அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Friday, December 2, 2011

அதிரையில் நிலத்தின் அரசு மதிப்பீடு உயர்வு !




நிலத்தை வாங்கும்போது பத்திரப்பதிவு அலுவலங்களில் அந்த ஆவணம் பதிவு செய்வது உண்டு. அப்போது அந்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பீட்டின்படி ( GUIDELINE VALUES ) முத்திரைத்தாள் கட்டணத்தை பத்திரப்பதிவு அலுவலங்களில் அந்த நிலத்தை வாங்குபவர் செலுத்த வேண்டும்.


தமிழ் நாடு முழுவதும் நிலத்தின் தற்போதைய மதிப்பீட்டுக்கு ஏற்ப வழிகாட்டும் மதிப்பீட்டை மாற்றி அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக பத்திரப்பதிவு அதிகாரிகள் அவர்களுக்கு உரிய பகுதிகளுக்கு சென்று வழிகாட்டும் மதிப்பீட்டை அறிந்து புதிய பட்டியல் தயாரித்துள்ளனர்.
அவ்வாறு தயாரிக்கப்பட்ட பட்டியலில் அதிராம்பட்டினத்தில் உள்ள ஒவ்வொரு தெருவின் மதிப்பீடுகளும் பல மடங்குகளாக உயர்த்தி நிலத்தின் ஒரு சதுர அடியின் விலை கீழ்க்கண்டவாறு நிர்ணயம் செய்துள்ளார்கள்.


ஆலடித் தெரு.............ரூ 250
பிலால் நகர்…….......…. ரூ 150
ஆறுமுக கிட்டங்கி தெரு…....……..ரூ 150
ஆதம் நகர் ( M.S.M NAGAR மற்றும் K.S.A LANE உள்ளடக்கிய ).……..ரூ 100
செட்டித்தெரு………..…ரூ 500
ஹாஸ்பிட்டல் ரோடு……………ரூ 500
காட்டுபள்ளிவாசல் தெரு…....…..ரூ 250
வெற்றிலைக்காரத் தெரு......................ரூ 200
சின்ன நெசவுக்காரத் தெரு………ரூ 250
ஹாஜா நகர்…………………ரூ 150
கடற்கரைத் தெரு..............ரூ 250
தரகர் தெரு.................ரூ 300
பாத்திமா நகர்………………ரூ 100
காலியார் தெரு……………ரூ 150
மேலத்தெரு……………………ரூ 200
மேலத்தெரு (சவுக்கு கொல்லை).............ரூ 250
பெரிய நெசவுக்காரத் தெரு……..….ரூ 250
நடுத்தெரு…………………ரூ 300
செக்கடி தெரு..............ரூ 250
சேது ரோடு.................ரூ 400
தட்டாரத் தெரு.................ரூ 300
வண்டிப்பேட்டை....................ரூ 200
புதுத் தெரு……..……….ரூ 300
புதுமனைத் தெரு………………….ரூ 500
புதுக்குடி நெசவுக்காரத் தெரு……………..ரூ 100
கீழத் தெரு..................ரூ 200
சால்ட் லேன்………………………ரூ 200

ஏற்கனவே நமதூரில் மனைகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதில் பத்திரப்பதிவுக்காக செய்யப்படுகிற செலவுகளும் உயர்ந்தால் பாதிக்கப்படுவது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தான். அவர்கள் நிலம் வாங்கி அதில் ஒரு வீடு கட்டி குடியேறும் திட்டம் வெறும் கனவாகவே அமைந்துவிடும் சூழல் உள்ளது.

மேற்கண்ட பட்டியலை பார்த்து மக்கள் சொல்லும் கருத்தையும் கேட்டு பத்திரப்பதிவு அதிகாரிகள் அதை அரசிடம் தெரிவித்து அரசின் ஒப்புதல் பெற்று இறுதி கட்டணம் நிர்னையிப்பார்கள். ஆகையால் நமது சமுதாய மக்களின் நலனை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட சம்பத்தப்பட்ட அதிகாரிகளுக்கு தங்களின் கோரிக்கையை தங்களால் இயன்றளவு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பும்படி அனைத்து சகோதரர்களிடமும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மின்னஞ்சல் முகவரிகள் :-
E-mail : digrthanjavur@tnreginet.net
E-mail : dropattukkottai@tnreginet.net
E-mail : sroadhiramapattinam@tnreginet.net

மக்களின் சார்பாக,
M. நிஜாமுதீன் B.sc.
( 9442038961 )

10 பின்னூட்டங்கள்:

சேக்கனா M. நிஜாம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

கீழ் கண்ட தெருக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது.

