அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Friday, December 2, 2011

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: விரைவில் மத்திய அரசு முடிவு !

புதுதில்லி,டிச.1:
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இடங்களிலேயே முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீட்டுச் சலுகையைப் பகிர்ந்து அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத் தெரிவித்தார்.
வெகு விரைவிலேயே இந்த உள் ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்கப்பட்டுவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.தில்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களிடம் வியாழக்கிழமை பேசுகையில் இதை அவர் தெரிவித்தார்.

27 சதவீதத்தில்: "இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இப்போது 27% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் பிற்பட்ட நிலைமையைக் கருதி அவர்களுக்கும் இதிலேயே உள் ஒதுக்கீடு அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. முஸ்லிம்களுக்கு இந்த 27 சதவீதத்தில் எத்தனை சதவீதம் உள் ஒதுக்கீடு தருவது என்பது குறித்துத்தான் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. மத்திய அமைச்சரவை வெகு விரைவிலேயே இது தொடர்பான முடிவை எடுத்துவிடும். எப்போது என்று இப்போது தெரிவிக்க முடியாது.
இரண்டரை ஆண்டுகள்: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளன. இதுவரை எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றினோம்இன்னும் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகள் எவ்வளவு என்று பரிசீலிக்க வேண்டிய நேரம் இது. இனி எஞ்சியுள்ளவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்ற நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.
முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என்று வாதிட்டாலும் கல்வி,வேலைவாய்ப்பில் அவர்கள் மிகவும் பின்தங்கியிருக்கும் நிலைமையைக் கருத்தில் கொண்டு,பிற்படுத்தப்பட்டவர்களாக அவர்களைக் கருதி இட ஒதுக்கீடு அளிப்பதில் தவறு இல்லை.

இட ஒதுக்கீடு என்பது சாதீய அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக என்பதை ஏற்றுக்கொண்டாலும்,முஸ்லிம்களின் நிலைமையை சச்சார் கமிட்டி போன்ற உயர் அமைப்புகளும் ஆராய்ந்து அவர்களுக்கென்று தனி திட்டங்கள் தேவை என்று அறிவித்துள்ள நிலையில் அரசு நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது.
தென் மாநிலங்களில்: ஆந்திரம்கர்நாடகம்கேரளம்தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டிலேயே முஸ்லிம்களுக்கும் தனி ஒதுக்கீட்டை அந்தந்த மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. எனவே அது எப்படி அமலாகிறது என்றும் ஆராய்ந்து வருகிறோம். அந்த அடிப்படையிலேயே இந்த இட ஒதுக்கீட்டை மேற்கொள்ள உத்தேசித்துள்ளோம்.

முஸ்லிம்களுக்கென்று ஏற்கெனவே ஒருவித இட ஒதுக்கீடு அமலில் இருந்தாலும் அது வலுவானதாக இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.முஸ்லிம்களுக்குள் சாதிகள் இல்லாமல் இருக்கலாம்,ஆனால் அவர்களுடைய பின் தங்கிய நிலைமையைக் கருத்தில்கொண்டே இட ஒதுக்கீடு பரிசீலிக்கப்படுகிறது.  

சாதி அடிப்படையிலான இந்த ஒதுக்கீடு நமக்குப் பொருந்தாது என்று நினைக்கும் முஸ்லிம்கள் இந்தச் சலுகையைப் பயன்படுத்தமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரையில் கட்டாயம் ஏதும் இல்லை. பொருளாதார ரீதியாக முஸ்லிம்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக இந்தச் சலுகையை அளிக்கிறோம். கருத்தொற்றுமை அடிப்படையில் இந்த வாய்ப்பை அளிக்கிறோம்.
உத்தரப் பிரதேச தேர்தலுக்காகவா ?

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு பொதுத்தேர்தல் நெருங்கி வருவதால்தான் முஸ்லிம் வாக்குகளைக் கவர இந்த இட ஒதுக்கீட்டுப் பரிசீலனை மேற்கொள்ளப்படுகிறதா என்று கேட்கிறீர்கள். உத்தரப்பிரதேசத்துக்கு தேர்தல் நெருங்கி வருவதால் மத்திய அரசு செயல்படாமல் இருந்துவிட வேண்டுமா என்ன ?
  
மக்களுடைய நன்மையைக் கருதி சிந்திக்க வேண்டியது எங்களுடைய கடமைஅதைத்தான் செய்கிறோம். சிந்திப்போம்அதன் வழி செயல்படுவோம்.
மாயாவதிக்கு அக்கறையாஉத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதிக்கு உண்மையிலேயே முஸ்லிம்கள் மீது அக்கறை இருந்தால் முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இதைப்போன்ற திட்டங்களை அவரே அமல் செய்வதை யார் தடுக்கிறார்கள்?' என்றார் சல்மான் குர்ஷீத்.

நன்றி : தினமணி
தகவல் : M. நிஜாமுதீன்  B.sc.

