அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Thursday, December 8, 2011

அதிரையில் உள்ள ரேஷன் கடைகளில் முறைகேடா ?



நமதூரில் ஏறக்குறைய 10 ரேஷன் கடைகள் உள்ளது. தமிழக அரசால் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் நியாய விலைகளில் சீனி, மண்எண்ணெய், இலவச அரிசி, சமையல் எண்ணெய், உளுந்து, பருப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கின்றன.


ரேஷன் கடைகளில் இருக்க கூடிய விற்பனையாளர்கள் நாம் கேட்கக்கூடிய பொருள்கள் ஸ்டாக் முடிந்துவிட்டது என்று சொல்கிறாரா ? உண்மையிலே ஸ்டாக் தீர்ந்து விட்டதா ? இதன் உண்மை நிலவரத்தை நாம் தெரிந்து கொள்ள கீழ் கண்ட முறையை பின்பற்றி அறிந்து கொள்ளலாம்.
உங்க மொபைல் ல இருந்து [ PDS ] [ மாவட்டகுறியீடு எண் ] [ கடைஎண் ] //உதாரணத்துக்கு PDS 18 GC022 ( இங்கே 18 தஞ்சாவூர் மாவட்ட எண், GC022 கடை எண் ) அப்படின்னு டைப் பண்ணி 9789006492, 9789005450 இந்த ரெண்டு நம்பர் ல எதாச்சும் ஒண்ணுக்கு அனுப்புங்க. உங்களுக்கு தகவல் உடனே கிடைக்கும். # ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்குள் அனுப்ப முயற்சி பண்ணுங்க.

குறிப்பு : தங்களின் குடும்ப அட்டைகளின் முதல் பக்கத்தில் மாவட்ட குறீயீடு மற்றும் கடை எண் உள்ளது.

ரேஷன் கடைகளில் நடைபெறுகிற முறைகேடுகளை கீழ் கண்ட முறையில் ஆன்லைனில் நமது புகார்களை பதிவு செய்யலாம்.



1. இதற்க்கு முதலில் http://ccsconsumers.tn.nic.in/ccs_consumers/jsp/public_grievance.jsp இந்த லிங்கில் செல்லுங்கள்.
2. அதில் Consumer Complaints Related to PDS ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள்.
3. அதில் தங்களின் குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட, ரேஷன் கடை சம்பந்தப்பட்ட அல்லது மற்றவை எதுவாகிலும் அதை தேர்வு செய்து அதில் நம்முடைய புகார்களை தாக்கல் செய்துகொள்ளலாம்.
4. சகோதரர்களே, புகார்களில் பதியும் தங்களின் முகவரி தொடர்புகள் உண்மையானதாக இருக்க வேண்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம்.


மேலும் நமது புகார்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லலாம்.


தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் :-
மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி ( DSO )
Tel : 04362 231336
Mobile : 9445000286
E-mail :
dso.tnj@tn.gov.in மற்றும் dso.tntnj@nic.in

பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகம் :-
உணவு வழங்கல் அதிகாரி ( TSO )
Tel : 04373 235049
Mobile : 9445000293
E-mail :
tsotnj.patukottai@tn.gov.in

மேலே குறிப்பிடபட்டுள்ள அதிகாரிகளிடம் புதிய குடும்ப அட்டைக்கு பதிவு செய்தல், முகவரி மாற்றம் செய்தல், பெயர் திருத்தம் செய்தல், புதிய நபர்களின் பெயர் சேர்த்தல் மற்றும் ரேஷன் கடையை ஒரு தெருவில் இருந்து மற்றொரு தெருவில் உள்ள கடையில் பொருள்கள் வாங்க மாற்றம் செய்து கொள்ளுதல் போன்றவை தொடர்பாகவும் முறையிடலாம்.


இறைவன் நாடினால் ! அடுத்த பதிவில் “ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை “ பற்றி விளக்கமாக எளிய வடிவில் பார்ப்போம்.


