்திகளை விளக்குவதற்கு கடைசியில் வழிவகுக்கும். பர்தாவைப் பற்றிய ஐயங்கள் எழுவதற்கு வாய்ப்பில்லாமல் போய் விடக்கூடும்.



பர்தா பற்றிய வியத்தகு அனுபவங்கள் எனக்கு ஏற்பட்ட போதிலும், மற்றவர்கள் எவரும், எவரையும் வற்புறுத்துவது கூடாது எனக் கருதுகிறேன். அடிக்கடி பர்தா அணிவது பற்றிய தவறான, வழிதவறிய அழுத்தம் தரப்படுகிறது. பர்தா அணியாதவர்கள் ஏதோ பெரும் தவறிழைத்துவிட்டனர் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து விடக் கூடாது. மாறாக, பர்தா ஏன் அணிய வேண்டும் என்பதை மென்மையாக எடுத்துச் சொல்ல வேண்டும். மக்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை எடுத்துச் சொல்ல வேண்டுமேயல்லாது, அவைகள் பற்றி கட்டாயப்படுத்தக் கூடாது.


பர்தா அணிதல் என்பது ஒருவரின் நெறியை பகிரங்கமாகப் பறைசாற்றுவதாகும். அதன் மூலம், ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ளக் கூடும். ஏனையவற்றைவிட மதத்தைப் பின் பற்றுதல் மிகவும் எளிதானது என்பதை உணர்த்துவதாக பர்தா அமைந்துள்ளது. வீண் பேச்சுக்களில் ஈடுபடுவதில்லை என்பதை நான் நிச்சயமாக அறிந்து விடுவதைக் காட்டிலும், எனது தலைமுடிகள் பர்தாவினால் மறைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து விடுவது மிகவும் எளிதாகும். பர்தா அணிவதன் மூலம் ‘எனது குணநலன்களில் சிறந்த மாற்றங்கள்’ ஏற்பட்டுள்ளன. பர்தாவைப் பற்றி தவறான கருத்துக்களே மக்களிடம் இன்னும் நிலவி வருகிறது. ஏனெனில் மற்றவர்களை மதிப்பிடுவது என்பது மிகவும் எளிதாகும். பர்தா அணிந்த பெண்மணி ஒருவர் தனக்கு எதிரில் வரும் ஒருவரைப் பார்க்க நேரிடின், அவர் ‘நல்லவரா ?’ அல்லது ‘கெட்டவரா ?’ என்பதை எளிதில் மதிப்பிட்டு விடலாம்.



( இக்கட்டுரையாசிரியர் லைலா அஸ்கர், வெஸ்டர்ன் பிரிட்ஜ் (Western Bridge) பள்ளி மாணவி. அமெரிக்காவின் ‘லாஸ் ஏன்ஜல்ஸ் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையாகும் இது. கட்டுரையின் தமிழாக்கம்: டாக்டர், பீ. ஹாமிது அப்துல்லாஹ் அவர்கள். )

4 பின்னூட்டங்கள்:

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

அஸ்ஸலாமு அலைக்கும்
பர்தா - பெண்களுக்கு உண்மையில் கண்ணியமளிக்க கூடிய ஒன்று. ஆனால் அவர்கள் அதனை இஸ்லாம் சொல்லக்கூடிய முறையில் அணிந்தால் அவர்களுக்கும் நல்லது. மற்றவர்களுக்கும் நல்லது. தற்போதைய காலகட்டத்தில் நம் பெண்கள் பல்வேறு டிசைன் களுடன் மிகவும் டைட்டாக அணிந்து பர்தாவின் உண்மையான நோக்கத்தையே வீணடித்து விட்டனர். இதனால் பல்வேறு தவறுகளுக்கு வழி ஏற்பட வாய்ப்புள்ளது. உண்மையில் பர்தா அணிவது என்பது ஒரு குச்சியின் மேல் ஒரு விரிப்பினை போட்டால் எப்படி இருக்குமோ அவ்வாறு அணிவதுதான் சாலசிறந்தது.

அபூ இஸ்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

தற்போதுள்ள பெண்கள் புர்க்காகளில் பலவித டிசைன்களை ( fabrics ) சேர்த்து அணிந்து கொள்கிறார்கள். இதனால் அவர்கள் தெருக்களில் நடந்து செல்லும் பொழுது அடுத்தவர்களின் கவனம் சிதர்கிறது

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

ஆயிரம் வழிமுறை இருந்தாலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலில் தான்.... சிறப்பும் பாதுகாப்பும் இருக்கிறது என்பது திண்ணம்.... ஊரில் எத்தனையோ பெண்கள் வளம் வந்தாலும் பர்தாவுடன் வரக்கூடிய பெண்களுக்கென்று தனி கண்ணியம் காணப்படும் என்பது மறுக்க முடியாத உன்மை...

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

கட்சிக்காரர்கள், தொண்டர்கள், தலைவர்கள் மற்றும் எல்லா தரப்பட்ட மக்களிடம் கொஞ்சம் கூடுதலாக மரியாதையை எதிர்பார்த்தவராகவும்.....

தன்னுடைய பழைய வாழ்க்கையை மற்றவர்கள் நினைவுபடுத்தாமல் இருக்கவும்........

மற்றவர்களின் நாகரீகமில்லாத விமர்சனங்களை தவிர்ப்பதர்க்காகவும்......

தான் ஒரு பெண் என்றும், தமக்கு தாய்மை உள்ளம், கண்ணியம், கட்டுப்பாடு, இருப்பதர்க்காக வேண்டியும்.......

தன் எதிரியின் வசைப்பாட்டில் பெயருக்கு பதிலாக "அம்மையார்" என்று அழைக்க வைப்பதற்கும்....

தமிழ் பேசும் பெண்ணாக இருந்தும்.....அவர் எடுத்துக்கொண்ட ஆயுதம்.....!!!

தன் உடல் முழுவதையும் மறைக்கப் பயன்படுத்திய "சால்வைதான் " (நேரிடையாக புர்கா என்றில்லாமல்)

அவர் வேறு யாருமல்ல....

நரபலி மோடியின் அன்புத் தங்கைதான்....

அம்மா என்கிற ஜெயலலிதா.....

( 1990 - 91 இல் திமுக ஆட்சியில் சட்டசபையில் நடந்த கலாட்டாவில் இருந்து இன்று வரை முக்காடு இல்லாத புர்கா அணிய ஆரம்பித்தார் அம்மா......... அதனாலதான்...நம்ம அஜீஸ் பேச்சுக்கு பேச்சு "அம்மா" என்கிறார் என்று இப்போதாவது புரிகிறதா.......! ! ! )

கருப்பு கலர் அய்யங்காருக்கு பிடிக்காத கலர்.

*****துக்ளக் நியூஸ் குழுமம்*****

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.