செட்டி தோப்பு.......ரூ 500
ஹாஜியார் லேன்..........ரூ 200
கரையூர் தெரு................ரூ 250
வள்ளியம்மை நகர்.............ரூ 100
மதுக்கூர் ரோடு................ரூ 200
மரைக்காயர் லேன்.............ரூ 300
பழஞ்செட்டித்தெரு........................ரூ 500
பழஞ்செட்டித்தெரு கீழ் பக்கம்.............ரூ 200
பட்டுக்கோட்டை ரோடு.........ரூ 300
சாயக்காரத் தெரு............ரூ 200

அபூபக்கர்-அமேஜான் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

ராஜாமடம் ரோடு, முத்துப்பேட்டை ரோடு, ஏரிபுரைக்கரை, சுரைக்கா கொள்ளை மற்றும் எஸ்.ஏ.எம்.நகர் இந்த நகர்களுக்கு எல்லாம் அரசு அறிவித்த நிலத்தின் உயர்வு எவ்வளவு.நீங்கள் குறிப்பிட்டதில் இந்த இடங்கள் விடுபட்டு இருக்கிறது என்று நினைக்கிரேன்.

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

அஸ்ஸலாமு அலைக்கும்
//ஏற்கனவே நமதூரில் மனைகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதில் பத்திரப்பதிவுக்காக செய்யப்படுகிற செலவுகளும் உயர்ந்தால் பாதிக்கப்படுவது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தான். அவர்கள் நிலம் வாங்கி அதில் ஒரு வீடு கட்டி குடியேறும் திட்டம் வெறும் கனவாகவே அமைந்துவிடும் சூழல் உள்ளது//

பெண்களுக்கு வீடு கொடுக்கும் நிலை நம் ஊரில் தொடர்வதாலும் ஒரு பெண்ணுக்கு ஒரு வீடு என்பதாலுமே இந்நிலை. வெளி ஊர்களில் கீழே ஒரு பெண்ணுக்கும் மாடியில் ஒரு பெண்ணுக்கும் என்று கொடுத்து விடுகிறார்கள் . நாமும் இவ்வாறு செய்தால் இந்த நிலையை ஓரளவு சமாளிக்கலாம்.

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

பாரபட்சமாக இருக்கிறது

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 5

ஜெயாவின் காட்டாச்சி தர்பாரில் மற்றுமொரு மைல் கல்..... இன்னும் எத்தனை வேதனைகள் நம்மை சூழும் என்பதை அல்லாஹ் மற்றுமே அறிவான்.... அய்யா வந்தாலும் அம்மா வந்தாலும் மக்கள் பாடு அதே கதி தான்..... காந்தியடிகள் சொன்னது போல் உமர் (ரலி) அவர்களின் ஆட்சி மலர்ந்தால் தான் மக்களாட்சியின் மகத்துவம் புரியும்.

அதிரை நியூஸ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 6

இதனால் ரியல் எஸ்டேட் தொழில் முழுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 7

தெருவுக்கு தெரு விலையேற்றம் என்பது ஏற்க்கத்தக்காத ஒன்று.

ஊர்வாரியாக அல்லது ஏரியா வாரியாகத்தான் இது செய்யப்படவேண்டும்.
தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை என்பதுப் போல் திட்டமிட்டு செய்யப்பட்டதாகும். இது ஒட்டு மொத்த அதிரை மக்களின் பெற்றோர்களை கடுமையாக காயப்படுத்தி இருக்கிறது.

இது நிலபதிவு பத்தர "விலையேற்றம்" என்வதை விட, "சதி" என்பதைவிட "கருவறுப்பு" என்றே சொல்லலாம். நிச்சயம் இதில் சார்ப் பதிவாளர் பங்கு என்பதை விட பஞ்சாயத்தில் உள்ளவர்களின் பங்கு கடுமையாக இருக்கும். அவர்களுடைய நேர்முக யோசனை இல்லாமல் இது செயல் படுத்த முடியாது.

நாம் எல்லாவற்றையும் முதல்வர் தலைலே போடக் கூடாது. அவர்களுக்கு எப்படி ஊர் நிலவர தகவல் கொடுக்கப்பட்டதோ அதை வைத்துதான் தனது கோப்பில் பதிவு செய்வார்கள்.

அதானா நம்ம தலைவர்களெல்லாம் தேர்தல் அறிக்கையை விட்டு விட்டு கொஞ்சம் கூடுதலா பிசியாக இருந்தார்களா...
ஒரு வேலை உளறித் தள்ளி இருப்பார்களோ??? ( un matured )

இனி வரக்கூடிய காலகட்டம்.....

