அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Monday, December 5, 2011

அமீரக AAMF-ன் முக்கிய அறிவிப்பு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அன்பிற்கினிய அதிரை சொந்தங்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

நமதூா் சகோதரா்களால் நடத்தப்படும் இணைய வலைப்பூக்களில் AAMF செயல் திட்டங்கள் குறித்து பதியப்படும் கருத்துகளைப் பற்றி 04.12.2011 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நிர்வாகிகளால் ஆலோசிக்கப்பட்டது. இவ்வாலோசனை அமா்வின் முடிவில் – AAMF என்பது அதிரை மக்களின் ஒற்றுமைக்காக துவங்கப்பட்டதே தவிர, எந்த ஒரு சமுதாய பிளவுகளுக்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல என்பதாக நிர்வாகிகள் உறுதியாக கருத்து பதிந்தார்கள். அத்துடன் நமதூரில் இயங்கி வருகிற எந்த அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு போட்டியாகவோ அல்லது குறுக்கீடு செய்வதற்காகவோ AAMF துவங்கப்பட்டது இல்லை என்று ஏகமனதாக தீா்மானிக்கப்பட்டது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பு:
AAMFகுறித்து விளக்கம் பெற விரும்புகிறவா்கள் தயவு செய்து adiraiallmuhallah@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரி மூலமோ அல்லது 00971-50-7480023 / 00971-55-4011344 என்கிற மொபையில் எண்களின் மூலமோ தொடா்புக் கொண்டு பெற்றுக் கொள்ளவும். கண்டிப்பாக முறையான முகவரியின்றி கேட்கப்படும் விளக்கங்களுக்கு எவ்வித பதில்களும் தெரியப்படுத்தப் படமாட்டாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


அன்புடன்
AAMF நிர்வாகம்
அமீரகம்.

15 பின்னூட்டங்கள்:

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

நல்லதொரு தீர்மானம் ஏட்டளவில் இல்லாமல்..... செயல்வடிவிலும் இருக்க அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்....

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

அன்புச் சகோதரர்களே.
அஸ்ஸலாமு அழைக்கும்

AAMF அதிரை பைத்துல்மாலுக்கு உட்பட்ட பணிகளை செய்வதுமனச்சோர்வை தருகிறது, அது ஒரு போட்டி அமைப்பாகசெயல்பட திட்டமிட்டிருக்கிறது என்பது போன்ற விமர்சனங்களை தவிர்ப்பதற்காக, அனைத்து முஹல்லா கூட்டமைப்பு உருவாக்கிய "ஜகாத்இல்லம்" சேவையின் தலைப்பை, "இடைக்கால உதவி இல்லம்", "அவசர உதவிப் பெட்டி", "அவசர உதவிக் களஞ்சியம்"என்பது போன்ற பெயரிட்டு கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம் மக்களை தெளிவுபடுத்தலாம்.

அதிரை பைத்துல்மால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்கு முன் தனது நிதியிருப்பிலோ, அல்லது உதவி புரிபவரிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டுகணக்கில் வரவழைத்து, பிறகு பாதிக்கப்பட்டவருக்குநேரிடையாக உதவித் தொகையை பைத்துல்மால் பெயரில் கொடுக்கும். மேலும் அந்தக் கணக்கை ஆண்டறிக்கையிலும்வெளியிடுவார்கள்.

ஆனால்.,AAMF இன் சேவையின் ஒன்றான உதவித்தொகை என்பது, விபத்தில் அல்லதுசட்ட ரீதியாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கோ அல்லதுஒரு குறிப்பிட்ட சமுதயாத்திற்க்கோ உதவி செய்ய நினைத்தால் தனிப்பட்ட முறையில் கருனையுள்ளங்கள்கொடுக்கும் தொகையை வைத்து, பஞ்சயத் தலைவர்,துணைத்தலைவர், காவல்துறை உயர் அதிகாரி, கலெக்டர், முதிர்ந்த சமூக சேவகர், உலமாக்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு வாயிலாக மேற்படிஅந்த உதவித்தொகையை விநியோகிக்கலாம். ஏனென்றால் இது போன்ற உதவித்தொகையும், ஊக்கத்தொகையும் தொடர்ந்து செய்ய வேண்டிய அவசியம்இருக்காது, மாறாக அந்தந்த காலசூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு செய்யலாம்.

ஆகையினால் இது போன்ற உதவித்தொகையை நமதூரின் முதுகெலும்பானAAMF வாயிலாகசெய்வது எல்லா தரப்பு மக்களாலும், நிறுவனங்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று

அப்துல் ஹமீது BIN சுல்தான் இப்ராஹிம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

வேலை இல்லாதவர்கள் தான் புனைபெயர்களுடன் மின்னோட்டம்மிட்டு கொன்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு நல்ல வேலைக் கிடைக்க அல்லாஹ் அருள் புரிவானாக.... ஆமீன்...