அன்புடன்,
M. நிஜாமுதீன் B.sc.
( 9442038961 )







9 பின்னூட்டங்கள்:

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இவரு என்ன நிஜாமுதீன்....
ஒருநாள் முதல்வர்மாதுரி.....
புதுசு புதுசா மக்களுக்கு தெரியாத விஷயங்கள.....
சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாரு.....
ரேஷன் கடை உத்தியோகத்துக்கு வர்றதே
அப்பேக்கப்போ ஆட்டைய போடுறதுக்குத்தான்......
இவேறென்ன நிஜாமு....நமக்கு
மொட்டாய போட்டுருவார்போல.....
என்னங்கய்யா..எங்க பொழப்பு நாரிடும்போல....
இனிமே தினமலம் பேப்பர படிக்காம BBC ஐ படிச்சி
பேசாம நாம துபாய் கிபாயி போய்டலாம்...

கலெக்ட்டர் அய்யா... நிஜாம் அண்ணே உங்களுக்கு நிறைய வேல வச்சிட்டாரு.....

நிஜாம் அவர்களின் பனி மென்மேலும் தொடர "துக்ளக் நியூஸ் குழுமம்" வாழ்த்துகின்றது.

அதிரை நியூஸ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இது ஒரு முக்கியமான பதிவு. அதிரையில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருள்களை எடை செய்யும் பொழுது மோசடிகள் நடக்கிறது. மேலும் ரேஷன் கடைகாரர்களே இலவச அரிசிகளை கூடுதல் விலைக்கு விற்று விடுகிறார்கள். மக்களிடையே விழிப்புணர்வுடன் இருந்து அதிகாரிகளிடம் புகார் செய்ய முன்வர வேண்டும்.

அபூ இஸ்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நியாய விலைக்கடைகளில் ( அத்தான்ப்பா ரேஷன் கடை ) இருக்கிற அங்கிள்கள், இவர்கள் வைத்திருக்கக்கூடிய தராசு மற்றும் லிட்டர் குவளைகள் மற்றும் இவர்கள் அளந்து கொடுக்ககூடிய முறைகளை கண்காணிக்க வேண்டும். ஊரில் இளைஞர்களை திரட்டி ‘ பறக்கும் படை ‘ ஓன்று அமைத்து அவர்களுடைய முறைகேடுகளை தடுக்கலாம்.

Adirai Community said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அது சரி.... ரேஷன் கடையே ஒரு மெம்பரின் வீட்டில் இருந்தால் அதற்கு என்ன பெயர்? அதுவும் மூட்டை மூட்டையாக!!!!!!!!!

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates
This comment has been removed by a blog administrator.
Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும்
மிகவும் தேவையான செய்தி. ஆனால் இந்த அளவுக்கு ஏழை, நடுத்தர மக்களிடம் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அவர்கள் இத்தகைய நடவடிக்கையை எப்படி எடுப்பார்கள் என்பதை அனைவரும் யோசிக்க வேண்டும். இதனால் வார்டு மெம்பர்கள் இதனை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு தக்க உதவி புரிந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

/// அது சரி.... ரேஷன் கடையே ஒரு மெம்பரின் வீட்டில் இருந்தால் அதற்கு என்ன பெயர்? அதுவும் மூட்டை மூட்டையாக!!!!!!!!! ///

"காசு பணத்துக்கு நாட்டக்காரன்"
"காவலுக்கு கெட்டிக்காரன்"

என்று பெயர் வைக்கலாம்

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிகச்சிறந்த தகவலுக்கு நன்றி.... இதனை மக்கள் அதிகம் பயன்படுத்தி முறைகேடுகளை கலையை வழிவகுக்க வேண்டும்.... மக்கள் விழித்திருந்தால் தான் நிர்வாகம் தலைக்கும்.....அரசாங்க அதிகாரிகள் நமக்காக தான் வேலை செய்கிறார்கள் என்பதை அவர்களுக்கும் உணர்த்த வேண்டும்.

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இது போன்ற தகவல்கள் தந்து - மக்களை உசுப்பேத்தும் சகோ நிஜாமைப் பாராட்டுகிறேன்.அதிரையின் உண்மை மீடியா நீங்கள்தான்.தொடருங்கள்

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.