9 பின்னூட்டங்கள்:

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கள்ள வேசம் போடும் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம்...... இது போன்ற கவர்ச்சிகரமான செய்திகளுக்கு இந்த அரசாங்கத்தில் குறைவே கிடையாது....தாங்கள் குறிப்பிட்டுள்ளது போன்று உத்தரப்ரதேஷ முஸ்லிம்களை கவருவதற்காகவும் வரவிருக்கும் 5 மாநில சட்டமன்ற தேர்தலை நோக்கில் கொண்டும் தான் இந்த அறிக்கை.... அறிக்கை விடும் சல்மான் குர்ஷி லாவகமாக நாள் குறிப்பிடாமல் தன் கயமை தனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.... நமதூர் ரயில் போன்று தான் இந்த நிலைமையும்... பி ஜெ பி வெளிப்படையாக நம்மை ஏமாற்றுவான் இவர்கள் கூடயிருந்து குளிபரிப்பார்கள்...... மொத்தத்தில் இருவரின் நோக்காமும் ஒன்று தான்.

அதிரை நியூஸ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் முஸ்லிம்களின் இட ஒதூக்கீடு நிறைவேறியே தீரும். இனியும் சிறுபான்மையாக உள்ள முஸ்லிம்கள் ஏமாற மாட்டார்கள்

அபூபக்கர்-அமேஜான் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இன்ஷா அல்லாஹ் விரைவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க இறைவனிடம் துஆ செய்வோமாக. மத்திய அரசு இட ஒதிக்கீட்டை பற்றி விரைவில் அறிவிப்பு செய்ய போவதாக செய்தித் தாளில் வந்து விட்டது என்று பொடுபோக்காக இருக்காமல் அதற்கு தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போ தான் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும்.

Adirai Iqbal said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

/ முஸ்லிம்களை கவருவதற்காகவும் வரவிருக்கும் 5 மாநில சட்டமன்ற தேர்தலை நோக்கில் கொண்டும் தான் இந்த அறிக்கை.... அறிக்கை விடும் சல்மான் குர்ஷி லாவகமாக நாள் குறிப்பிடாமல் தன் கயமை தனத்தை வெளிப்படுத்தியுள்ளார்....//
சரியாக சொன்னீர்கள் . அப்படிக்கொடுத்துவிட்டாலும் பி ஜே பி குரங்குகள் சும்மா இருக்காது . இது தேச விரோதமான செயல் என்றும் மதமாற்றத்தை ஊக்குவிக்கும் செயல் என்றும் கூக்குரல் இடுவார்கள் . மேலும் இத்தகைய ஜனநாயக (?!) அமைப்பில் இதெல்லாம் ஏமாற்றுவேலை .அனைத்தையும் தனியார்க்கு கொடுத்துவிட்டு இடஒதுக்கீடு கொடுக்கப்போகிறார்கலாம்.ஒருவேளை கொடுத்துவிட்டால் ஒரே ஒரு நன்மை மட்டும் இருக்கிறது .இனி சமுதாய (?) அமைப்புகள் எங்களால்தான் இட ஒதுக்கீடுகொடுத்தார்கள் என்று அக்கப்போர்களை நடத்திடலாம்

பாத்திமா ஜொஹ்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இது ஒரு ஏமாற்று வேலை

வளர்பிறை said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வழக்கம் போல் தேர்தல் நேரத்தில் முஸ்லிம்களுக்கு கொடுக்கப்படும் போலியான வாக்குறுதி!

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தினமணியின் தலையங்கம் ஏதோ முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருப்பது போல், இப்போது ஆட்சிக் கட்டிலில் இருக்கும் காங்கிரசும் முஸ்லிம்களுக்கு ஒன்றும் செய்து விடப் போவதில்லை என்பது போல் முஸ்லிம்களை குழப்ப முயற்ச்சித்து, நிறைய நச்சுத்தன்மையை (எல்லா வரியிலும்) பதிந்திருக்கிறது.

சின்ன உதாரணம் //''முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது (கொடுக்கவே கூடாது என்பதை ஆணித்தரமாக பொதுவான மக்கள் மனதில் பதிய வைக்க) என்று வாதிட்டாலும் (இதை யார் வாதிட்டது?) கல்வி,வேலைவாய்ப்பில் அவர்கள் மிகவும் பின்தங்கியிருக்கும் நிலைமையைக் கருத்தில் கொண்டு,பிற்படுத்தப்பட்டவர்களாக அவர்களைக் கருதி (முஸ்லிம்கள் எதற்கும் பயன்படமாட்டார்கள், அவர்கள் ஒரு உதவாக்கரை, அவர்கள் கடைசி பிரிவினர்) இட ஒதுக்கீடு அளிப்பதில் தவறு இல்லை.//

வாழைப்பழத்தில் விஷ ஊசி ஏத்துவதை (தினமலர்) கேள்விப்பட்டிரிக்கிறோம், ஆனால் வாழத்தண்டில் (தினமணி) விஷ ஊசி ஏத்துவதை இப்போதுழுதான் புரிய ஆரம்பித்தது.