அப்துல் ஹமீது BIN சுல்தான் இப்ராஹிம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

தனிபட்ட நபர்களின் கருத்துக்கள் ஏற்புடையது அல்ல....
பின்னேட்டம் எழுதுகிறவர்கள் அல்லாஹ்க்கு பயந்து கொள்ளுங்கள்...

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 5

அப்துல் ஹமீது BIN சுல்தான் இப்ராஹீம் அவர்கள் - ஏன்

முகமது BIN துக்ளக் - ஐ பார்த்து கோபப்படுகிறார்

அப்துல் ஹமீது BIN சுல்தான் இப்ராஹிம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 6

கோபப்படவில்லை நண்பரே. தாங்கள் சொல்வது கருத்து நல்ல கருத்தாக இருந்தாலும் அதை தங்களுடைய உண்மையான பெயரில் சொல்லலாமே...

அப்துல் ஹமீது BIN சுல்தான் இப்ராஹிம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 7

தங்களுடைய பெயா் வெளியில் தெரிந்தால் அவமானமாக பொய்விடும் என்று பயத்தின் காரணமாக தான் புனைப்பெயருடன் வளம் வருகின்றிகாளா....

புனைபெயா்களில் ஒருவன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 8

இங்கு என்ன நடக்கிறது. ஒன்றும் புரியவில்லையே

majfausa said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 9

abdul hameed bin sultan ibrahim aenthaan aadhangappadukiraaro theriyavillai,yaar endha peyaril vandhaal enna,sollum karutthukkal aerpudaiyathaaga irukkindradhaa endru paarthaal mattum podhumaanadhu.

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 10

தோழரே...

எங்களுடைய பெயர்களை சென்சஸ் எடுப்பவர்கள், வாய்க்கள் தெரு ஓட்டப் பள்ளிக்கூடம், காதர் முகைதீன் பள்ளி, நியூ காலேஜ், சம்சுல் இஸ்லாம் சங்கம், Airtel , சாஸ்த்ரிபவன், இரயில் நிலையம், ராஹத்து பஸ், பத்திரப் பதிவு அலுவலகம், மின் வாரியம், தொலை தொடர்பு நிலையம், மஸ்தான்-ராயல் டைலர் கடை, டெலிபோன் பூத்துன்னு ஏகப்பட்ட இடங்களுக்கு நாங்களா முன் வந்து சொன்னோம்.

அதேபோல் எங்களின் பெயர் பின் வரும் இடங்களில் இல்லை.....

காவல் நிலையம்
அதிரை பைத்துல் மால்
தமுமுக
மமக
விடியல்
திமுக
அதிமுக
தேமுதிக
மதிமுக...... என்று எந்த அமைப்பையும் சாராதவர்கள். மேலும் அவைகளின் அரசியல் சூழ்ச்சிகளை ஏற்படுத்தும் புல்லுருவிகளை மக்களுக்கு ஓரளவு புரியும்படி சொல்ல நினைப்பவர்கள்.

நாங்கள் சராசரியான, யதார்த்தமான, தெளிவான, நம் நாட்டின் சட்டத்திற்குட்பட்டு, ஜனநாயக ரீதியாக குரல் கொடுக்கும் அதேசமயம் எளிமையான வாழ்க்கை நடத்த நினைப்பவர்கள்.

எங்களிடம் பெயரைக் கேட்டவர்கள் மூன்று பேர்.

1 . எங்களுக்கும் கத்தனா செய்த மதிர்ப்பிற்குரிய முகைதீன் காக்க (ஒரே அடி... தொடைல)
2 . சுண்டு வீட்டு டைரி அப்பா.
3 . அப்துல் ஹமீது BIN சுல்தான் இப்ராஹிம்

எத்தனையோ சகோதரர்கள் புனைப் பெயரில் பின்னோட்டம் இடுபவர்கள் இருந்தாலும் எங்களைமட்டும் "பயமா" என்கிறீர்கள். உண்மைதான், பயம்தான். ஆனால் நாங்கள் ஆரம்பத்திலிருந்தே தெளிவான சிந்தனயுள்ளவர்களுக்கு மட்டும் சொல்லி விட்டோம் நாங்கள் யார் என்று.

நல்லது சொன்னா பொல்லாப்பா ஆயுடுதும்மா...தன்னிலையை உணர்ந்து வாழ், பிறருக்காக அல்ல

கடைசியாக.....அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். கண்டிப்பாக அது சத்திய வார்த்தை தான். அதில் யாருக்கும் எந்த வித மாற்று கருத்து இல்லை.