1 அந்தக் காலத்தில் அரண்மனை, கோட்டை, நினைவிடம் (தாஜ்மஹால்) கட்டுவதா இருந்தால் வெள்ளக் கரு முட்டையை சாந்தில் கலந்து கட்டுவார்கள். அப்படி செய்தால் பல நூறு ஆண்டுகள் பழுதடையாமல், அதே சமயம் வழவழப்பாகவும் இருக்கும். மார்பல் போல. அதனால் இந்த நில பத்திரப் பதிவு விலே ஏற்றத்தால் மறுபடியும் அந்த நிலைக்கு வந்து விடலாம். (மெம்பர் கொஞ்சம் கோழி பிசினெஸில் பிசியாக இருப்பார்)

2 வரதட்சனையை பத்திரப் பதிவு சிலவில் கழித்துக் கொள்ளலாம்.

3 வீடை பெண் பேருக்கு மாற்றியப் பின் வந்து மாப்பிள்ளை பேசுங்கள்.

4 வீட்டை விட்டு ஓடிப் போவது குறைத்துவிடும் (ஏண்டா நீ பெருசா கூட்டிக்கிட்டு போனியே... அவ பேர்ல வீடு இருக்கான்னு நீ கொஞ்சமாவது யோசிச்சியாடா...சனியனே என்மூஞ்சிலேயே முழிக்காதே..)

5 குறைந்தது 300 நில ப்ரோக்கர்மார்கள் சவூதி, துபாய் போய்விடுவார்கள். ( அய்டாவும், AAMF இவர்களை அரவனைக்கணும்)

6 அல்அமின் பள்ளிக்கு வழி கிடைத்துவிடும், யார் பத்திர பதிவு சிலவை ஏற்ப்பது.

"மோடி அண்ணே.... நீங்க கொடுத்த ஐடியா அதிராம்பட்டினம் வரை ஒர்கவுட்டாயிடுச்சு",

வேறென்ன ஜெயா தங்கச்சி, அதனால்தான் குஜராத் வர்த்தகத்துல இந்தியாவின் முதல் இடத்துல இருக்கு. (இது செல்வந்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, நடுத்தெர-அடிமட்ட ஏழைகளை கடைசிவரையிலும் ஏழையாக வைத்து அடிமைத்தனத்தை தூண்டுவது.)

Shameed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 8

இதில் இஸ்லாமியர்களுக்கு ஒரு சலுகை உண்டு ஹிப்பத் என்று சொல்லப்படும் பத்திர பதிவு இதற்க்கு GUIDELINE VALUES தேவை இல்லை ரெத்த சொந்தங்களுக்கு சொத்து பரிவர்த்தனை செய்து கொள்ள நாம் சார் பதிவு அலுவலகம் போகவேண்டிதில்லை ஒரு நோட்ரிக் ( வக்கீல் முனாப்) வக்கிலிடம் போய் மகளுக்கோ மகனுக்கோ நம் சொத்தை கொடுப்பதற்கு ஹிப்பத் என்று சொல்லக் கூடிய பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் இதற்க்கு அதிகபட்சமாக 5000 ரூபாய் போதுமானது அது எத்தனை பெரியா சொத்தாக இருந்தாலும் ரெத்த சொந்தங்களுக்கு மாற்றிக்கொள்ளலாம்

சேக்கனா M. நிஜாம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 9

சலாம் சகோதரர் சமீது அவர்களே,

ஹிப்பத் மூலம் பெறப்படுகிற பத்திரத்தைக் கொண்டு பட்டா மாற்றுதல் தற்போது மிகவும் சிரமமாக உள்ளது.

அபூபக்கர்-அமேஜான் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 10

ஹிப்பத் மூலம் முஸ்லிம்களுக்கு சலுகைகள் பற்றி சமீத் மிக அழகாக விளக்கியிருக்கிறார். இனிமேல் எல்லா வற்றிக்கும் சிரமும் தான் இதில் ஏழைகளும் நடுத்தர மக்களும் தான் பாதிக்கப்போகிரார்கள்.மாடியில் ஒரு பிள்ளைக்கும், கீழே ஒரு பிள்ளைக்கும் கொடுத்தால் மிக நன்றாக இருக்கும். இதை நம்ம ஊரில்கொண்டு வருவதற்கு இப்போ உள்ள இளைங்கர்கள் முயற்சி செய்யணும் அப்படி செய்தால் இன்ஷா அல்லாஹ்
நிச்சயம் முடியும் அவர்களால் முடியாதது கிடையாது.அப்போ தான் பத்திர செலவுகளை குறைக்கலாம் இல்லா விட்டால் இன்னும் செலவுகள் அதிகமாக தான் போகும்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.