இப்படி ஒவ்வொரு வரியிலும் முஸ்லிம்களுக்கு எந்த வகையிலும் இட ஒதிக்கீடு கூடவே கூடாது என்பதுபோல் கங்கணம் கட்டியுள்ளது.

முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் காங்கிசுக்கும் பிஜேபி க்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

பிஜேபி : முஸ்லிம்கள் நம் நாட்டை விட்டே ஓடிவிட வேண்டும்

காங்கிரஸ் : முஸ்லிம்கள் நாட்டில் இருந்தால்தான் ஒட்டு வாங்க முடியும்

பிஜேபி : முஸ்லிம்களுக்கு இட ஒதிக்கீடு கூடவே கூடாது

காங்கிரஸ் : முஸ்லிம்களுக்கு இட ஒதிக்கீடு கொடுத்தால்தான் அவர்கள் எழுந்தவுடன் நாமளும் உட்கார்ந்துடலாம்.

பிஜேபி : அந்நிய கொள்கையை (யூதகொள்கையை) நடுத்தர மக்களை விஷமூட்டுகிறது.

காங்கிரஸ் : அந்நிய முதலீடு, மன்றும் பெண்மணியை வைத்து ஆட்சி செய்கிறது.

பிஜேபி : பாபர் மசூதி வேண்டாம், ராமர் கோவில் வேண்டும்.

காங்கிரஸ் : இரண்டும் இருந்தால் தான் ஆட்சியில் இருக்கலாம்.

பிஜேபி : மோடி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி (பாசிஸ்ட்) போன்றோர்கள்தான் பிரதமராக வேண்டும்.

காங்கிரஸ் : ராகுல் காந்தி, ப்ரியகா காந்தி தான் பிரதமர் (இப்பொழுது மன்மோகன் வீட்டுப் பாடம் (டியூஷன்) நடத்திக்கொண்டிருக்கிறார்)

"நம்ம முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களுக்கு இட ஒதிக்கீடு வேண்டும், வேண்டும்" என்று சொல்லி சொல்லியே..... அவர்களுக்கென்று நல்ல அழகான இடத்தை பிடித்துவிட்டார்கள். பாருங்கள் முந்தய 15 வருட போராட்டம். "நாங்கள் நேரம் காலம் பாக்காமல் இவர்கள் பின்னால் நின்று கோஷம் போட்டும், இட ஒதிக்கீடு....... ம்ஹும்.... மிஞ்சியது வீட்டில் குட்டுப்பட்ட சோறு.

பாசிஸ்ட்டு, காவிக்கொள்கைப் போன்ற கொள்கையுடைய பிஜேபி போன்றவர்களை யாருக்கும் தெரியாமல் காங்கிரஸ் கட்டி அனைத்தாலும், வலுவான ( சொத்துக்காக அண்ணன் தம்பி சண்டை) முறையில், கடுன்சினத்தோடு எதிர்க்கக் கூடிய ஒரே கட்சி இந்தியாவில் காங்கிரஸ் மட்டும்தான். இன்றைய இந்தியாவில் அது மட்டும் தான் முஸ்லிம்களுக்கு ஒரு சிறிய ஆறுதல்.

நாம் மூன்றாம் அணியை நம்பிவிட வேண்டாம்.
சிவன் பக்தரான வி.பி.சிங்., வெறும் இரண்டே MP சீட்டை வைத்திருந்த ராம பக்தர்களை 73 மாதங்கள் ஆட்சிக் கட்டிலில் வைத்து அழகு பார்த்தவர்.

*****துக்ளக் நியூஸ் குழுமம்*****

அதிரை நியூஸ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இந்தியாவில் ஏறக்குறைய 20 % முஸ்லிம்கள் உள்ளனர். அவர்களுக்கு 10 % இட ஒதுக்கீடு கொடுப்பதன் மூலம் அவர்களை பின் தங்கிய நிலையிலிருந்து காப்பாற்றலாம்

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும்
எத்தனை கமிசன்கள் அமைத்து முஸ்லிம் நலன்கள் குறித்து கணக்கு எடுத்தாலும் முஸ்லிம்களின் பாதிப்புகள் குறித்து கண்டுபிடித்து வெளிக்கொண்டு வந்தாலும் ( சச்சார் கமிசன் , கிருஷ்ணா கமிசன் ) ஆளக்கூடிய அரசுகள் நேர்மையாக செயல் பட்டால்தான் நீதி கிடைக்கும். அவர்களுக்கு ஓட்டும் பதவியும் தான் முக்கியம் - எனவேதான் முஸ்லிம்கள் ஏமாற்றப் படுகிறார்கள் .முஸ்லிம்கள் விழிப்படைந்து முஸ்லிம்கள் ஒட்டு முஸ்லிம்களுக்குதான் என்று வராதவரை இப்பிரச்சனை தீராது. யார் பூனைக்கு மணிகட்டுவது?

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.