அதேசமயம், அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளும் நீங்கள், உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் வரதட்சணை என்ற பெயரில் வீடு, நகை மற்றும் சீர் வகைகள் வாங்க மாட்டேன், கொடுக்க மாட்டேன், அப்படி எனக்கு எங்கள் வீட்டில் வாங்கினாலும் திருப்பி கொடுப்பேன், அந்த நாளை இன்றே அறுவித்து விடுகிறேன் என்று சொல்லுங்கள்.... எங்கள் பேறென்ன...... நாங்களே உங்கள் முன் நின்று விடுவோம். அது எந்த இடமாக இருக்கட்டும். (மன்னிக்க்கவும், நாங்களும் வாங்கி விட்டோம், அதே வரதட்சனையை எங்கள் பிள்ளைகளுக்கும் கொடுக்கப் போகிறோம்)

அதற்காக வாங்கின வரதட்சனையை எங்கள் பிள்ளைகளுக்கே கொடுக்கப் போகிறோம் என்று புதிய மார்க்கம் சொல்லிவிடாதீர்கள்.

எப்பொழுது வரதட்சனையை திருப்பிக் கொடுக்கப் போகிறீர்கள். ஈமெயில் பண்ணுக ப்ளீஸ் ( thuklaknews@gmail.com )

முகமது BIN துக்ளக் வாயிலாக

****துக்ளக் நியூஸ் குழுமம்*****

Abdul Wahab said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 11

நான் AAMF-ன் நிலைபாட்டை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன். மேலும் AAMF-ன் செயல் செயல்திட்டத்தின் வரைவு அறிக்கையை விரைவாக மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்த கோரிக்கை வைக்கிறேன். AAMF-ன் செயல் திட்டத்தில் உள்ள ஊடகப்பிரிவில் நமதூர் சகோதரர்களால் நடத்தப்பட்டுவரும் அனைத்து இணைய வலைப்பூ இயக்குனர்களையும், நமதூரில் தினசரி இதழ்களில் நிருபர்களாக பணி செய்யக் கூடியவர்களையும் இணைத்து இயங்கக்கூடிய வகையில் ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அதோடு அவர்களில் முழு முகவரியை தெரிவிக்காமல், புனைப் பெயர்களில் கருத்து, கட்டுரைகள் எழுதுபவர்களை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டுகோல் வைக்கிறேன். ஏன் என்றால் அல்லாஹ் குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்:

பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும்> மனிதர்களிலும் இருக்கின்றனர். அந்நாஸ் 114:4,5,6

ஆகவே AAMF-ன் ஊடக பிரிவில் செயல்பட கூடியவர்கள் அவர்களுடைய பெயர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் தங்கள் செய்திகளை பதியக்கூடியவர்களாக இருக்க ஏற்பாடு செய்வது வீண் குழப்பங்கள், சந்தேகங்கள் தவிர்க்க உதவும் என நினைக்கிறேன்.

Regard’s
Abdul Wahab
Mobile No. 050-9303738

திப்பு சுல்தான் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 12

ஹா...ஹா...

திப்பு சுல்தான் முதன் முதலில் சிரித்தது இந்த புனைபெயரில் ஒருவன் எழுதியதை வைத்துதான்.

உங்கள் திப்பு சுல்தான்

புனைபெயா்களில் ஒருவன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 13

அப்படியாயாயாயாயாயா

அப்துல் ஹமீது BIN சுல்தான் இப்ராஹிம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 14

இதற்கு இது பதில் இல்லையே......முகமது BIN துக்ளக். அவர்களே..

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 15

/// பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும்> மனிதர்களிலும் இருக்கின்றனர். அந்நாஸ் 114:4,5,௬ ///

மன்னிக்கவும். பதுக்கியிருக்கும் சந்தேகங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தான் துக்ளக் கொடுத்த கேள்விக் கனைகள். AAMF இறைவனால் படைக்கப்பட்ட முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டது. இறைவனால் நேரிடையாக வஹீ மூலம் அனுப்பப்பட்ட செயல்பாடுகள் அல்ல AAMF இன் செயல்பாடுகள்.

மனிதர்கள் தவறு செய்யக் கூடியவர்கள். என்பதும் இறைவனின் சொல். உங்கள் கூற்றுப் படி வீண் சந்தேகங்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு வேலை AAMF இன் செயல்பாட்டின் சந்தேகங்களை மக்களுக்கு தெளிவு படுத்தினால் மேலும் AAMF ஐ மெருகூட்டுவதாக இருக்குமே. வெவ்வேறு இயக்கங்களின் உள்ளவர்கள் கூட சந்தேகத்தின் இடமின்றி தானா முன் வந்து AAMF இல் செயல் வீரனாய் காட்சியளிப்பர்களே...
அது ஏன்... ABM இன் அபிமானிகள் கூட உறுதுணையாய் இருப்பார்களே...

இன்ஷா அல்லாஹ்....

துக்ளக்கின் கூற்று சரியாய் தவறா என்பது சில மாதங்கள் கழித்து தெரியும்.

AAMF அதிரை மக்களுக்கு ஒரு வரப்பிரச்சாதம். குறிப்பாக வெளிநாட்டில் இருந்து போருலீட்டுவர்களுக்கு

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.